Wednesday, December 4, 2019

அரசியல் படுத்தும் பாடு!

சால்வை அழகர் பானாசீனாவுக்கு ஒருவழியாக நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு ஜாமீன் வழங்கி இருக்கிறது. இரண்டுவழக்குகளிலும் ஜாமீன் வழங்கப் பட்டுவிட்டதால் சீனாதானா இனி சுதந்திரப்பறவை தானா? டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறாராம்?

   
இந்த இரண்டுமட்டும்தானா? இன்னும் பல வழக்குகள் இருக்கின்றனவே! அவைகளில் கைது செய்வதற்கு எந்தத் தடையுமில்லையே! உள்ளே வெளியே உள்ளே என்று சிறைக்குப் போய்வந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார் டாக்டர் சுவாமி. கேட்கவே கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது!


திஹார் ஜெயிலுக்குப் போய் பெயில் கிடைத்து வெளியே வந்தால் மானாட மயிலாடத் தாரைதப்பட்டை கிழிய வரவேற்பெல்லாம் கிடையாதா?  வெறுமனே ஹோய் ஹோய் கூச்சல் போடுகிற கூட்டம் மட்டும் தானா? வீடியோ 14 நிமிடம்.

பாலச்சந்திரன் சு
ஏன் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா மற்றும் வதேரா இவர்களுக்கு
SPG பாதுகாப்பு தேவையில்லை என்று விளக்கப்பட்டது...இவர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கை மூலம் தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று SPG பாதுகாப்பை அலட்சியம் செய்து நடந்து வந்தது மட்டுமே காரணம்...
இதைக் குறிப்பிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா...
* சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ஒருவர் இரவு கடந்த நேரங்களில் லுட்டின்ஸ் வீதிகளில் மணிக்கு 100 கிமீ க்கும் மேல் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து ஓட்டிச் செல்பவரை துரத்தி துரத்தி பாதுகாப்பு தர வேண்டிய நிலைக்கு SPG பாதுகாப்பு படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அப்படி சென்றவர் யார் என்பதை உங்களுக்கு விட்டு விடுகிறேன் என்று விடுகதை போட்டு அமித் ஷா பேசுகையில் நிறுத்திய போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கூச்சல் போட்டனர்...இப்படி நள்ளிரவு நேரத்தில் சென்றவர் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது...
* 2015 முதல் ராகுல் காந்தி...247 வெளி நாட்டு பயணத்தில்...1892 உள் நாட்டு பயணத்தில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
* சோனியா காந்தி...29 முறை வெளிநாட்டு பயணத்தில்...50 முறை டெல்லியில்...
13 முறை உள்நாட்டு பயணத்தில் SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை...
* பிரியங்கா வதேரா....94 வெளிநாட்டு பயணத்தில்...339 முறை டெல்லியில்...
64 முறை உள்நாட்டில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங்க்கு SPG பாதுகாப்பு விலக்கப்பட்ட போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு அளிக்கும் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதே தவிர வாபஸ் பெறவில்லை...Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் அமித் ஷா...
இவர்களது நடவடிக்கை அனைத்தும் SPG பாதுகாப்பு படையினரை அவமதிப்பு செய்து தங்களது பின்னால் அவர்கள் ஓடி வர வேண்டும் என்று கேவலமான முறையில் சோனியா குடும்பத்தினர் நடந்து கொண்டது தான்...
இன்னமும் சோனியா குடும்பத்தினர் திருந்தவே இல்லை மற்றும் டெல்லி சுல்தான்கள் போல நடந்து வருகின்றனர்.இவர்களது நடவடிக்கைகளே தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது போலவும் தங்களுக்கு SPG பாதுகாப்பு தேவையில்லை என்பது போலவும் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது....
பிரியங்கா வதேரா நாடகம்...மீண்டும் SPG பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பிரியங்கா வதேரா வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்...
நான்கு தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்து விட்டது என்று புகார் தெரிவித்தார் பிரியங்கா வதேரா...
என்ன நடந்தது என்றால் காலை 9 மணிக்கு கருப்பு நிற SUV காரில் ராகுல் காந்தி வருவதாக பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தரப்பட்டது. எனவே ராகுல் காந்தியின் கார் சோதனை இல்லாமல் உள்ளே அனுமதி தருவது நடைமுறையில் உள்ளது...
இதை தவறான முறையில் பயன்படுத்தி கறுப்பு நிற SUV காரில் மீரட் காங்கிரஸ் கட்சி தலைவர் சாரதா தியாகி அதே 9 மணிக்கு வந்ததும் காரை உள்ளே செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது என்ற உண்மை தற்போது வெளியே வந்து விட்டது...
பிரியங்கா வதேரா நாடகம் அம்பலமானது...
டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்ய சபாவில் பேசுகையில்....SPG பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவருடன் உள்ள உடனடியாக உள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது...ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியவர்களுக்கு SPG சட்டத்தை திருத்தம் செய்து பாதுகாப்பு தரப்பட்டுள்ளது..இந்திரா காந்திக்கு தனது மெய் காவலர்கள் மூலம் உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை புறக்கணித்து விட்டதால் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
ராஜிவ் காந்தியை படுகொலை செய்த 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று திமுகவின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டது...
மேலும், கொலை குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறைகளை மீறி பிரியங்கா வதேரா நளினியை சிறையில் சென்று சந்தித்து பேசினார்..இதனால் விடுதலைப் புலிகள் மூலம் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்...
மேலும் தனக்கே உரித்தான பாணியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அவர் மீது உள்ள ஊழல், முறைகேடுகள் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் தண்டனை விதித்து சிறையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி....
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் மற்றும் அவரது வசிக்கும் உடனடி குடும்பம் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு பதவி விலகிய பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கப்படும் என்ற SPG சட்டத் திருத்தம் நிறைவேறியது....


மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. டெல்லி ஹரியானா சாலையில் ராகுல் செய்த புனிதப் பணிகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டவர் எழுத வில்லை என்பது எனக்கு மட்டுமல்ல உங்கள் வாசகர்களுக்குநீங்கள் செய்யும் துரோகமாகும். பிரியங்கா மற்றும் ராகுலைப் பார்த்தால் என்னிடம் கேட்க சில கேள்விகள் உண்டு.

    1. உங்கள் பாட்டனார் நேரு எழுதிய அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டீர்களா?
    2. உங்கள் பாட்டி இந்திரா குறித்து வந்துள்ள 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் படித்து விட்டீர்களா?
    3. உங்கள் அப்பா ராஜீவ் குறித்து பலரும் எழுதியுள்ள பல புத்தகங்களையும் படித்து விட்டீர்கள்?
    4. உங்கள் அம்மா குறித்து சுப்ரமணியன் சுவாமி சொல்லும் விசயங்கள் உண்மையா? பொய்யா? என்று ஏன் பொதுவெளியில் பேச முன்வருவதில்லை.
    5. மன்மோகன் இன்று 4.5 ஜிடிபி ஆபத்து என்கிறாரே? அவரின் பத்தாண்டு காலத்தில் நடந்த மிக மிக கேவலமான ஊழல்கள் குறித்து பலரும் பல புத்தகங்கள் எழுதி உள்ளார்களே? படிக்க நேரம் கிடைக்குமா?
    6. ஏன் ஜெயந்தி நடராஜன் அவர்களை துரத்தி துரத்தி பழிவாங்குனீங்க ராகுல். அவருக்கு அடையாளம் இல்லாமல் செய்த பாவம் இன்று உங்களை அரசியல் அனாதை ஆக்கிவிட்டதே? உங்கள் கருத்து என்ன?
    7. வதேரா குறித்து சொல்ல எதுவுமில்லை. சில சமயம் வாழ்க்கையில் குப்பைகள் கோபுரத்தில் காற்றின் மூலம் பறந்து மேலே அமர்ந்து விடும்.இதனை தமிழில் அழகாக பொறம்போக்கு என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      சோனியா மற்றும் வாரிசுகள் சுத்தமான தற்குறிகள் என்பது தெரிந்தும் அதைப் படித்தீர்களா இதைப் படித்தீர்களா என்று கேட்பதே கொஞ்சம் அதீதமாகத் தெரியவில்லையா? :))))

      ஜெயந்தி நடராஜன்? அவர் ஒன்றும் உத்தமர் இல்லையே!

      வாத்ரா! குப்பிக்கேற்ற குப்பன்! ஜோடிப்பொருத்தம் அப்படி!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)