விஷயம் இன்னதென்று விளங்கிக் கொள்ளாமலேயே எந்த ஒருவிஷயத்தையும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ( இசுடாலின் ஞாபகம் வருகிறதா?) என்று கருத்தைச் சொல்வது நம்மூர் அரசியல்வியாதிகளுடன் பிறந்த துர்க்குணம்! அதேபோல வாங்கின காசுக்குக் கூவுகிற அச்சு ஊடகங்களும் டிவி சேனல்களும், பொய்ச் செய்தி என்று தெரிந்துமே கூவுவது இங்கே பத்துப்பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பே சோனியா அண்ட் கம்பெனி வளர்த்து விட்ட கலாசாரம் என்பது நினைவிருக்கிறதா? இப்போது கூட இந்த மாதிரிக் காசுக்குக் கூவுகிற ஊடகங்கள் Anti CAA Protest என்று ஓவர்டைம் வேலைசெய்து கூவிக் கொண்டு இருப்பதைக் கவனிக்கிறீர்களா? என்ன காரணம்?
2019 மே மாதம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்றதும் முந்தைய ஐந்தாண்டுகளில் நினைத்துக்கூடப் பார்த்தே இருக்கமுடியாத அதிசயங்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்பட்டன. இதற்கு முந்தைய பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எந்த ஒரு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டாலும், Parl. standing committee / நிலைக்குழு பரிசீலனைக்காக அனுப்பவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூவுவதும், ஆளும் தரப்பு வேறுவழியில்லாமல் பணிந்துபோவதும் வாடிக்கையாகவே இருந்தது. நிலைக்குழு பரிசீலனை என்பதே ஆறப்போட்டு விஷயத்தை சாகடிப்பது என்பது தான்! நிலைக்குழு விரைந்து பரிசீலித்து எத்தனை மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தீர்களானால் விஷயம் வெறும் பம்மாத்து வேலைதான் என்பது விளங்கும். காரணம் மக்கள்வையில் நிறைவேற்றப்பட்டாலும், ஆளும் கட்சிக்கு ராஜ்யசபாவில் போதுமான எண்ணிக்கை சமீப காலத்தில் இருந்ததே இல்லை என்பதால் இப்படி ஒரு அழிச்சாட்டியம்!

இப்போதுகூட ராஜ்யசபாவில் பிஜேபிக்கு அதன் கூட்டணிக்கட்சிகளையும் சேர்த்தே பெரும்பான்மை இல்லை தான்! Floor Management என்று அவைகளை நிர்வகிக்கிற வல்லமையும் சாமர்த்தியமும் அமித்ஷாவுக்கு நிறைய இருக்கிறது என்பதோடு நாடாளுமன்றத் செயல்பாடுகளில் இருந்த அசிங்கமான கறையை நீக்க இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது என்றும் சொல்லலாம் இன்றைக்கு குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு பல்வேறு பகுதிகளிலும் பரவிக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்து பாரத்தீர்களானால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களுடைய தள்ளிப்போடுகிற வேலை நாடாளுமன்றத்தில் எடுபடாமல் போனதில், தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைக்க இப்படி மாணவர் போராட்டங்கள், வன்முறைக்குப் பின்னால் இருப்பதை அரசியல் தெரிந்த எவருக்கும் எளிதாகப் புரிகிற விஷயம்தான்!
Various jihadi journalists spread fake news which provoked violent protests in Kerala
Kerala: Jihadi Journos Working For Islamist Media Called Out For Spreading Fake News About Jamia Students Dying by Swarajya Staff - Dec 17 2019, 6:41 pm, Protest by Jamia students (@rajshekhartoi/Twitter) A few journalists working for Malayali publications spread malicious fake news about Jamia Mili...
முந்தைய நாட்களைப்போல அல்லாமல் தகிடுதத்தம் செய்கிறவர்களுடைய சாயம் உடனுக்குடனே வெளுத்து விடுவது தெரிந்தும் கூட, கோயபல்ஸ் வார்த்தைகளை நம்பி முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் என்பது வேடிக்கைதான்!
முத்தலாக் தடைச் சட்டம், ஆர்டிகிள் 370 abrogation, அயோத்தி தீர்ப்பு என்று வரிசையாகக் கலகம செய்யக் காத்திருந்தது எதுவும் பலிக்கவில்லை. மெஜாரிட்டி இல்லாத ராஜ்யசபாவிலும் அமித் ஷாவின் Floor management இற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுடைய கடைசிப் புகலிடம் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு போராட்டம், கலகம், வன்முறையில் இறங்கி விடும் மாணவர்களைத் தூண்டிவிடுவதாகத்தானே இருக்க முடியும்! 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தடியடிவாங்கி மண்டை உடைந்தது மாணவர்களுக்குத் தானே தவிர, திடீர் மொழிப்போர் தியாகிகளாக ஆன திமுக தலைமைக்கு இல்லையே!
வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்குப் பிறகு குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி, கொஞ்சம் விரிவாகப் பேசியது பிஜேபி வழக்கறிஞர் K T ராகவன் தான்! நிறைய சுவாரசியமான தகவல்களோடு சொல்கிறார். வீடியோ 54 நிமிடம். கேட்டுது தெரிந்து கொள்வோமே!
மீண்டும் சந்திப்போம்.
நேற்று மகளிடம் இந்தச் சட்டம் சாதக பாதகம் எதிர்க்கட்சியின் எண்ணங்கள் உண்மையான நிலவரங்கள் இந்தியாவை சூழ்ந்திருக்கும் ஆபத்து காங்கு வின் அடிப்படை குணாதிசியம் பாஜக உருவாக்க நினைக்கும் மாற்றங்கள் ஏன் பாஜக சீர்திருத்தங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்துகின்றார்கள் என்பதனைச் சொல்லிவிட்டு யூ டியுப் ல் சில வட இந்தியச் சேனல்களை வன்முறைகளைக் காட்டினேன். நீங்கள் செய்ய வேண்டியது இது போன்ற ஒவ்வொரு சமயத்திலும் நடக்கும் (வன்முறைக்காட்சிகளை) இங்கே ஆவணப்படுத்தவும். நீங்கள் நச் என்று கொடுக்கும் காட்சிகளைப் போல என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ReplyDeleteஅரசியலைப் புரிந்துகொள்ள இப்போதிலிருந்தே தயார் செய்வது கூட நல்லதுதான் ஜோதிஜி! ] ஆனால் இப்போது அவர்களுக்கு முக்கியம் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பது ஒன்றுதான். என்னுடைய அலைபேசி எண் இருக்கிறதல்லவா ரிங் செய்து அவர்களிடம் கொடுங்கள்! பேசுகிறேன்!
Deleteகுழப்பமாக இருந்த பல விஷயங்களை திரு.ராகவன் அவர்களின் உரை தெளிவு படுத்தியது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete