ஒருவழியாக கருநாடகத்தில் எடியூரப்பா தன்னுடைய பிடிவாதத்தில் ஜெயித்துவிட்டார் என்றே இடைத்தேர்தல் முடிவுகளின் போக்கு தெரிவிக்கிறது. காங்கிரசின் பணப்பை D K. சிவகுமார் காங்கிரசின் தோல்வியை ஒப்புக்கொள்கிற மாதிரி, இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் மாதிரி இருக்காது என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். இதற்கெல்லாம் முன்னோடியாக இங்கே கருணாநிதி தோற்றதற்கெல்லாம் புள்ளிவிவரம் சொல்லிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா?
உள்ளூர் சேனல்களைத் தவிர NDTV ஒன்றுதான் கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பற்றி மிகக்கவலையோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிற மாதிரி இருக்கிறது. பிஜேபி முன்னிலை வகிக்கும் 12 தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் பிஜேபிக்கு அமைப்பு ரீதியான இருப்பே இதற்கு முன்னால் இருந்தது கிடையாது என்று ஒருவர் கவலைப்படுகிறார்.
ஆளும் கட்சிக்குத்தான் இடைத்தேர்தல்களில் advantage அதிகம் என்ற பொதுவான தியரிக்கு இது முரணாக இருப்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் தனது செல்வாக்கை 9 தொகுதிகளில் இழந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள இன்னமும் மனம் வரவில்லை என்பது NDTV செய்தியைத் தற்போது கவனித்துக் கொண்டு வருவதில் கிடைக்கும் சுவாரசியம். அதை விட, ஒக்கலிகர் வாக்குகளையும் அதிகமாக பிஜேபியால் மாண்டியா சுற்றுவட்டாரத்தில் பல தொகுதிகளிலும் பெற முடிந்திருக்கிறது என்பதை D K சிவகுமாரோ, தேவே கவுடாவோ வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டுமோ?
இன்றைக்கு லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்யவிருக்கிறார். இன்றும் நாளையும் இதன் மீது சூடான விவாதங்கள் இருக்கும்! இதை எதிர்க்கிற காங்கிரஸ் உள்ளிட்ட சிலகட்சிகளின் நிலைபாடு என்னவென்பதைத் தெரிந்து கொள்ள ஊது குழல் சேகர் குப்தா இந்த 10 நிமிட வீடியோவில் சொல்வது கொஞ்சம் உதவலாம். இங்கே தமிழ்நாட்டில் ஜவாஹிருல்லா என்பவர் இது முஸ்லிம்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரானது என்று ஏற்கெனெவே தீர்ப்பு சொல்லிவிட்டார். முஸ்லீம் வாக்குகளை அதிகம் நம்பி இருக்கிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதோடு மேற்குவங்கத்தில் அமல்படுத்தவிட மாட்டோம் என்று சபதம் போட்டிருக்கிறது என்பதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் இந்தச் சட்டத்திருத்தம் அவசியம் தான் என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறதோ?
People have accepted the defectors. We have accepted defeat, I don't think we have to be disheartened இது கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகளைக் குறித்து D K சிவகுமார் சொன்னதுதான் இந்தநேரத்து அரசியல் செய்திகளின் உச்சம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment