Sunday, April 7, 2019

சண்டே போஸ்ட்! அரசியல் களம்! IT ரெய்டு! குஷ்பூ!

தந்தி டிவி சலீம் கமலை கொஞ்சம் பயந்து பயந்தேதான் பேட்டி எடுக்கிற மாதிரித் தெரிகிறது! ரூமில் டிவி  இருக்கிறதே, பார்ப்பது உண்டா என்று கேள்வி கேட்கிறார். நிஜம் பேசுகிற டிவியைப் பார்ப்பதுண்டு என்கிறார் கமல் காசர். அப்படி ஒரு டிவி இருக்கிறதா என்ன? அதுவும் தந்தி டிவி??


கொஞ்சம் வித்தியாசமான செய்தி எதுவும் கண்ணில் படுகிறதா என்று தேடிக் கொண்டே வந்ததில் எல்லாம் ஒரே மாதிரியான செய்திகள்தான் என்றிருந்ததில் இது கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்! ரங்கராஜ் பாண்டே இருந்த இடத்தில் சலீம்? புலி இருந்த இடத்தில் பூனைக்குட்டியை வைத்துப் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. வருமானவரித்துறை சோதனை பற்றி ஒரு கேள்வி வருகிறது.


மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வராக ஆசையோடு இருந்த ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியாவை ஓரம்கட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்த பழம்பெருச்சாளி கமல்நாத் பற்றி நிறையப்பேருக்கு இங்கே தெரிந்திருக்காது. 1984 டில்லி சீக்கியர் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தும் கூட சட்டத்தின்பிடியில் சிக்காத ஆசாமி என்று சொன்னால் மட்டும் போதுமா? இன்று அதிகாலை முதல் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து ஐம்பது இடங்களுக்கும் மேல் வருமானவரித்துறை சோதனை ஆரம்பம். ஹவாலா வழியில் இந்தத் தேர்தலுக்காகக் கொண்டு வரப்பட்ட பணக்குவியலை குறிவைத்து நடக்கும் சோதனைகளில் கட்டுக்கட்.டாக என்பதை விட குவியல் குவியலாகப் பணம் பிடிபட்டிருக்கிறது. வழக்கம்போல IT Dept ஐ வைத்து அரசியல்பழிவாங்கல் என்ற கூக்குரல்கள் எழுந்தாலும், கமல்நாத் மாதிரி அரசியல்வாதிகள் மீது கொஞ்சம் கூட ஜனங்களுக்கு அனுதாபம் இல்லை என்பதை TOI செய்திக்கு வந்த வாசகர் கமென்டுகள் வெளிப்படுத்துகின்றன.

      
ஆ! ராசா திமுக அரசியலில் அதன் தலைமையை ஆச்சரியப் படுத்துகிற அளவுக்கு மத்திய அமைச்சராக இருந்த நாட்களில் சாதனை செய்தவர்! குன்னூர்ப் பகுதியில் பிரசாரம் செய்த போது பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் தேர்தல் ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார். பூச்சாண்டி பொய் பிரசாரம் என்பது ஒரு பக்கம்! ஆனால் இவர்கள் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி 45 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இதை முயற்சித்துப்பார்த்து மூக்குடைபட்ட கதையை பீகார் இயக்கம் bihar movement என்று கூகிளில் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காண்டியின்  அரசியல் மமதையின் ஆரம்பப்புள்ளி அது. 

 ரெண்டுமுருகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்::            அரசியலில் எதிரும் புதிருமாக நின்று கருத்துப்போர் புரியவேண்டும். ஆனால், மத்திய மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் எங்களை பழிவாங்க முயற்சிக்கின்றன. கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனைகள், அவரது வெற்றியை சீர்குலைக்க நடக்கும் சதியாகும். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. இதுவரை எங்கள் வீடு, கல்லுாரிகளில் நடந்த சோதனைகளில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், எங்கள் இடங்களில் ஏதாவது பொருளை வைத்துவிட்டு, எங்கள் மீது பழிசுமத்தப் பார்க்கின்றனர்.


அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கருத்துப்போர் புரிவது தான் அரசியல். மாறாக பழிவாங்கி, அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது. எங்களுக்கு வந்துள்ள தகவல்கள் படி, எங்களை சுற்றி கண்காணிப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

முதல்நாள் வருமானவரி சோதனையின் போது, 'நள்ளிரவில் வந்ததால், தூக்கத்தை எடுத்துச்சென்றார்கள்' என்று 'தில்'லாக கிண்டலடித்த துரைமுருகன், தொடர் ஐ.டி., ரெய்டு காரணமாக, தற்போது ஆடிப்போய் இருப்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர் என்கிறது தினமலர் செய்தி. 


இந்த வாய் மட்டும் இல்லேன்னா குஷ்பூவை எப்பவோ காக்கா தூக்கிட்டுப் போயிருக்கும்! சந்தேகமே இல்லை!

மீண்டும் சந்திப்போம்!   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)