Sunday, December 8, 2019

உளறல் திலகமும் சால்வை அழகரும்! #அரசியல்

எகனாமிக் டைம்ஸில் ராகுல் காண்டியின் உளறல் ஒரு 38 செகண்ட் வீடியோவாகப் பார்த்தபோது, முதலில் இதையெல்லாம் ஒரு அரசியல் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ற ஒரு சலிப்பு, வெள்ளிக்கிழமைப் பதிவில்  KG கௌதமன் பின்னூட்டத்துக்குப் பதில் சொன்ன போதே எழுந்தது. 


இப்படி அவதூறுகளிலேயே அரசியல் செய்வதைக் காங்கிரஸ் 1980களின் மத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக்கதையை இங்கே  கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   அன்றைக்கு ராஜீவுக்கு Rediffusion போல ஒரு விளம்பர ஏஜென்சி மூளையைக் கசக்கிக் கொண்டு விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் மகன் ராகுல் காண்டிக்கு Rediffusion போல எதுவும் தேவையிருந்ததில்லை. வாய்க்கு வந்ததைப் பேசுவது, வாயிலேயே வடை சுடுகிற கலை போதும் என்று உளறுவது வாடிக்கையாகி விட்டது.

சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் இதைக்குறித்துப் பொங்கி விட்டார்: 
சர்வதேச சமூகம் இந்தியாவை ’கற்பழிப்பு தலைநகரம்,’ என்று ஏளனம் செய்வதாக, தனது வயநாடு தொகுதி விஜயத்தின்போது சொற்பொழிவாற்றியுள்ளார் பப்பு. நமக்குத் தெரிந்து வயநாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயநாட்டிலிருந்தும் இப்படியொரு பழிச்சொல் வந்ததாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வாயிலிருந்து உண்மையை எதிர்பார்ப்பது, அறிவாலயத்திலிருந்து மூலப்பத்திரம் வருமென்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும் என்றாலும், கொஞ்சம் பின்னோக்கிப் போனால், காங்கிரஸின் யோக்யதை எப்பேர்ப்பட்டது என்பதையாவது புரிந்து கொள்ளலாம் என்பதாலேயே இப்பதிவு.
ஹைதராபாத் கொடூரம் நிகழ்ந்தபிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ராஜஸ்தானில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் என்ன கூறினார் தெரியுமா?
”சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்கள் கருணைமனு அளிக்க அனுமதிக்கக் கூடாது” இந்தச் செய்தி எல்லா ஊடகங்களிலும் பரவலாக பரப்பப்பட்டுள்ளதால் சுட்டி தரவேண்டிய நிர்ப்பந்தமில்லை.
சரி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இப்படி; காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் எப்படியென்பதையும் சற்றுப் பார்ப்போமா?
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பண்ட்டூ…
6 வயது சிறுமியை நாசமாக்கிக் கொன்ற சதீஷ்..
10 வயது சிறுமியைக் கூட்டு வன்புணர்ச்சியில் சிதைத்துக் கொன்ற மோலாய் ராம் மற்றும் சந்தோஷ் யாதவ்…
சிறுமியைக் கெடுக்கிற முயற்சியில் அவளது குடும்பத்தையே கொன்று குவித்த தர்மேந்திர சிங் மற்றும் நரேந்திர யாதவ்…
மேற்கூறிய காமக்கொடூரர்களின் கருணை மனுவைப் பரிசீலித்த புண்ணியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீலுக்கு உண்டு.
(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா-20-டிசம்பர்-2012-search: Presidential pardon saved rapists the noose)
அது மட்டுமா?
மறைந்த ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது, தில்லியில் சௌம்யா விஸ்வநாதன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டபோது, ‘அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் ஒரு பெண் தனியாக வெளியே வரலாமா?’ என்று கேட்டவர்தான் ஷீலா தீட்சித். அப்போது, பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். நடந்து கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி.
நிர்பயா கொடூர சம்பவம் நினைவிருக்கிறதா? தில்லியையும், இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிப்போட்ட அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சொன்னது என்ன தெரியுமா?
”ஒப்புக்கொள்கிறேன். உண்மையிலேயே டெல்லிதான் கற்பழிப்புத் தலைநகரம்.”
(ஆதாரம்:இந்தியா டுடே; 21 டிசம்பர் 2012 –search: Sheila Dikshit admits Delhi is rape capital, says 'no courage to meet the gangrape victim, I am ashamed')
ஆனால், பின்னாளில் ‘நிர்பயா சம்பவத்தை ஊதிப் பெரிது படுத்தி விட்டார்கள்,’ என்று சொன்னவரும் இவர்தான். (ஆதாரம்: டைம்ஸ் நௌ-5-மே-2019-search: '2012 Gang-rape was blown out of proportion by media', Former Delhi CM Sheila Dikshit)
பின்னாளில் இதே ஷீலா தீட்சித் ’டெல்லியில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று என் மகளே கருதுகிறாள்’ என்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
(ஆதாரம்: என்.டி.டிவி 08-மார்ச்-2013-search: My daughter feels insecure in Delhi: Sheila Dikshit to NDTV)
இந்த லட்சணத்தில்தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இருந்து வந்தது. இவனுகளுக்கெல்லாம் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் புரியவில்லை. (ராகுல் காந்தி மீதே உ.பியில் கூட்டு வன்புணர்ச்சி குற்றச்சாட்டு இருக்கிறது என்பது கூடுதலான செய்தி!)
காந்தியைப் பெயரில் சேர்த்துக்கொண்டிருக்கும் ராகுல் போன்றவர்களெல்லாம், பிரிவினை சமயத்திலும், நவகாளி சமயத்திலும், அஸாம் கலவரத்தின்போதும், நெருக்கடி நிலையின்போதும், சீக்கியர் கலவரத்தின் போதும் எத்தனை பெண்கள் சூறையாடப்பட்டனர் என்ற வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவது, மிச்சம் மீதமிருக்கிற அவர்களது மானத்துக்கு நல்லது. மொத்தமாக மானமில்லையென்றால், இது போன்று உளறுவதற்கு டிக்-டாக் வீடியோ போட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளட்டும். 

பகிர்வுக்கு வந்த ஒரு பின்னூட்டம் 

Kavitha Hariharan வரலாற்றை படிக்கறதா?
பெண் டாய்லெட் ன்னு வாசிக்க தெரியாம நுழைந்த மேதாவி. அவ்ளோ புத்தி இருந்தா கண்டபடி உளற மாட்டான். 
இவனையும் தலைவர் னு கூவற கூமுட்டைகளை தான் எதாவது சொல்லனும்..

முகநூலில் இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு! 

  
ராகுல் உளறலுக்குப் பிறகு இப்படி ஒரு காமெடிக் கொடுமை! காங்கிரஸ் ஏன் தேறவே மாட்டேன் என்கிறது?  காரணம், கோளாறு எங்கே என்று புரிகிறதா?


அப்பச்சியின் வாய்க்கொழுப்பு எப்படிப்பட்டது என்பது தெரிந்த விஷயம் தான்! தெரியாதவர்கள் இந்த 15 நிமிட வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பொய் சொல்வது, புள்ளிவிவரங்களைத் திரிப்பது சீனாதானாவுக்குக் கைவந்த கலை. ஊழல் குற்றத்தில் சிறைக்குப் போனதை வெட்கமே இல்லாமல் வஉசியுடன் எப்படித்  தன்னை ஒப்பிட்டுக் கொள்வார் எப்படி பாரதியாரின் கவிதை வரிகளைத் தனக்குச் சாதகமாக்கிக்  கொள்வார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?        அப்பச்சி எப்படித் தேனொழுக வாயில் வடை சுடுவார் என்ற கலையை அவரிடமிருந்து தான் ராகுல் காண்டி கற்றுக் கொள்ள வேண்டுமோ? 

மீண்டும் சந்திப்போம். 
  

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)