எங்கள்Blog இல் கேட்டுவாங்கிப்போடும் கதையாக இந்த செவ்வாயன்று நௌஷத் கான் என்பவர் எழுகிய கதை ஒன்று வெளியாகியிருந்தது. உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்று சொல்வார்கள் இல்லையா? இந்த வீடியோவைப் பாருங்கள்!
சென்னை பிரெஸ் கிளப்புக்கென்றே தேடி வருகிற வழக்கமான அக்கப்போர்களிலிருந்து விலகி கொஞ்சம் வித்தியாசமான நேர்காணல் இது. அல்லது ரெட் பிக்ஸ் தளத்துக்கென்றே கிடைத்த வினோதமானதாகக் கூட இருக்கலாம்! எங்கள் பிளாகில் கதைபடிக்கிற, அதன்மீது கதைக்கிற நண்பர்களாக இருந்தாலும்சரி, நேரடியாக இங்கே வந்து வாசிப்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த நேர்காணல் வெளிப்படுத்தும் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!
விஜய் சேதுபதி கொஞ்சம் வித்தியாசமான மனிதராக இருக்கிறார். ஊடகங்களைக் கையாளுவதில் அவருடைய தனித்துவம் வெளிப்பட்ட நேர்காணலாக இது இருக்கிறது.
சென்னைப் பத்திரிகையாளர்கள் சுத்த சோப்ளாங்கிகள் தானோ என்கிற சந்தேகம் சமீப காலமாக எந்தவொரு முன் தயாரிப்புமே இல்லாமல், வறட்டுத்தவளைகள் போல பேட்டியில் கூவுவதைத் தவிர, கொஞ்சம் ஏமாந்தால் மேலே விழுந்து பிராண்டுகிற பூனைகளாக இருப்பதைக் கவனித்து வருவதில், விஜய் சேதுபதி அதற்கெல்லாம் இடம்தராமல் பேட்டியை நகர்த்திக் கொண்டுபோகிற சாமர்த்தியத்தை, அதையும் சினேகிதப்பூர்வமாகச் செய்வதைப் பார்த்து உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.
ராகுலை மிகவும் பிடித்து போன தருணம் அல்லது ராகுல் ஏன் வருங்கால தலைமுறைகளுக்கான ஆதர்சம்:
ஸ்ரேஷ்டபாரதம் என்கிற நிகழ்ச்சி அமிர்தா டிவியில் ஒளிபரப்பாகிறது. எழுத்தச்சன் ராமாயணத்திலிருந்து ஒரு ராமாயண செய்யுளை கொடுக்கிறார்கள். அதற்கு அதில் பங்கு பெறும் பள்ளிக்கூட மாணவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். விளக்கமென்றால் அப்படி ஒரு அட்டகாசமான ஆழமான விளக்கம். சிறுவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ராமாயணத்தில் இருக்கும் அற்புதமான அறிவு அபாரம். வெறும் மனப்பாட அறிவல்ல. அதைத்தாண்டி தார்மிக சிந்தனையையும் அந்த மாணவர்கள் வெளிக்காட்டுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் எனும் சிறுவனின் விளக்கம் பிரமாதம். ’நம் சனாதன தர்மத்தில் ஏக தேவ வணக்கம் இல்லை ஏக சைதன்யம் என்பதே இங்கு உள்ளது’ என்கிறான். கம்ப ராமாயணத்துக்கும் இப்படி தமிழ் மாணவர்கள் விளக்கம் கூற அதை கேட்கும் நாள் எந்நாளோ? அப்படி ஒரு டிவி நிகழ்ச்சியை பார்க்கும் நாள் எந்நாளோ? 12:40 இல் இருந்து காணொளியை பார்க்கவும்.
வீடியோவைப் பார்த்தபிறகு அரவிந்தன் நீலகண்டன் ஒரு எழுத்துக் கூட மிகையாகச் சொல்லவில்லை என்பது நன்கு விளங்கியது. அவர் ஏங்கியதைப்போல கம்பராமாயணத்தை நம்முடைய இளஞ்சிறார்களும் பயின்று இதே போலப் பொருள் சொல்லும் நாள் என்று வருமோ என்ற ஏக்கம் என்னையும் தொற்றிக் கொண்டது.
மீண்டும் சந்திப்போம்.
முதல் கதை - இதற்கு பின்கதை வேறு இருக்கணும். பசங்களை வாழவிடாமல் செய்யும் பெற்றோர் அபூர்வம்தான்.
ReplyDeleteராஜமுந்திரி வாராங்கல் பகுதிகளில் பெற்றோர்களே தங்கள் பெண்களை முடிந்தால் சினிமா இல்லையானால் விபசாரத்தில் தள்ளுகிற செய்திகளை படித்ததில்லையா? நடிகை பானுப்ரியா கூட அதேமாதிரி பெற்றோர்களால் துயரப்பட்டுக் கடைசியில் ஏவிஎம் ஸ்டூடியோவில் அடைக்கலம் புகுந்த கதைகூட உண்டே!
Deleteநான் சினிமா நடிகைகளைப் பற்றிச் சொல்லலை. அவங்க வாழ்க்கை பரிதாபம்தான். இதில் விதிவிலக்கு என்று பார்ப்பதே மிக மிகக் கடினம். அனேகமா எல்லோரின் வாழ்க்கையும் பரிதாபம்தான். இதைப் பற்றி நிறைய எழுதலாம் (புத்தகங்களில் படித்ததை வைத்து)
Deleteஆர்வி என்கிற ஆர் வெங்கட்ராமன் எழுதிய திரைக்குப் பின் நாவல் படித்திருக்கிறீர்களோ நெல்லை?
Deleteபடித்திருக்கிறேன். அது அந்த நாளைய சுதேசமித்திரன் இதழில் வெளிவந்தது.
Deleteநானும் பள்ளிநாட்களில் புத்தகமாகப் படித்த கதை சார்! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும், சினிமா ஆசையில் கணவன் குழந்தையை விட்டுப்பிரிகிற கதாநாயகி, பாமினி என்று நினைவு, கதையின் அவுட்லைன் இன்னமும் நினைவில் இருக்கிறது சார்!
Deleteஇங்கே திருமணமாகிக் குழந்தையுடன் சினிமாவுக்கு வந்த இரு பிரபலங்கள் சௌகார் ஜானகியும் ஆச்சி மனோரமாவும்! கணவன் சரியில்லாமல் சர்வைவலுக்காக வந்ததாகச் சொல்வார்கள்.
துபாய் - கிளப் டான்சர் - இதனைப்பற்றி நான் அறிவேன். பெரும்பாலும் சினிமாவில் இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ளவர்களும் ஹீரோயின் கனவில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் இப்படி இறக்கிவிடப்படுவர். ஆனால் பொதுவாக வேறு தொழில்களில், டான்சராக வந்துவிட்டு, ஈடுபட வாய்ப்பே இல்லை. பொதுவெளியில் இதற்குமேல் எழுத இயலாது.
ReplyDeleteஎனக்கு துபாய் க்ளப் பற்றியோ டான்சர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது! #கிணற்றுத்தவளை
Deleteஆனால் இந்தப் பெண்ணுடைய பேட்டியைக் கவனித்துப் பார்த்தீர்களானால், துபாயில் தனக்கு முதல் காண்டாக்ட் உடன் காதலில்! அந்த நபருக்கு டைவர்ஸ் கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொல்கிற பகுதியைக் கவனிக்கவில்லையா?
பார்த்தேன். இலுப்புச் சட்டி சூட்டுக்குப் பயந்து அடுப்பில் விழாமல் இருந்தால் சரிதான்.
Deleteசரியான உவமை நெல்லை! பெரும்பாலும் அந்தமாதிரித்தான் ஆகிவிடுகிறதென்பது என்ன விதியோ?
Delete/பார்த்து உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.// - சொல்லிட்டீங்க இல்ல... இனி அவரை 'அடுத்த முதல்வர்' என்று தொண்டரடிப்பொடிகள் பேச ஆரம்பிச்சு கவுத்துடுவாங்க...
ReplyDeleteமுதல்வர் கனவு அவருக்கே அதிகப்படி என்று தெரிந்திருப்பது விசேஷம்!
Deleteவிஜய் சேதுபதி ஊடகக்காரர்களைக் கொஞ்சம் கவனமாகக் கையாள்கிறார் என்பதில் மட்டுமே வியப்பு! மற்றப்படி அவருடைய அரசியலை for that matter எந்த சினிமா நடிகனுடைய அரசியலையும் நான் ஆதரிப்பதில்லை!
தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்கிற வார்த்தை சில சமயம் பொய்யாகி விடுகிறது. தாய் பேயாகி விடுகிறாள்! பணப்பேய்!
ReplyDeleteபணத்தாசை, சுகபோகங்கள் இவைகளில் தாய்மையைப் பின்னுக்குத்தள்ளி விட்டு பேயாட்டம் போடுகிற காலம் இது ஸ்ரீராம்!
Deleteவிஜய் சேதுபதியை சில படங்களில் நான் ரசிப்பேன். அவருடைய வசனம் பேசும் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். இங்கு அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் காதில் சரியாக விழவில்லை!
ReplyDeleteமூன்று வீடியோக்களில் இதைப்பார்த்துவிட்டு இருப்பதில் ஆடியோ தெளிவாக இருக்கிறதென்று இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் ஸ்ரீராம்! இது மதுரையில் ஒரு நகைக்கடைத் திறப்புவிழாவுக்காக வந்திருந்தவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தது. சென்னை அளவுக்கு மோசமில்லை என்றாலும் மதுரையிலும் மிக்கது தெளிவான ஊடகக்காரர்கள் எவருமில்லை.
Delete