தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்றே முடிந்துவிட்டாலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 வரை காத்திருக்கப் பொறுமையில்லாத, வெற்று ஊகங்களைப் பேசுவதில் அக்கறை காட்டுகிற மாநிலமாகவே இருக்கிறது. சூலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ரெண்டு முருகன், கண்ணை மூடினால் கருணாநிதியாக தெரிகிறார் ஸ்டாலின் என்று பேசிவிட்டு அடுத்துச் சொன்னதும் அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலும் இன்றைய அரசியல் காமெடியில் முதலாவதாக.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை விட திமுகழகம் சட்ட சபைக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் தான் அதிக அக்கறை காட்டுகிறது என்பது தெரிந்த விஷயம்தான்! எந்த அளவுக்கு திமுக தலைவர்களும், உபிக்களும் காய்ந்துபோய்க் கிடக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே! ரெண்டு முருகன், தன்னை கிங் மேக்கர் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு பேசுவது பெரிய காமெடியா இல்லையா?
ஏன் அது காமெடி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன் அப்புறம் மய்யம் கமல் காசர் இந்த மூன்று தரப்பும் எவருடைய கனவுகளுக்குக் குறுக்கே வந்து மறிக்கிறார்கள் என்ற கணக்கும் தெரிந்தாக வேண்டும். மே 23 அன்று தான் சரியான விடை கிடைக்கும் என்றாலும், ஊகம் செய்வது என்று ஒரு வழி இருக்கிறதே!
ஏன் அது காமெடி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன் அப்புறம் மய்யம் கமல் காசர் இந்த மூன்று தரப்பும் எவருடைய கனவுகளுக்குக் குறுக்கே வந்து மறிக்கிறார்கள் என்ற கணக்கும் தெரிந்தாக வேண்டும். மே 23 அன்று தான் சரியான விடை கிடைக்கும் என்றாலும், ஊகம் செய்வது என்று ஒரு வழி இருக்கிறதே!
இங்கே ரவீந்திரன் துரைசாமி, அவருடைய கணக்காக சில விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். சீமானைப் பற்றிய மதிப்பீடு அதிகம். கமல் காசருக்கு சொல்லியிருப்பதும் கூடப் பொருந்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
வட போச்சே
ஆட்களைவிட கேமரா அதிகமா இருக்கும்னு தெரியாம போச்சே. அடுத்த கண்டனக்கூட்டத்தைத் தவறவிடவே கூடாது. பெஸண்ட்நகர்லேந்து மீனம்பாக்கம்போய் பிளைட் பிடிச்சி திருவனந்தபுரம் போய் ஜெயமோகனோட அசோக்நகர் கூட்டத்துக்கு வந்துரணும்
இவ்வளவு நக்கலாக மாமல்லன் எழுதியிருக்கிறாரே, ஜெயமோகன் அப்படி என்ன தான் வல்லுவ்வான கண்டனத்தைப் பதிவு செய்திருப்பார் என்று ஆவலாகப் பார்க்கப் போனால் ஜெமோ பொசுக்கென்று முடித்துவிட்டார்.
திருமாவளவனுக்கு கிழட்டுச் சிறுத்தை எஸ்ரா சற்குணம் (அடைமொழி அவரே கொடுத்துக் கொண்டது ) ஆதரவு அளித்தது கூடப் பெரிய விஷயமில்லை! ஜெமோ கூட இலக்கிய வாதிகளுடன் கூடி ஆதரவு தெரிவித்திருப்பது என்ன மாதிரியான ஸ்டன்ட் என்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் திருமாவளவன் பதற்றத்தில் இருப்பது புரிகிறது. இதே பதட்டம் மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசனிடமும் தென்பட்டது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment