Tuesday, April 23, 2019

வர்ண ஜாலம்! மீண்டும் எண்டமூரி வீரேந்திரநாத்!

வர்ண ஜாலம் இரண்டு பாகங்களாக திருமதி கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் வந்த எண்டமூரி வீரேந்திரநாத்தின் புதினத்தை மீண்டும் இப்போது எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்ததில், இடையில் மூடிவைக்க மனமே வரவில்லை.




எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு வர்ண ஜாலம் செய்யும் இந்த எழுத்தாளர்  என்னை அந்த அளவுக்கு மயக்கி இருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் ஒரு வித்தியாசமான பார்வை, மனித மனங்களில் வெளிப்படும் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்துத் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கும் எண்டமூரியின் கதை சொல்லும் திறமையை நான் ஒரு இருபது  வருடங்களுக்கு முன்னால் ரசித்த மாதிரியே, இன்றைக்கு மறுவாசிப்பு செய்கிற இந்தத் தருணத்திலும் கூட ரசிக்க முடிகிறது, தொய்வில்லாமல் கதையை நகர்த்திக் கொண்டுபோகிற அவருடைய வேகத்தையும், சம்பவங்களைப் பின்னும் லாவகத்தையும்  இப்போது கூட வியப்புடன் தான் பார்க்கிறேன்.

துளசிதளம், மீண்டும் துளசி இரண்டு கதைகள் தான் ~சாவி வார இதழில்  தொடராக வந்தபோது படித்தது. மற்ற எல்லா நாவல்களையும், புத்தக வடிவில் தான் சேகரம் செய்ய ஆரம்பித்தேன். பெரும்பாலானவை  சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்பில் வெளி வந்தவைதான். எண்டமூரியின் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு, திருமதி கெளரி கிருபானந்தன் எண்டமூரியின் கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்த பிறகு, அதுவும் பெரும்பாலும் பழைய திண்ணை இணைய இதழில் வெளிவந்தவைதான், கிடைத்தது.

வர்ண ஜாலம்! ( தெலுங்கு மூலம் ப்ரியுராலு பிலிசே) இந்தக் கதையை ஒரு romantic thriller என்று வகைப்படுத்தி விடலாம் தான்! ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு இடத்திலிருந்து துவங்குமாம்! உங்கள் மீது ஏற்பட்ட காதல் எப்பொழுது தொடங்கியதோ கண்டுபிடிக்கவேண்டுமென்றால் கடந்த காலத்தின் கதவுகளைத் தான் தட்டவேண்டும் என்று ஆரம்பிக்கிற ஒரு கடிதம்! ஒவ்வொரு கதையும் ஏதொவொரு இடத்தில் தொடங்கும். இந்தக் கதையை ஸ்ரீகல்யாணியிடமிருந்து தொடங்குவது நல்லது என்ற பீடிகையோடு கதையின் நாயகி அறிமுகம் ஆகிறாள்! இப்படி ஆரம்பிக்கிற கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மோடு நேரடியாக உரையாடுகிற மாதிரி, தங்களது எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்திக் கொண்டே போகிறார்கள். எவர் தரப்பில் அதிக நியாயம் என்று யோசிப்பதற்கு வாசகர் தன்னுடனேயே ஓர் உரையாடலைத் தனியாக ஆரம்பிக்கிற விதத்தில் கதை விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.

இப்படி ஒரு உரையாடல் நிகழுமேயானால் கொஞ்சம் தத்துவத் தேடலுக்கும் இடம் இருக்காதா என்ன?கதையின் நாயகி ஸ்ரீகல்யாணி! பெரும் பணக்காரி!  வாழ்க்கையில் பணம் என்னென்ன மாயம், புரட்டு, கொலைபாதகம் செய்யும் என்கிற யதார்த்தம் தெரிந்த தொழில் அதிபரும் கூட!  கதாநாயகன் கார்த்திகேயன் ஏழை! பணமில்லாததால் மருத்துவக் கல்லூரியில் படிப்பை முழுமை செய்யாத, வாழ்க்கையைக் குறித்து நம்பிக்கையிழக்காமல், சோர்வில்லாத  நகைச்சுவையுணர்வுடன் vibrant ஆக இருப்பவன்! வேடிக்கையாக நாயகன் சொல்கிற ஒரு வார்த்தையில் இருவருக்கிடையிலான முதல் சந்திப்பே ஒரு முட்டல் மோதலில் ஆரம்பித்து,இந்த இரு துருவங்களும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்!

இடையில் அனுஜா என்றொரு மந்திரிமகள்! நாயகனுடைய ஓவியத்திறமை, நேர்மை இத்தியாதி குணங்களால் ஈர்க்கப்பட்டு அறிமுகமாகும்போது ஒரு முக்கோணக் காதல் தெரிவது வழக்கமானதுதானே என்று எளிதில் தள்ளிவிட்டுப் போகமுடியாதபடி எதிரெதிர் நிலையில் இருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும், உறவுச் சிக்கலைப் பற்றி நம்மோடு பேசிக்கொண்டே வருகிறார்கள்! Romance இருக்கிறது சரி, romantic thriller என்று  வகைப்படுத்தலாம் என்று சொன்னீர்களே, அப்படி என்ன தான் thrill இருக்கிறது?  இப்படி நீங்கள் கேட்பதாகவே வைத்துக் கொண்டு, கதை எப்படி ஆரம்பிக்கிறது என்று பார்த்தால், ஏன் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டதை இடையில் கீழே வைக்கவே முடியாது என்று சொன்னேன் என்பதும் புரியும்!

எட்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாகக் கிடந்த நாயகியின் தாய்  மாமன்  இறந்துபோகிறார். இறப்பதற்கு முன்னால் ஸ்ரீகல்யாணியை அழைத்துத் தனது இறுதிக்காலம் நெருங்கி விட்டதாக, அவளுடைய அப்பா விட்டுச்  சொத்துக்களை அவள் பெயருக்கே மாற்றி எழுதிவிட்டதாக, தன் மகன் சத்யனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தழதழக்கிறார். 

இந்தத்தருணத்திலாவது ஒரு உண்மையைச் சொல்லுங்கள் என்று ஸ்ரீகல்யாணி தாய்மாமனைக் கேட்பதில் " உங்க அப்பாவைக் கொலை செய்தது நான்தானம்மா"  என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார். "சச்சிதானந்தா சாமி சத்தியமாக எல்லா சொத்துக்களையும் உன்பேருக்கே உன்பேருக்கே மாற்றி எழுதிவிட்டேன். சத்யனுக்காகக் கூட எதையும் மிச்சம் !வைக்கவில்லை"  என்று திக்கித் திணறுகிறவரை ஸ்ரீகல்யாணி இன்னும் கூர்மையான கேள்விகளால் துளைக்கிறாள்.

தெய்வத்தின் பெயரால் பயத்தை உண்டாக்கி, சச்சிதானந்த சுவாமிகளுக்குப் பணத்தாசை காட்டி, அபகரித்த சொத்தைத் திரும்ப எழுதி வாங்கிய நாடகத்தை அரங்கேற்றியதே தான் தான் என்கிறாள் ஸ்ரீகல்யாணி! மாமன் விக்கித்துப்போய் அவளை பார்த்துக் கொண்டே உயிரை விடுகிறார்!

அச்சச்சோ! வில்லனை ஆரம்பத்திலேயே இப்படிக்கு க்ளோஸ் பண்ணிவிட்டால் அப்புறம் thrill எங்கே இருக்குமாம்?

பதறாதீர்கள்! பிள்ளைப்பூச்சியாக அறிமுகமாகும் மாமன் மகன் சத்யன் எதற்கு இருக்கிறான்?

ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிற, மொழிபெயர்க்கப் பட்ட நாவல் என்கிற சுவடே தெரியாமல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்திருக்கிற கதை இது! விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை!  

அப்புறமென்ன ? படித்துப் பார்க்க வேண்டியதுதானே!

நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?

"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்...................திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "

இப்படி சென்ற ஜனவரியில் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியது, இதைத்  தமிழில்  மொழிபெயர்ப்புச் செய்த திருமதி கௌரி கிருபானந்தன் பார்வைக்கும் வந்து முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்பதை இன்று பார்த்தேன். அந்தப் பக்கங்களில் ஒரு தகவல் பிழையையும் பின்னூட்டமாகச் சொல்லியிருப்பதை இங்கேயும் பகிர்ந்துகொள்ளவேண்டியது என்னுடைய கடமை.

ராஜமுத்திரை நாவல் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது இல்லை. பல நாவல்கள் அவர் பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டிருந்தாலும், அவற்றை தெலுங்கில் எழுதிய எழுத்தாளர்கள் வேறு யாரோ.

ஏற்கெனெவே சுசீலா கனகதுர்கா மொழிபெயர்த்து எண்டமூரி எழுதியதாக வெளியான ஒருநாவல் முள்பாதை விமரிசனப் பதிவுக்கும் வந்து அதை ஒரிஜினலாக எழுதியவர் யத்தன்னபுடி சுலோசனா ராணி என்ற தகவலையும் சொல்லித் திருத்தம் செய்திருந்தார் என்பதையும் இங்கே பதிவு செய்யவும் கடமைப் பட்டிருக்கிறேன்.  
     

4 comments:

  1. நான் அவர் நாவல்கள் படித்திருக்கிறேன். ஆனால் இளையவயதில் இருந்த ஈர்ப்பு பிறகு படிக்கும்போது இருந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. பல புத்தகங்களுடைய, எழுத்தாளர்களுடைய அருமை மீள்வாசிப்பில்தான் தான் புரியவரும் என்பது என்னுடைய அனுபவம்!

      Delete
    2. இன்னொரு விதமாக, பல வருடங்களுக்கு முன் மிகவும் ஆவலுடன் படித்த நாவல்கள் இப்போது படித்தால் பெரும் ஏமாற்றம் தருவதும் உண்டு.
      எஸ் எல் பைரப்பா புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா? கன்னட எழுத்தாளர். பாவண்ணனின் தேர்ந்த மொழி பெயர்ப்பில் அவர் எழுதிய பருவம் படிக்க சிபாரிசு செய்கிறேன். மகாபாரதத்தை வித்யாசமான பார்வையில் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய திரை என்ற புத்தகம் முகலாயர் செய்த அட்டூழியங்களை, அக்பர் உள்பட, ஆதாரத்துடன் சுவாரஸ்யமான நாவலாக. சார்த்தா வில் ஆதி சங்கரர் ஒரு பாத்திரமாக..

      Delete
    3. வாருங்கள் பந்து! நீங்கள் ஆரம்பவரியில் சொல்லியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அனுபவசத்தியமாக வாய்த்திருக்கிறது! பைரப்பா நூலெதுவும் படித்ததில்லை. நல்ல பரிந்துரைக்கு மிகவும் நன்றி! படிக்க முயற்சிக்கிறேன்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)