Tuesday, December 31, 2019

சிரிப்பதற்கு, கீச்சுக்களில் கொஞ்சம் அரசியல் உலா!

ஆங்கிலவருடத்தின் கடைசி நாள் இன்று! இடுக்கண் வருங்கால் நகுக என்று சொன்னதற்கேற்ப அரசியல் கயவாளித்தனங்களைக் கண்டு வெறுத்து ஒதுங்காமல் கொஞ்சம் சிரிப்பதற்காக கீச்சுக்களில் ஒரு உலா! வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பதால் கொஞ்சம் வாய் விட்டுச் சிரிக்கத்தான் பழகுவோமே!

"அலங்"கோலம் 
இதற்குக் கொடுக்காமல் வேறெதற்குக் 
கொடுப்பதாம்?

 சுடச்சுட! இன்னைக்கே கொடுத்தாத்தான் 
அது செய்தி! விவாதம்!

   
வீரம் கொப்பளிக்கப் பேசியாச்சு! வாய் மட்டும் தான் ஸ்ட்ராங்! பாடி ரொம்ப வீக்கு! 
அடி தாங்காதையா!!

உசுப்பி உசுப்பியே நெல்லையைப் 
புண்ணாக்கிடுவாங்க போலயே!

   மாரிதாஸ்! அவர்பங்குக்குக் கொஞ்சம்!

டய மண்டு நானும் இருக்கிறேன் என்று 
காட்டிக்கொள்கிறார்! ஆனால் இன்று 
அவருடைய தினம் இல்லை!
நெல்லை கண்ணனுடையது!

   இது சீமாறு காமெடி!

கீச்சுக்கள் சொல்லும் அரசியலைக் கவனித்தீர்களா? சிரிப்புடன் கோபமும் வந்தால் நீங்களும் என் இனமே!

மீண்டும் சந்திப்போம்.    

Monday, December 30, 2019

பிழைப்பின் பொருட்டே நரேந்திர மோடி எதிர்ப்பு!

ஒரு நல்ல ஊடகக்காரனின் பணி என்ன? ஜனங்களுக்கு முக்கியமான செய்திகளைக் கவனப்படுத்தவேண்டும் என்பது அடிப்படையானது. அவசியம் தேவைப்படுகிற இடங்களில் செய்தியை விளக்குவதும் கூட ஒரு நல்ல ஊடகக்காரன் செய்ய வேண்டிய வேலைதான்! நேர்காணல் என்று வரும்போதுகூட இந்த அடிப்படைகள் மாறுவதில்லை. கேள்விகள் கேட்பதும் கூட ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, தன்னுடைய கருத்தை நேர்காணலில் அடிக்கடி குறுக்கீடாகப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தக் கூடாது. சில கிறித்தவக் கல்வி நிறுவனங்கள்  விஸ்காம் படிப்பிலும் கூட இடதுசாரி தறுதலைகளை உருவாக்கி சேனல்களில், ஊடகங்களில் ஊடுருவ விடும்போது, நாகரிகமான ஊடக நடைமுறைகள் முன்மாதிரிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படும் என்பது தெரிந்த விஷயம் தான்.


மதன் ரவிச்சந்திரன் மாதிரி துடிப்பான இளைஞர்கள் இங்கே திராவிட சார்புள்ள, இடதுசாரி fringe  elements உருவாக்கி வைத்திருக்கிற திராவிடம் என்பது அசைக்க முடியாதது என்ற மாயையை உடைக்க முயற்சிக்கிற போது, வளரவிடாமல் அழித்து விட முயற்சிப்பதும் இயல்புதான்! புதிய தலைமுறை, காவேரி நியூஸ் சேனல் இரண்டிலும் அந்த இளைஞன் கொஞ்சம் துடிப்பாகச் செயல்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வேலை செய்துகொண்டிருந்த சேனலை விட்டு வெளியேற்ற பழம்தின்று கொட்டைபோட்ட திராவிட சார்புள்ள சீனியர்கள் முயற்சித்ததை இந்தப் பக்கங்களிலேயே பேசியிருக்கிறோம். 

இந்த 60 நிமிட விவாதத்தில் மதன் ரவிச்சந்திரன் சில முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். இன்றைக்கு எதிர்ப்பு நிலை எடுக்கிறவர்கள் இதற்குமுன் ஆதரித்தது முரண்பாடு இல்லையா என்பது முதலாவது. அடுத்தது நல்ல தமிழ்ப் பேச்சாளர் என்று அறியப்பட்ட நெல்லை கண்ணன் அப்பட்டமான திமுக மேடைப்பேச்சாளராகக் குறுகிப்போனதையும், தரம் தாழ்ந்து பேசியதையும் போகிறபோக்கில் விவாதத்தில் சொல்கிறார்கள். 


திமுக இந்த அளவுக்கு நரேந்திர மோடி /பாஜக எதிர்ப்பு என்று மும்முரமாக இறங்குவானேன்? இசுடாலின் மனதில் ஓடுகிற கணக்கென்ன என்பதை  துரை முருகன் கூட அறிந்திருப்பாரோ என்பதே சந்தேகம் தான்! ஆனால் மோடி எதிர்ப்பாளர்களோடு ஒட்டிக் கொள்கிறார். OMG சுனிலை விரட்டிவிட்டு IPAC பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளை வகுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.இப்போது (2021இல்) இல்லையென்றால் இனி எப்போதும் முதல்வராகிற வாய்ப்பு இல்லை என்கிற தவிப்பின் வெளிப்பாடாகவே    நடப்பவைகளை அனுமானிக்க முடிகிறது.



ஆக, இசுடாலின் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே மோடி எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறார். கொள்கை சித்தாந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அதிமுகவை பிஜேபி காப்பாற்றி வருவதால் பிஜேபியை எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம்! இன்னொரு சட்டசபைத்தேர்தல் தோல்வி திமுகவைக் கரைத்துவிடும், தன்னுடைய தலைமை கேலிக்குரியதாகி விடும் என்று இசுடாலின் நினைத்தால். அதில் தவறேதுமில்லை.

மீண்டும் சந்திப்போம்        

Sunday, December 29, 2019

மதன் ரவிச்சந்திரன்! கொஞ்சம் நிதானிப்பது நல்லது!

சின்னச்சின்ன செய்திகள்தான்! அடடே! அப்படியா! என்று ஆச்சரியப்பட வைக்கிறமாதிரி! சம்பந்தப்பட்ட சேனல் பரிதாபங்கள் எப்படியிருக்கும் என்று கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறதா?


கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்காமல்  போனதோடு மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப்போயாச்சு என்று சோக கீதம் பாடவேண்டிய நிலைமையில் டய மண்டு! அடடே, அப்படியா என்று கேட்காமல் என்ன செய்வது? ஆனால் விதைத்ததைத்தானே  அறுவடை செய்கிறார் பாடலாசிரியர் என்கிற போது என்னவென்று அனுதாபப் படுவீர்களாம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!  


சதுரங்கம் நிகழ்ச்சிக்காக மதன் ரவிச்சந்திரன், அர்ஜுன் சம்பத்தை பேட்டி எடுக்கிறார். எப்போதும் இல்லாத அதிசயமாக, மதன் ரவிச்சந்திரன் அர்ஜுன் சம்பத்தைப் பதில் சொல்ல விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே போவதில் எரிச்சலோடு பின்னூட்டங்களை இந்த வீடியோவில் தான் பார்த்தேன். கேள்விகேட்டுவிட்டு பதில்சொல்வதற்கு இடைவெளியே கொடுக்காமல் அடுத்தடுத்துக் கேள்விகளாக எழுப்பிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒருத்தர்  இரண்டு பேர் இல்லை, வரிசையாக இதேமாதிரிப் பின்னூட்டங்களாக இருந்தால்....! மதன் ரவிச்சந்திரன் கொஞ்சம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது!  கேள்வி கேட்பதில் மதன் ரவிச்சந்திரன் தடுமாறுவதையும், அர்ஜுன் சம்பத் நிதானம் இழக்காமல் பொறுமையாகப் பதில் சொல்வதையும் கவனித்துப்பாருங்கள்! வீடியோ 32 நிமிடம்.


2019 ஆம் ஆண்டில் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல பேட்டிகளில் ஆகச் சிறந்த நேர்காணலாக இதைத்தான் சொல்வேன்! வீடியோ 41 நிமிடம். காவேரி நியூஸ் சேனல் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல நேர்காணல் காணொளிகளை யூட்யூப் தளத்திலிருந்து அழித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இது எத்தனை நாள் காணக்கிடைக்கும் என்பது தெரியாது. இப்போது இன்னொரு முறை பார்த்துவிடுவதில் என்ன தடை?

மீண்டும் சந்திப்போம்.                 

Saturday, December 28, 2019

என் சுவாசக் காற்றே......!

உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?

அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.


வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!

புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!

புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!

வாருங்கள்! பேசுவோம்!

3 comments:

  1. எழுதுங்கள் ...காத்திருக்கிறோம்
    ReplyDelete
  2. வருகைக்கு மிகவும் நன்றி, சுரேகா! ஸ்ரீராம்!
    முயற்சி நல்ல முறையில் நடந்தேற இறைவனது அருளை இறைஞ்சி,
    புத்தாண்டு வாழ்த்துக்களுடன்!
    ReplyDelete
இப்படி ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப்பக்கங்கள் கடந்த 24 ஆம் தேதி பத்தாண்டுகளை நிறைவு செய்து 25 அன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது  2010 ஆம் ஆண்டில் 63 பதிவுகள் என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து. அடுத்துவந்த காலங்களில் குறைந்துகொண்டே வந்து ஒரு 4 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே 2018 டிசம்பர் வரை மொத்தம் எழுதியதே 86 பதிவுகள் தான்.

2019 ஆம் ஆண்டு இந்தப் பக்கங்களைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இந்தப் பதிவுடன் சேர்த்து இதுவரை 417 பதிவுகள். ஒவ்வொரு நாளும் எதைப்பற்றியாவது ஒரு பதிவு நிச்சயமாக இருக்கும், சில நாட்களில் ஒரேநாளில் 2 பதிவுகள் கூட என்று ஒருவித வேகத்துடன் இருந்ததுண்டு.

புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது கிடைக்காத பார்வைகள் அரசியலைத் தொட்டு எழுத ஆரம்பித்தபோது கூடுதலாகக் கிடைத்தன. டிசம்பரில் இந்த வேகத்தை மட்டுப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்ததில் இந்த மாதம் இது 25வது பதிவு.

முதல் பதிவில் சொன்னமாதிரி வெறும் புத்தக வாசிப்பு என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அரசியல், பொருளாதாரம் இப்படி மனிதர்களைப் பாதிக்கிற எந்த ஒரு விஷயத்தையும் விட்டுவிடாமல், பதிவுகளை எழுத உத்தேசம். இறையருள் துணை செய்யட்டும்.

இந்தப்பயணத்தில் கூட வரும் நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.      

Sunday, December 22, 2019

கேள்விகளே இல்லாமல் பதில் எப்படிக் கிடைக்கும்?

ரங்கராஜ் பாண்டே தந்திடிவியை விட்டு வெளியேறி இந்த டிசம்பரில் ஓராண்டு முடிந்துவிட்டது. பழைய உறவுகளை திமுகவுடன் புதுப்பித்துக்கொள்ள தந்தி நிர்வாகம் மேற்.கொண்ட சமரசங்களில் பாண்டே வெளியேற்றப் பட்டார் என்பது ஆதித்தன் ரகசியம். ஆனால் பாண்டே காலத்தில் உச்சத்தைத் தொட்ட தந்திடிவி தொடர்ந்து சரிவுமுகத்திலேயே ஓராண்டாக இருந்துவருவதை நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.


என்னதான் நடுநிலைமையோடு செய்திகளைத் தருகிற மாதிரி வேடம் போட முயன்றாலும் கொண்டையை மறைக்கத் தெரியாத வடிவேலு மாதிரிப் பரிதாபமாக இருப்பது  தந்தி டிவியின் பல நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதியிடம் கேள்விக்கென்ன பதில் என்று பேட்டி எடுக்கப்போனால் அதற்கான ஹோம் ஒர்க் இருக்க வேண்டாமா? நாடெங்கிலும் கலவரத்தீ மூண்டிருக்கிறதே என்று கேள்வியை ஆரம்பித்து வெங்காய விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன் என்று வரிசையாக  தெளிவே இல்லாத கேள்விகளைக் கேட்டு என்ன பதிலைப் பெற்றுவிட முடியும்? வீடியோ 39 நிமிடம் என்று சுருக்கமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை! 39 நிமிடம் பேட்டியை நடத்த முடிந்ததே  என்பது தான் ஆச்சரியம்!


மதன் ரவிச்சந்திரன்! WIN News சேனலில் மிகத் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற இளைஞர். நாஞ்சில் சம்பத் மாதிரி பேச்சு வியாபாரியோடு 26 நிமிட நேர்காணல் நடத்துவது எப்படியிருக்கிறது என்று பாருங்கள்! கேள்விகளில் ஒரு தெளிவு, ஒரு தொடர்ச்சி இருப்பதைக் கவனிக்க முடிகிறதா? வெறும் வார்த்தை அலங்காரங்களில் உளறுவதெல்லாம் சரியான  பதில் ஆகி விடுமா?

இரண்டு நேர்காணல்களுக்கும் உண்டான வித்தியாசம் புரிகிறதா?  ஊடகங்களின் தலைவிதியை திறமையான ஊழியர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.   முதலாளிகள் தீர்மானித்துவிட  முடியாத விஷயம் அது.

மீண்டும் சந்திப்போம்.

  


   

Friday, December 20, 2019

#501 அக்கம் பக்கம்! அரசியல்

பாகிஸ்தானைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லப் படுகிற, ஆனால் துல்லியமான களயதார்த்தம் ஒன்றுண்டு. உலகத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராணுவம் இருப்பதுண்டு. ஆனால் ராணுவத்துக்காக (நேர்ந்து விடப்பட்ட) ஒருநாடு இருக்கிறது என்றால் அது பாகிஸ்தான் தான்! இந்தியாவிலிருந்து பிடிவாதமாகப் பிரிந்து போனார்கள். பிரிந்த பிறகாவது நிம்மதியாக வாழ முடிகிற நாடாக பாகிஸ்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்பது மட்டும்தான் பதிலாக இருக்கும். 1948 இலேயே ராணுவம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைட் கவிழ்த்துத் தன் வசமாக்கிக் கொண்டது.


முன்னாள் ராணுவத்தளபதியும் அதிபருமாக இருந்த பர்வேஸ் முஷாரஃபுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிற முஷாரஃபுக்கு தண்டனையை நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும்   தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிற இன்னொரு விஷயம் நெருடலாக இருக்கிறது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் இறந்து போனால் அவருடைய சடலத்தை இழுத்துவந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்கவிடப்படவேண்டும் என்பதில் பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்த 14 நிமிட வீடியோவில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்.

  

இந்த 53 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். ஆர்னாப் கோஸ்வாமி  வழக்கத்துக்கு மாறாக மிக நிதானமாக விவாதத்தை நடத்துகிறார். எதற்காக  எதிர்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவர்களிடம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைத்த்தாரோ என்னவோ! நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே செம காமெடியாகப் போவதை பார்க்காமல் மிஸ் பண்ணுவீர்களா என்ன?

மீண்டும் சந்திப்போம்.             

Thursday, December 19, 2019

கொஞ்சம் போல செய்தி! கொஞ்சம் அரசியல்!

என்னமோ அமெரிக்க காங்கிரஸ் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியவுடன் ட்ரம்ப் வீட்டுக்கு அனுப்பப் படுவது உறுதி என்றுதானே நினைக்கிறோம்? அங்கே தான் ஒரு சுவாரசியமான முடிச்சும் இருக்கிறது. செனேட் சபையில் மூன்றில் இருபங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கம் செய்யப்படுவதும் உறுதியாகும். செனேட் சபையில் ரிபப்லிக்கன்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பே இல்லை. இதே மாதிரி காங்கிரசில் இம்பீச் செய்யப்பட்டு, செனேட் சபையில் போதிய ஆதரவு இல்லாமல் தப்பித்தவர் பில் கிளிண்டன்!   வீடியோ 2 நிமிடம்  



என்ன இது வரலாற்றுக்கே வந்த சோதனை?   ட்வீட்டர் வீடியோ 38 செகண்ட் தான் 


பெங்களூருவில் சரித்திரம் எழுதுகிற ராமச்சந்திர குகா இன்று 144 தடையை மீறி பரப்புரை செய்ய முயன்ற போது தடுத்துநிறுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப் பட்டார் என்பதில் என்ன சரித்திரம் இருக்க முடியும்? குகா ஆவேசமாகப் பேசி முடிக்கிற தருணத்தில் நிருபர் ஒருவர் உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்! மேலே லிங்கில் வீடியோவைப் பாருங்கள்! வரலாற்றுக்கே சோதனை! வரக்கூடாதா என்ன?
     
  
கார்டூனிஸ்டுகளுக்குப் பல நாக்குகள்! ஆனால் சொல்லும் சேதி என்னமோ ஒன்றே ஒன்றுதான்! மோடி ஒயிக 
  
குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு ஒன்றை வைத்தே ஓட்ட முடியாது என்று புரிவதால் மறுபடி பொருளாதாரம்!

மீண்டும் சந்திப்போம்  

Tuesday, December 17, 2019

தெரிந்து கொள்வோமே! குடியுரிமைச் சட்டத் திருத்தம்!

விஷயம் இன்னதென்று விளங்கிக் கொள்ளாமலேயே எந்த ஒருவிஷயத்தையும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ( இசுடாலின் ஞாபகம் வருகிறதா?) என்று கருத்தைச் சொல்வது நம்மூர் அரசியல்வியாதிகளுடன் பிறந்த துர்க்குணம்!  அதேபோல வாங்கின காசுக்குக் கூவுகிற அச்சு ஊடகங்களும் டிவி சேனல்களும், பொய்ச் செய்தி என்று தெரிந்துமே கூவுவது இங்கே பத்துப்பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பே   சோனியா அண்ட் கம்பெனி வளர்த்து விட்ட கலாசாரம் என்பது நினைவிருக்கிறதா? இப்போது கூட இந்த மாதிரிக் காசுக்குக் கூவுகிற ஊடகங்கள் Anti CAA Protest என்று ஓவர்டைம் வேலைசெய்து கூவிக் கொண்டு இருப்பதைக் கவனிக்கிறீர்களா? என்ன காரணம்?

2019 மே மாதம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்றதும் முந்தைய ஐந்தாண்டுகளில் நினைத்துக்கூடப் பார்த்தே இருக்கமுடியாத அதிசயங்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்பட்டன. இதற்கு முந்தைய பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எந்த ஒரு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டாலும், Parl.  standing committee / நிலைக்குழு பரிசீலனைக்காக அனுப்பவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூவுவதும், ஆளும் தரப்பு வேறுவழியில்லாமல் பணிந்துபோவதும் வாடிக்கையாகவே  இருந்தது. நிலைக்குழு பரிசீலனை என்பதே ஆறப்போட்டு விஷயத்தை சாகடிப்பது என்பது தான்! நிலைக்குழு விரைந்து பரிசீலித்து எத்தனை மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தீர்களானால் விஷயம் வெறும் பம்மாத்து வேலைதான் என்பது விளங்கும். காரணம் மக்கள்வையில் நிறைவேற்றப்பட்டாலும், ஆளும் கட்சிக்கு ராஜ்யசபாவில் போதுமான எண்ணிக்கை சமீப காலத்தில் இருந்ததே இல்லை என்பதால் இப்படி ஒரு அழிச்சாட்டியம்! 


இப்போதுகூட ராஜ்யசபாவில் பிஜேபிக்கு அதன் கூட்டணிக்கட்சிகளையும் சேர்த்தே பெரும்பான்மை இல்லை தான்! Floor Management என்று அவைகளை நிர்வகிக்கிற வல்லமையும் சாமர்த்தியமும்  அமித்ஷாவுக்கு நிறைய இருக்கிறது  என்பதோடு நாடாளுமன்றத் செயல்பாடுகளில் இருந்த அசிங்கமான கறையை நீக்க இப்போதுதான் நேரம்  வந்திருக்கிறது என்றும் சொல்லலாம் இன்றைக்கு குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் பற்ற வைக்கப்பட்ட  நெருப்பு பல்வேறு பகுதிகளிலும் பரவிக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்து பாரத்தீர்களானால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களுடைய  தள்ளிப்போடுகிற வேலை நாடாளுமன்றத்தில் எடுபடாமல் போனதில், தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைக்க இப்படி மாணவர் போராட்டங்கள், வன்முறைக்குப் பின்னால் இருப்பதை அரசியல் தெரிந்த எவருக்கும் எளிதாகப் புரிகிற விஷயம்தான்!   



முந்தைய நாட்களைப்போல அல்லாமல் தகிடுதத்தம் செய்கிறவர்களுடைய சாயம் உடனுக்குடனே வெளுத்து விடுவது தெரிந்தும் கூட, கோயபல்ஸ் வார்த்தைகளை  நம்பி முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் என்பது வேடிக்கைதான்! 

முத்தலாக் தடைச் சட்டம், ஆர்டிகிள் 370 abrogation, அயோத்தி தீர்ப்பு என்று வரிசையாகக் கலகம செய்யக் காத்திருந்தது எதுவும் பலிக்கவில்லை. மெஜாரிட்டி இல்லாத ராஜ்யசபாவிலும் அமித் ஷாவின் Floor management இற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுடைய கடைசிப் புகலிடம் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு போராட்டம், கலகம், வன்முறையில் இறங்கி விடும்  மாணவர்களைத் தூண்டிவிடுவதாகத்தானே இருக்க முடியும்! 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்  தடியடிவாங்கி மண்டை உடைந்தது மாணவர்களுக்குத் தானே தவிர, திடீர்  மொழிப்போர் தியாகிகளாக ஆன திமுக தலைமைக்கு  இல்லையே! 

வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்குப் பிறகு குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி, கொஞ்சம் விரிவாகப் பேசியது பிஜேபி வழக்கறிஞர் K T ராகவன் தான்! நிறைய சுவாரசியமான தகவல்களோடு சொல்கிறார். வீடியோ 54 நிமிடம். கேட்டுது தெரிந்து கொள்வோமே!

மீண்டும் சந்திப்போம்.       
       
           

Monday, December 16, 2019

மாணவர் எழுச்சியா? சமூகவிரோதிகளின் கைவண்ணமா?

வர வர போராட்டங்கள், கலவரங்கள், கலகங்கள், விஷமத்தனமான ஊடகத் திரித்தல்கள் என்பன வரை முறை மீறிப்போய்க் கொண்டிருக்கின்றன. சமூக விரோதிகள் ஆட்டுவிக்கிறபடி மாணவர்களும்  போராட்டங்களில் வன்முறையில் இறங்குவதை மிகுந்த கவலை, வலியுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுநாள் வரை வெளியில் அதிகம் தெரியாமலிருந்த ஜாமியா மில்லியா இஸ்லாமியாவும் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. டில்லியில் மாணவர்  போராட்டம் என்றால் அது JNUவில்தான் இருக்கும் என்பது இப்போது மாறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று வரிசையாக எங்கெல்லாம் பரவிக் கொண்டு வருகிறது என்பதை NDTV பரவசத்துடன் மிகைப் படுத்திப் படம்போட்டுக் காட்டுகிறது.
மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து கூவுவது ஒரு இளம்பருவக் கோளாறு என்பதைத் தாண்டி,  வேறு உள்நோக்கம் கொண்ட சமூக விரோதிகள், இடதுசாரிகள், அப்புறம் காங்கிரஸ், கழகங்கள் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் அஜெண்டாவோடு ஊடுருவுகிற போராட்டக் களமாகவும் மாறி வருவதை, எந்தவொரு தாய் தகப்பனும் கவலையோடு பார்க்காமல் இருக்க முடியாது. 


இது ஒரு சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை, இதில்  நீதிமன்றங்கள் எதையும் பெரிதாக செய்துவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கிறது.  A bench headed by Chief Justice S A Bobde on Monday also took serious note of the rioting and destruction of public property during protests against the Act and said the court will hear the plea if the rioting stops. The court said it cannot be held at ransom and the court will hear the petition in a ‘cool frame of mind.’  ஒருபக்கம் கலவரம், வன்முறை இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் தலையீடு வேண்டும் என்ற கோரிக்கை என்ற விசித்திரமான நிலைபாட்டை உச்ச நீதி மன்றம் கொஞ்சமல்ல நிறையவே  கவலையோடு கவனித்து எச்சரித்திருக்கிறது.


இது இன்று வீடியோ 2 நிமிடம் 

ஆனால் கலவரம், வன்முறை, பொதுச்சொத்துக்களை நாசப்படுத்துவது என்பதை ஒரு கலாசாரமாகவே வளர்த்து வருகிற மேற்குவங்கத்து ஆசாமிகளுக்கு இதெல்லாம் பொருந்தாது போல. மம்தா பானெர்ஜி முதல்வராகவும் இருந்து கொண்டு, வன்முறை, ரயில் எரிப்பு இவைகளை மறைமுகமாக ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். சட்டம் ஒழுங்கெல்லாம் கிடையாது! முடிந்தால்   ஆட்சியைக் கலைத்துப் பார் என்கிற சவடால் வேறு!  

  


சென்சஸ் NPR மக்கள் தொகைக்கணக்கெடுப்பு என்பது  பத்தாண்டுகளுக்கொரு முறை நடப்பதுதான். வருகிற ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை வீடு தேடி கணக்கெடுப்பு எடுக்க வருகிறவர்களுக்கு சரியான தகவல் சொல்வதற்குத்  தேவையான ஆவணங்கள் என்ன என்ன என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! இந்த  12 ஆவணங்களில் மூன்று இருந்தாலே போதுமானது.  

வேடிக்கை என்னவென்றால் NPR கணக்கெடுப்பிலும் மேற்கு வங்க முதல்வர் முதல் பாண்டிச்சேரி நாசா வரை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று சொல்கிற NRC தேசிய குடிமக்கள் ரிஜிஸ்தர் இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் தான் தொகுக்கப் படுகின்றன. மம்தா பானெர்ஜி NPR கணக்கெடுப்புக்குத் தயாராகும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது நம்மூர் அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்று.

டிஸ்கி: சென்சஸ்/NPR/மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதையும் மம்தா பானெர்ஜி தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார் என்பது இப்போதைய செய்தி நிலவரம்.    

மீண்டும் சந்திப்போம்.             

Sunday, December 15, 2019

துக்ளக் 50! மதுரை சிறப்புக் கூட்டத்தின் காணொளி

துக்ளக்  இதழின் பொன்விழா ஆண்டு துவங்குவதை ஒட்டி சிறப்புக்   கூட்டங்கள் இதுவரை சென்னை, கும்பகோணம், திருச்சி, மதுரை நகரங்களில் நடந்து முடிந்து இன்றைக்கு கோவையில் நடந்திருக்கிறது. மதுரை கூட்டத்தின் முழு வீடியோ கிடைக்குமா என்று தேடித் தேடிப்பார்த்ததில் இந்த 38 நிமிட வீடியோ மட்டும் தான் கிடைத்தது.

  
எத்தனையோ ஆகாவரிக் குப்பைகளைப் பார்த்துச் சலித்தவர்களுக்கு இந்தக் காணொளி கொஞ்சம் இதமாக இருக்கக் கூடும்.

மீண்டும் சந்திப்போம்.    

Saturday, December 14, 2019

ஊடக அறமும் அரசியல் போகிற போக்கும்!

ஊடக அறம், ஊடக தர்மம் என்பதெல்லாம் வெறும் கதையாகிப்போன தமிழக சூழலில் ஒருவர் ரங்கராஜ் பாண்டேவிடம் ஊடக தர்மம் என்றால் என்ன? கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன் என்று கேட்கிறார். ரங்கராஜ் பாண்டேவும் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறார்.

     
வீடியோ 11 நிமிடம்.உங்களுக்காவது பாண்டேவின் பதில் திருப்தி அளிக்கிறதா என்று சொல்லுங்களேன்! 


ஊடக அறமென்பது வாங்கின காசுக்குக் கூவுவது!காசு பெயரவில்லை என்றால் கொஞ்சம் இப்படிக்காகவும் கூவுவது! இதை ரங்கராஜ் பாண்டே வெளிப்படையாகச் சொல்வார் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறு! அது போகட்டும்! ஜூவியில் சொல்வதைப் பார்த்தால் இசுடாலின் துண்டுச் சீட்டைப் பார்த்துப் படித்தும் கூடத் தப்பும் தவறுமாக உளறுவது, சங்கிலிப் பறிப்பை சங்கிலிப் பருப்பாக மாற்றியது முதலான நிகழ்கால தமாஷாக்களை இனிமேல் பார்க்க முடியாதோ? 


உனாநிதி சைதாப்பேட்டையில் குடியுரிமைச்சட்டத் திருத்த மசோதா நகளைக் கிழித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தைப் பற்றி முகநூலில் எப்படிப் பதிவு செய்திருக்கிறார்களாம்? நடந்த கூத்துக்குச் சற்றே நெருக்கமாக இருந்த ஒரு வரலாற்றுச்சுவடு.   

"அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டது
பிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்
யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷா
அந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி நாம் எங்கு செல்வோம் என ஒலமிட்ட நேரம், அவர் எழும்பினார்
ஆம், உதயநிதி என்பவர் தைரியமாக எழும்பினார், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்திலே கிழித்தெறிந்தார், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று மீதி சட்டத்தை எடுத்து வந்து சென்னையிலே கிழித்தெறிந்தார்
இந்திய ராணுவமே வந்தாலும் அவரை நெருங்க முடியவில்லை, அவ்வளவு மக்கள் திரண்டனர்.
பழ கருப்பையா எனும் திமுக தியாகி அந்த கூட்டத்தில் தொலைந்தே போனார், இன்றுவரை அவரை பற்றிய தகவல் இல்லை, அது அமித்ஷாவின் சதியாக இருக்கலாம்
எனினும் நாடே அவர்பின் திரண்டது
அஞ்சிய அமித்ஷா சட்டத்தை வாபஸ் பெற்று அடுத்த நாட்டில் இருந்து இங்கு இஸ்லாமியர் வரகூடாது, இங்கிருக்கும் இஸ்லாமியர் வெளிநாடு செல்ல கூடாது என சட்டத்தை திருத்தினார்
இஸ்லாமிய மக்கள் அவரை நன்றியோடு நோக்கினர், இது காயிதே மில்லத் பிடித்து அழுத கருணாநிதியின் கரம் தொட்டு வளர்ந்த குழந்தை, உங்களுக்கு எக்காலமும் நானே காவல் என உதயநிதி சொன்ன பொழுது வானில் காப்ரியேல் தூதன் தோன்றி "திமுகவில் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே, உம் தகப்பனான முக ஸ்டாலினும் ஆசீர்வதிக்கபட்டவரே" என சொல்லி மறைந்தது
உதயநிதி என்றொரு போராளி இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இஸ்லாமியனோ ஒரு பள்ளிவாசலோ இருக்காது, நெல் வயலுக்கும் வாழை இலைக்கும் ஊட்டி காடுகளுக்கும் கூட காவிவண்ணம் அடித்திருப்பார்கள் படுபாவிகள்"
இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு இப்படித்தான் இருக்கும், ஏனென்றால் பெரியார் பற்றி இப்படித்தான் அன்றே எழுதிவைத்தார்கள்.


தினத்தந்தி நாளைய வரலாற்றை நேற்றே எழுதி முடித்து விடுகிற வித்தியாசமான ஊடகம். ஆயுத எழுத்து என்கிற இந்த நிகழ்ச்சி கூட காஷ்மீர் இளைஞர்கள் 500 ரூபாய் காசுக்கு ராணுவத்தின் மீது கல்லெறிகிற சூரத்தனம் போல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதே பாவம் என்று ஒரு  பேத்தல். இதை ஆரம்பித்து வைப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் என்பது கூடுதல் விசேஷம். வீடியோ 46 நிமிடம். பொழுதுபோக்க நல்லதொரு ஊடக விவாதம்.

காசுக்கு கூவுகிற ஊடகங்களில் போய்  யாராவது உண்மை, அறம் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்களா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.      
  

Friday, December 13, 2019

பட்டிக்காட்டான் ஜெய்!

பட்டிக்காட்டான் பட்டணத்தில் என்ற வலைப் பதிவிலும் பின்னர் கூகிள் ப்ளஸ்ஸிலும் எழுதிவந்த தேனிக்கார இளைஞர், நண்பர்  பட்டிக்காட்டான் ஜெய்  மாரடைப்பினால் காலமானார் என்ற துயரமான செய்தியை பதிவர் சேட்டைக்காரனுடைய முகநூல் பகிர்வில் பார்த்தேன். நேரில் முகம்பார்த்துப் பழகவில்லை என்றாலும் பதிவுலகிலும் கூகிள் ப்ளஸ்ஸிலும்  நல்ல நண்பராக இருந்தவர். மறைவுச் செய்தி உண்மையிலேயே கலங்கச் செய்கிறது.


என் தாய் உள்பட இந்த ஆண்டு, காலம் பிரித்தவர்கள் அனேகம். ஆனால், எனது வலையுலக நண்பர் Pattikattaan Jey காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்று வா நண்பா, அவ்வுலகில் அமைதி கொள்! ஓம் சாந்தி!  

பதிவுலகில் பழக்கமான நமக்கே இவ்வளவு வருத்தமாக இருக்கிறதென்றால் அவரைப் பிரிந்து வாடும் மனைவி, குழந்தைகள் நிலைமை என்னவாக இருக்கும்?

ஆண்டவனே காப்பு. நண்பர் ஜெய்க்கு அமைதியையும் நல்ல கதியையும் இறைவன் அளிக்கட்டுமென்று பிரார்த்தனை செய்வது ஒன்றே என்னால் முடிந்தது.

ஓம் சாந்தி!      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)