ஈரோட்டு வெங்காயமும் எகிப்து வெங்காயமும்! இந்த வெங்காய அரசியல் வாஜ்பாய் அரசை என்னமோ ஒருமுறை கவிழ்த்துவிட்டது என்பதற்காக வெங்காயம் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் ஆயுதமாக்கும் என்று இங்கே காங்கிரஸ், திமு கழகங்களும் அவர்களுக்கு விலைபோன ஊடகங்களும் நடத்திய கூத்தில் அந்த வெங்காயமே கண்ணீர் உகுத்திருக்கும்!
எகிப்திலிருந்து வெங்காய இறக்குமதி என்றவுடன்..தமிழகத்தில் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் அவரவர் அரசியல் சார்பிலிருந்து நடத்தும் வெங்காய அரசியல் கவனிக்க தக்கது.
வெங்காயம் விலை விண்ணைத் தொட்டுவிட்டது என்கிற அரசியலை தொடர நினைக்கும் கட்சிகளும், பதுக்கல் வியாபாரிகளும்..எகிப்து வெங்காயத்தை வாங்க தமிழக மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று பரப்புகிறார்கள்.
இன்னொரு தரப்பு...
எகிப்து வெங்காயமும், இந்திய வெங்காயம் போன்றது தான் . தோற்றத்தில் பெரிதாகவும் இருக்கிறது இவ் வெங்காயம்..என்று விளக்கி சொல்கிறது .
எகிப்து வெங்காயமும், இந்திய வெங்காயம் போன்றது தான் . தோற்றத்தில் பெரிதாகவும் இருக்கிறது இவ் வெங்காயம்..என்று விளக்கி சொல்கிறது .
மக்களை பொறுத்தவரையில்..
வெங்காயம் வந்துவிட்டது. விலை இறங்கித்தான் ஆகவேண்டும். பதுக்கல் வளையிலிருந்து வெளியே வந்துதான் ஆகவேண்டும்.
இது போன்ற நேரங்களில் எல்லாம்..பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய 'சேவ் விவசாயி' அரசியல் போராளிகள்.. கமுக்கமாக காணாமல் போய் விடுவதையும் தவறாமல் கவனிக்க வேண்டும்.
so called வெங்காய மண்ணின் வெங்காய அரசியல்.
#CAB -க்கு என்ன அவசரம் ? என்கிற மகா அசட்டுக் கேள்வியை ..ராஜயசபா விவாதத்தில் கேட்கிறது காங்கிரஸ் [ஆனந்த் சர்மா ]
பிஜேபி யின் தேர்தல் அறிக்கையிலேயே இதையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று சொல்லித்தான் வெற்றி பெற்றார்கள்.
மக்களும்...அதற்கு தான் பிஜேபிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஜனநாயகம் என்பது மக்கள் தீர்மானிப்பது.
பங்களாதேஷ் குடியேறிகளின் பிரச்சினை பூதாகரமாக மாறி இருப்பதற்கு காரணம்... 65 வருடங்களாக வாக்குவங்கி அரசியலை.. வரைமுறையின்றி,எல்லை மீறி முன்னெடுத்த போலி மதசார்பின்மை கட்சிகள் தான் என்கிற உண்மை அடிப்படையானது. பொறுப்பேற்பும் அவசியமானது.
ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டும்தான் செல்லுபடியாகும், நீதிமன்றத்தில் நிராகரிக்கப்படும் என்று காங்கிரஸ் வக்கீல்கள் மிரட்டுவதோ, அமளிதுமளியில் இறங்குவதோ ஒன்றுக்கும் ஆகப்போவதில்லை.
டிஸ்கி:
மாநிலங்களவையில் ஆதரவு 125/எதிர்ப்பு105 (இரண்டுமில்லாமல் நழுவல் 10) என்று குடியுரிமைச் சட்டத்திருத்தம் உத்தேசித்தபடி, வேறு திருத்தங்களின்றி நிறைவேறியது.
டிஸ்கி:
மாநிலங்களவையில் ஆதரவு 125/எதிர்ப்பு105 (இரண்டுமில்லாமல் நழுவல் 10) என்று குடியுரிமைச் சட்டத்திருத்தம் உத்தேசித்தபடி, வேறு திருத்தங்களின்றி நிறைவேறியது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment