Wednesday, April 3, 2019

எது ஆபாசம்? The Seven Minutes!

ஏன் படிக்கிறோம்எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன்எதற்காக என்பதை விடஎப்படிப் படிக்கிறோம்என்ன படிக்கிறோம்என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையாஇந்தப் பக்கங்களில்பேசப்படும் புத்தகங்கள்கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற் பட்டதில்லை. 

இலக்கியம்திறனாய்வுவிமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை.வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியதுசிந்தனையைஎந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.அந்த வகையில்ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும் வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங் வாலசின் The Seven Minutes! 


ந்தப் புத்தகத்தின் கதையோட்டம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம் டிராமா வகை தான் என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்த நூலும்சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.
ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடுஇன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில்இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று! 

காமம்போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டுஅதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும்வார்த்தைகள் என்று காமம்காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்து விடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூடஅப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம்அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர்அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர்அவருடைய நண்பரான வழக்கறிஞர்அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர்என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைதுஒரு கற்பழிப்புஒரு மரணம்அதைத் தொடரும் வழக்கில்இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையைஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர்கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப்புரிந்து கொள்ளாததாலோ என்னவோவெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!

கதை என்று பார்க்கப் போனால்வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டுபாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டேகதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்! இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதேஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாகஎழுப்புகிறார்வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில்ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்துஇந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம்கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள்அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டுஅப்புறம் ஏற்றுக் கொள்ளப்பட்டவைஎது ஆபாசம்அதை எப்படிஎவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப்புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட்ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக்கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்துவழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில்அந்தப் புத்தகம் ஆபாசமானதுவிற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல்அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி, குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசிபுத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார்.ஆனால்அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர்எல்மோ டங்கனைஅரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்குஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கிவெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போதுஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில்மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில்ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதேஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசிபுத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டுமிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறிபுத்தகம்புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்புகொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலிஅவளுடைய தகப்பனார் இருவரும்பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டுஅவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடுஉத்தரவாதமானவருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர் ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர்தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லிபாரெட்டைத் தவிர வேறு எவருமேஅந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லைதனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம்சர்ச்சைக்குரியதுஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண்தான் உடலுறவு கொண்ட தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில்மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோகுற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்றுஅபிப்பிராயப் படும் பாரெட்தன்னுடைய காதலிகாத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்துஅந்தப் புத்தகத்துக்காககருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின்செல்வாக்கினால்அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டேஇருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார்சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணைதன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல்பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவதுமொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.
கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது. 

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிரஇர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! 

கதை சொல்லும் போதேசில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தைஇப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனைஇந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல!  

ஆபாச எழுத்துகிளர்ந்தெழச் செய்யும் எழுத்துகலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம்குற்றம் சொல்கிறோமேஅதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வதுகருத்து சுதந்திரம்என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரைஅடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்னஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதிவைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமாஅல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?
ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes!

இந்தப் புத்தகம்பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாகஇந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.


வாசித்ததும் யோசித்ததுமான  ஒரு  மீள்பதிவு 

2 comments:

  1. இந்தப் புத்தகத்தை எப்போதோ வாங்கிய ஞாபகம் இருக்கு. முழுதும் படித்த ஞாபகம் இல்லை. ஒருவேளை ஆரம்பப் பக்கங்கள் ஈர்க்கவில்லையோ என்னவோ.

    ஆமாம்...வேறு நிறைய நாவல்கள் இருக்க, இதற்கு விமர்சனம் எழுதக் காரணம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. இது வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன்! இது ஒரு மீள்பதிவு தான்! இப்போது 2 புத்தகங்களை வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன், விரைந்து படித்து முடித்துவிட வேண்டும் என்று எனக்கே ஒரு நினைவூட்டல் மாதிரி!

      super deluxe திரைப்படம் பார்த்த கொடுமை போதாதென்று இணையத்தில் அதை வியந்தோதி எழுதிக் கொண்டிருக்கிற ஒரு கும்பல் இந்தக் கதையை மீளவும் நினைவுபடுத்தியதுதான் காரணம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)