Thursday, December 12, 2019

கொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை

பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்! ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும் டச் விட்டுப்போகாமல் பார்த்துக் கொண்டே இடைப்பட்ட நேரத்தில், நடப்புச் செய்தி ஒன்றையும் விட்டுவிடாமல் பார்த்துக் கொண்டு அதில் எது catchy ஆக இருக்கிறதோ அதைவைத்துப் பதிவும் உடனுக்குடன் எழுதி வெளியிடுகிற சோம்பேறி, கொஞ்சம் கௌரவமாகச் சொல்லிக் கொள்ள வேண்டுமானால் ஒரு ரிட்டையர்ட் ஆசாமி நானென்பது புதிதாகச் சொல்லித்தெரிய வேண்டிய விஷயமா என்ன!


சபாக்! வருகிற ஜனவரியில் வெளியாகவிருக்கிற ஹிந்தி திரைப்படம். படத்தில் நடித்த தீபிகா படுகோன் படத்தின் ப்ரொமோஷனுக்காக ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். இயல்புதான்! ஆனால் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவும் இப்படி உணர்ச்சி வசப் பட்டிருப்பது நெம்பவே ஓவர்தான்! இல்லையா?

  
நானுமே லேட்டஸ்ட் வரவுகளான The Report, The Irishman, Marriage story படங்களை பார்த்தாகிவிட்டது. விமரிசனமாக நாலுவார்த்தை  எழுதலாமே என்று எழுதினால் சும்மா படம் காட்டுகிறானே என்று அலுத்துக் கொள்வதற்குக் கூட ஆளே இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்பதில் என்ன பெருமை புதிதாக வந்து சேர்ந்துவிடப் போகிறது, சொல்லுங்களேன்!

        
யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech இப்படித் தலைப்பு வைத்துத்தான் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? வீடியோ 51 நிமிடம்


மதன் ரவிச்சந்திரன் ட்வீட்டரில் பொறிபறக்கக் கீச்சுக்களை வீசிக் கொண்டிருக்கிறார். 


நாட்டுநடப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் ஆசிரியர் சோ பேசியதைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியுமா?இது 2008 இல் பேசியதன் ஒருபகுதி 27 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.   
       

11 comments:

  1. அதிகாலையில் தொழில் ரீதியான மின் அஞ்சலுக்காக உள்ளே வரும் எனக்கு உங்கள் பதிவுகள் கண்ணில் பட்டால் மற்றது எல்லாம் மறந்து உங்கள் பதிவுக்குள் வந்தால் மீண்டும் வெளியே செல்ல அரைமணி நேரம் ஆகி விடுகின்றது. முக்கியமான நான் பார்க்காத படிக்காத செய்திகளை தந்து விடுறீங்க. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! கிண்டில் ப்ரொமோஷனில் தீவீரமாக இருக்கிறீர்கள்! அந்த ஒரு விஷயம் மட்டும் இன்னமும் எனக்கு கைவர மாட்டேனென்கிறது. மகன் ஊர்ப்பக்கம் வரும்போது அவனுடைய கிண்டிலை வைத்தே கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். லேப்டாப்பில் கையாளுவதுதான் எனக்கு இப்போதைக்கு சௌகரியமாக இருக்கும்.Random ஆகத் தேடிப்படிக்கிற எனக்கு கிண்டில் அல்லது e readers உதவியாக இருக்கக் கூடும்.

      Delete
    2. தலைவரே அது கம்பசூத்திரம் அல்ல. இந்த இணைப்பில் செல்லுங்கள். கணினி அல்லது லேப்டாப்

      https://www.amazon.com/Amazon-Digital-Services-LLC-Download/dp/B00UB76290?th=1

      தரவிறக்கம் செய்து கொள்ளுங்க. அவர்கள் கட்டளையை புரிந்து கொள்ளுங்க. அதில் நீங்க தேடும் புத்தகத்தை கண்டு பிடிங்க.

      இது என் பக்கம்
      https://www.amazon.com/Jothi-Ganesan/e/B07PFG8VC1/ref=dp_byline_cont_ebooks_2

      Delete
    3. https://www.amazon.in/Jothi-Ganesan/e/B07PFG8VC1/ref=dp_byline_cont_ebooks_2

      இந்த இணைப்பு இந்திய வாசகர்களுக்கு உரியது. இந்திய ரூபாயில் காட்டும்.

      Delete
    4. ஜோதிஜி! என்னுடைய லேப்டாப்பில் ஏற்கெனெவே கிண்டில் app இருக்கிறது. mobi format உள்ளிட்டு வெவ்வேறு வடிவங்களில் மின்னூல்களைப் படிக்கக் கூடிய வசதி கூட இருக்கிறது. epub வடிவில் புத்தகங்களை படிக்க என்னிடம் மூன்று apps இருக்கின்றன. அதிகம் பயன்படுத்துவது freda சுமார் 700 புத்தகங்கள் epub வடிவத்தில் என்னிடம் இருக்கின்றன.

      பிரச்சினை கிண்டிலை தரவிறக்கம் செய்துகொள்வதோ காசு கொடுத்து வாங்குவதோ அல்ல. அந்தவடிவத்தில் புத்தகங்களைப் படிப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது. என்னுடைய மகன் கிண்டிலில் புத்தகங்களை வாசிப்பான். நேரடியாக கிண்டிலில் வாசிக்கிற அனுபவம் வேறு.என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் ஒரு புத்தகத்தையாவது அதில் முழுதாக வாசித்துப் பார்க்க முடிகிறதா என்று கொஞ்சம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

      Delete
  2. நானும் தவறாமல் உங்கள் பக்கம் வந்து பார்த்து விடுகிறேன்.  ஆனால் கமெண்ட் எப்போதாவதுதான் இடுவதற்கு காரணம் பல விஷயங்கள் என் அறிவுக்கு எட்டாதவை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! என் அறிவுக்கு மட்டும் எட்டிவிடுகிறதா என்ன? :-)))
      இந்தப்பதிவிலேயே 5 விஷயங்களை மேலோட்டமாகத் தொட்டிருக்கிறேன். அதில் ஒன்று கூடவா உங்களைப் பேச வைக்கவில்லை?

      Delete
  3. முதல் பாராவில் சொல்லி இருக்கும் உங்கள் பன்முக சுவாரஸ்யம் வியக்கத்தக்கது.  போற்றத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. ஆத்மசுகத்துக்காகத் தேடுவதை விட்டுவிட்டு, சாரமே இல்லாத விஷயங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு வெட்டி ஆசாமி என்று என்னைப்பற்றி சுருக்கமாகச் சொல்லிவிடலாம் ஸ்ரீராம்!

      Delete
    2. கலைஞரிடம் ஒரு முறை தலைவரே அவன் வெட்டித்தனமாக ஏதோ ஒருத்தன் உங்களைப் பற்றி எழுதி விட்டான் என்பதற்காக நீங்கள் அறிக்கை மூலம் ஆதார தகவல்களைப் பற்றி தேடி எடுத்து கண்டு பிடித்து எழுதுறீங்க என்றாராம். அதற்கு கலைஞர் சொன்ன பதில், அது இல்லப்பா நாளைக்கு அவன் எழுதியது சரியாக தவறா இது தான் உண்மையா என்று யாரோ ஒருவர் தேடிப் பார்ப்பார். அப்போது நாம் எழுதியதும் அவர் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்றாராம். அது போல நீங்கள் செய்து கொண்டிருப்பது அடுத்த கட்டமாக தேடி கண்டு அடைபவர்களுக்கு மட்டுமே. அதை எப்போது கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வலைபதிவில் ஜிலுஜிலுப்பு விமர்சனங்களால் ஒன்றும் பலம் இல்லை. இவர் இதைப் பற்றி என்ன சொல்லி உள்ளார் என்று தேடி வரக்கூடியவர் தான் நமக்கு முக்கியம். ஜெயமோகன் தளத்திற்குக்கூட நான் இப்போது சில சமயம் தான் செல்கிறேன். உங்கள் தளத்திற்கு தினமும் வந்து விடுகிறேன். சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு நான் பேஸ்புக்கில் எழுதவும் செய்கிறேன். நன்றி.

      Delete
    3. பின்னூட்டங்கள் அல்லது பின்தொடர்கிறவர்கள் எண்ணிக்கையில், இப்போது என்று அல்ல, பதிவுகளைத் தமிழில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே, ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை ஜோதிஜி! ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்ததில் கற்றுக் கொண்ட ஒரு சில நல்லவிஷயங்களில், கூட்டத்தின் எண்ணிக்கையைப் பார்த்து மங்காதிருப்பதும் ஒன்று. முதல் பாராவில் சொல்லிக் கொண்டது ஒரு சுய எள்ளல் மட்டுமே.

      வலைப்பதிவுகள் எழுதுவதே நம்முடைய கருத்து அல்லது கவனப்படுத்த விரும்புகிற செய்தியைச் கொள்வதற்காகத்தான். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே அல்ல என்பதற்காகத்தான் சீரியசான செய்திகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். .

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)