மதன் ரவிச்சந்திரன் தைரியமாக ஒரு முடிவுடனேயே தன்நிகழ்ச்சிகளை, கேள்விகளை வடிவமைக்கிறார் என்று தான் தோன்றுகிறது. முந்தைய பதிவொன்றில் சொன்ன மாதிரி இசுடாலின், திராவிட அரசியலைச் சந்திக்கிழுக்கிற மாதிரியே இரண்டுபேர், மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன் தொடர்ந்து செயல்பட்டு வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகப் பார்க்கிறேன்!
திருமாவளவனைத் தட்டிக் கேட்டமாதிரி இசுடாலினைத் தட்டிக் கேட்கமுடியுமா என்று காயத்ரி ரகுராமிடம் கொக்கி போட்டுக் கேட்பது மிக சுவாரசியம். வீடியோ 23 நிமிடம். மதன் ரவிச்சந்திரன் ட்வீட்டரில் இந்த நேர்காணல் குறித்து "நான் RSS நெறியாளர் சரி பிரச்னையில்லை..ஆனால் என்னால ஒரு பாஜக ஆதரவு நடிகையிடம் ஊடக அறத்தை காக்க ஐயா திருமாவளவனுக்கு சார்பாக நேர் எதிர் கேள்விகளை சமரசமின்றி கேட்க முடியும்.. திடல் நெறியாளர்களால் திமுகவினரை இப்படி கேட்க முடியுமா?? அப்படி கேட்டுவிட்டால் ஊடகத்தை விட்டே விலகுகிறேன்". என்று ஒரு நேரடிக்கேள்வியை எழுப்பியிருக்கிறார்
கர்நாடக அரசியல்களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது 15 தொகுதிகளுக்கு .இடைத்தேர்தல்கள் வருகிறதே! வழக்கம்போல sex scandals கிளப்பிவிடப்படுகின்றன. தேவே கவுடா கூட தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு டிசம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு எடியூரப்பா அரசுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார். சித்தராமையா காங்கிரஸ் 15 தொகுதிகளில் 12 ஐ நிச்சயமாக வெல்லும், மறுபடியும் JDS கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பாருங்கள்! கடந்த மார்ச்மாதம் JDSகட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்த முயன்ற போது அதிகாரிகளைத் தடுத்ததாக , காவல்துறை கையைக்கட்டி வேடிக்கை பார்த்ததாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட குமாரசாமி, சித்தராமையா இன்னும் பலர் மீது பல பிரிவுகளின் கீழ் எட்டுமாதங்களுக்குப் பின்னால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் செக்ஷன் 124 செடிஷன் தேசத்துரோகம் என்பதும் அடக்கம், ஆக,
கருநாடகம் மறுபடியும் கிடந்து நாறப் போகிறதா என்ன?
மாநில துணை தலைவர் அரசகுமாரின் பேச்சு..
தமிழக பா ஜ க...இன்னும் என்னென்ன விநோதங்களை எல்லாம் நிகழ்த்தப் போகிறதோ...
ரஜினி +காங் + பிற கட்சிகள் கூட்டணி உருவானால்..எதிரில் .. மாற்று கூட்டணி என்கிற நகர்வுக்கான முன்னோட்டம் ?
கார்டூனிஸ்ட் அமரனும் பானு கோம்சும் பேசிவைத்துக் கொண்டு கார்டூனோ முகநூல் பகிர்வோ பகிரவில்லை! டாக்டர் யக்கோவ் இடத்தைக் காலி செய்தபிறகும் கூட தமிழக பிஜேபி களிமண்ணாலான கால்களோடுதான் ரேசில் ஓடப்போகிறதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment