Sunday, August 15, 2010

தோல்விகளும் கூட வேண்டியவை தான்.......!


தோல்வி நிலையென நினைத்தால்-மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?


ஊமை விழிகள் படத்தில் கொஞ்சம் யோசிக்க வைத்த பாடல் வரிகள் இவை!

எந்த ஒரு மனிதனுமே தோல்வியை விரும்புவதில்லை, தோல்வியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! இப்படித் தயாராக இல்லாத நிலையில் தான் தோல்வி என்பது ஒரு அச்சமூட்டுகிற, நடுங்கச் செய்கிற, துவண்டுபோகச் செய்கிற அனுபவமாகிப் போய்விடுகிறது.

சாதாரணமாக, நம்மைப் பொதுவாக இரண்டே இரண்டு பிரிவுகளுக்குள் ஏதேனும் ஒன்றில் அடங்கி இருப்பதைப் பார்க்க முடியும்.

முதலாவதாக, ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தை நிலையாக வேண்டுகிற இயல்பு! கிடைப்பது குறைவாக இருந்தால் கூட, அது நிரந்தரமாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பது கூடுமான வரை தவிர்க்கப் படவேண்டும். இப்படி ஒரு மனோ நிலையில் கிடைப்பதை ஏற்றுக் கொள்வது, அது கொஞ்சம் குறைவாக இருந்தாலுமே கூட!

இரண்டாவதாக, வாய்ப்புக்களைத் தேடி அலைகிற ரகம்! தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்கிற இயல்பு! ரிஸ்க் எடுப்பதற்குக் கொஞ்சமும் தயங்காத மனப்பக்குவத்தோடு, உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட வேண்டும் என்ற வேகம் இருக்கும்.

இப்படி இரண்டு நிலைகளும் இயற்கையானது தான்! என்ன, முதல் ரகத்தில் நிறையப்பேர் இருப்பார்கள்! இப்படி இரண்டு நிலைகளிலும் இருப்பவர்களுக்கு உலகம் அவரவர் இயல்புக்குத் தகுந்தபடி தான்  வாழ்க்கையை அமைத்துத் தருகிறது. நமக்கு எந்த மனநிலை, இயல்பு பொருத்தமாக இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி வேலை, வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் சேதாரம் ஏற்படுவதில்லை. பொருந்தாத நிலைக்குள் தலையைக் கொடுக்கும்போது, தோல்வி நிச்சயம்! பொருந்தாததை  மாற்றிக் கொள்ளவும் தெரிய வேண்டும்.

தோல்வி என்ற போது அதன் பக்கவிளைவுகளாகத் தன்னம்பிக்கையை இழப்பது, துவண்டுபோய்ச் சுருள்வது என்பதுமே கூட வரும், இல்லையா! வாய்ப்புக்களைத் தேடி ரிஸ்க் எடுப்பேன், ஆனால் தோல்வியை எதிர்கொள்ளமாட்டேன் என்ற இரண்டும் கெட்டான் நிலை நிச்சயமாக இல்லை. 

ஆகத் தோல்வியை விட, தோல்வியைக் குறித்த அச்சமே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இல்லையா?

இப்படி மனித இயல்புகளைப் பற்றி என்னை வைத்தே எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, லாரி ரூட்டிமான் என்ற மனித வளத் துறையில் இருக்கும் ஒரு பெண்மணியின் வலைப்பக்கங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட பக்கம் என்னை யோசிக்கவும் வைத்தது.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று திருநாவுக்கரசர் பாடின மாதிரி, இந்தப் பெண்மணி தோல்விகளும் வேண்டியதே என்று ஒரு ஐந்து காரணங்களை முன்வைத்து  அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்! 

என்ன சொல்கிறார், அது சரியாக இருக்குமா என்று பார்த்து விடலாமா?

முதலாவதாக, தோல்விகள் உங்களை வெளிச்சத்திற்குக்  கொண்டுவருகிறது, உங்களைக் கவனிக்க வைக்கிறது! நீங்கள் இடறி விழும்போது உங்களை நிறையப்பேர் கவனிக்கிறார்கள். நீங்கள் எப்போது மறுபடியும் இடறி விழுவீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக! அப்படி உங்கள் தோல்வியைப் பார்க்க விரும்புகிறவர்கள் மூக்கில் ஒரு குத்து விடுவதுபோல ஜெயித்துக் காட்ட வேண்டுமென்ற உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை எழுப்புமானால், முதலில் ஏற்பட்ட தோல்வி, சறுக்கல் மிகவும் நல்லது, வேண்டியதும் கூட!

இரண்டாவதாக, தோல்விகள் உங்கள் திறமையை வெளியில் கொண்டு வருகின்றன. உங்களைத் திறம்படச் செயல்படும்படி ஊக்குவிக்கின்றன. முதலில் ஏற்பட்ட தோல்வியில் கற்றுக் கொண்ட பாடம், மறுபடியும் அதே தவறைச் செய்யாமலிருக்க உதவுகிறது, வேறெந்தத் தவறும் நிகழாதபடி கவனமாக இருக்கவும் சொல்லிக் கொடுக்கிறது.

மூன்றாவதாக, தோல்விகள் உங்களை விரும்பக் கூடிய நபராக மாற்றுகின்றன. குறைகள், தோல்விகள் மனித இயல்பில் மிகவும் சகஜம். அது இல்லவே இல்லாத மாதிரி காட்டிக் கொள்ள முனைந்தால் அடுத்தவருக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் தான் வரும்! அப்படியில்லாமல், எல்லோரையும்போல தோல்வியைச் சந்தித்தவர் என்கிறபோது, இயல்பாகவே ஒரு பொதுத்தன்மை, விரும்பக் கூடிய நபராகப் பார்க்கப்படுவதும் சேர்ந்தே நிகழ்கிறது.

நான்காவதாக, தோல்விகள் புதிய கதவுகளைத் திறக்கின்றன! நாம் நினைப்பது போலத் தோல்வி என்பது, நாம் எதிர்பார்த்த கதவு அடைக்கப் பட்டிருக்கிற நிலை என்பது உண்மைதான் என்றாலும், அதுவே வேறு கதவுகளையும் திறந்துவைப்பதாக இருப்பதையும் பார்க்க முடிந்தால், தோல்வி மிகவும் நல்லது, வேண்டியதும் கூட!

ஐந்தாவதாக, தோல்வி என்பது கொஞ்சம் ஜாலியாக எடுத்துக் கொள்ளக் கூடியதும் கூட! நாம் பயப்படுவது போல தோல்வி என்பது துவண்டுபோகச் செய்வதான அனுபவம் என்பதை விட, ஒரு வினோதமான அனுபவம் என்பதைப் பார்க்க முடிந்தால் தோல்வி என்பது சோர்வடையச் செய்யும் பயங்கரம் அல்ல என்பதும், நம்மைச் சரி செய்து கொள்வதற்குத் தேவைப்படுகிற அவசியமான ஒன்று என்பதையும் பார்க்க முடியும்!

ஆகத் தோல்வி என்பது, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது! பயந்து துவளும்போது, நம்மை முன்னேற விடாத இருட்டாக இருக்கிறது. துணிந்து எதிர்கொள்ளும்போது, கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும், நம்மைப் பக்குவப்படுத்துகிற துணையாகவும் இருக்கிறது.

எதனால் ஜெயித்தோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், வெற்றி கூடக் கண்ணை மறைத்துவிடலாம்!  ஆனால் தோல்வி, நம்மை ஒரு விஷயத்தை முழுமையாகப் பார்க்க வைக்கிறது, முழுமையாகப் பார்க்கத் தயார் செய்கிறது!

இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்!

Failure is not an option - it's a lifestyle


Failure is not falling down, it is not getting up again.

"Failure is simply the opportunity to begin again, this time more intelligently" - Henry Ford

Failure teaches success!என்ன சொல்கிறீர்கள்?6 comments:

 1. remba nantri
  nalla samayathil vantha posting

  nalla pathivu

  ReplyDelete
 2. திரு.செந்தில்,

  //எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னுட்டமிடவும் ஏன் பதிவு எழுதவும் கூட "நேரமில்லை".//

  இப்படி நேரமில்லாத நிலையை உங்கள் பதிவில் தெரிவித்திருந்த நிலையில் கூட இந்தப் பதிவைப் படிக்க நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முந்தைய பதிவையும் படித்து விடுங்கள்! இரண்டும் தொடர்புடையவை மட்டுமல்ல, தோல்வியைப் பற்றிய பயத்தைப் போக்கிக் கொள்ள உதவும் சிந்தனைகளாக எழுந்தவையும் கூட.

  ReplyDelete
 3. தோல்வி என்பது, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது! பயந்து துவளும்போது, நம்மை முன்னேற விடாத இருட்டாக இருக்கிறது. துணிந்து எதிர்கொள்ளும்போது, கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும், நம்மைப் பக்குவப்படுத்துகிற துணையாகவும் இருக்கிறது.


  ..... well-said! நல்ல பயனுள்ள இடுகை!

  ReplyDelete
 4. வாருங்கள் திருமதி சித்ரா!

  சிறுவயதில் சின்னச் சின்ன சறுக்கலுக்கெல்லாம் துவண்டுபோய்ச் சுருண்டு, இருட்டுக்குப் பயந்து கொண்டிருந்தவன்தான் நானும்! அதை மாற்றிக் கொள்கிறேன் என்று இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்குப் போய் எதையும் தீவீரமாக எதிர்ப்பது, நிராகரிப்பது என்றும் இருந்து விட்டு அப்புறம் தான், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய விஷயங்களை இந்த extreme அல்லது அந்த extreme இற்குப் போய்விடாமல் ஒருவித சமநிலையில் பார்த்துப் பழக வேண்டும் என்பதே, பட்டும் கெட்டும் தான் தெரிந்துகொள்ள வேண்டிவந்தது.

  அதனால் தான் புத்தகங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், நல்ல வலைப்பதிவுகள், நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களை மனிதவளமாகவும் இந்தப் பக்கங்களில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete
 5. தங்களின் பதிவுகள் உண்மையுடன் உழைப்போர்க்கு உரமூட்டுவதாக உள்ளது.

  தொடர்கிறோம்...உங்களை..உங்களுடன் கூட்டிச்செல்லுங்கள்....எங்களை...

  வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete
 6. திரு சௌமியன்! வாழ்த்துக்களுக்கு நன்றி!

  "தீண்டத் தகாதவன்" என்று எவருமே இல்லை! ஆனால், தீண்டத் தகாதவையாக நிறைய குணங்கள், பழக்கங்கள், மனோபாவங்கள் இருக்கின்றன! உதாரணமாக இந்த தோல்வி மனப்பான்மை! ஜெயித்தே தீருவேன் என்ற killer instinct என்னிடம் இல்லாததால், நான் சருக்கிவிழுந்த தருணங்கள் ஏராளம்! தீண்டத் தகாதைவையாக இந்த சோர்ந்து, துவளும் மனோபாவத்தை மட்டும் ஒதுக்கிவைத்து விட முடியுமானால், அங்கே நாம் ஜெயிக்கிறோம்! ஜெயிக்க முடியாத தருணங்களிலும் கூட, ஏன் ஜெயிக்க முடியவில்லை, நமிடம் என்ன குறை இருந்தது என்பதைப் பாடம் கற்றுக் கொள்கிற கலையை வளர்த்துக் கொள்கிறோம், இல்லையா!

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

ச்சும்மா ஜாலிக்கு! ரோஷக்காரி! பட விமரிசனம்!

நேற்றைக்கு எங்கள் பிளாகில் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வீடியோவாக நிலவே நீ சாட்சி படத்திலிருந்து இரண்டு பாடல்களைப் பகிர்ந்திருந்ததில் நடிகர் முத்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (208) அரசியல் (186) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (84) எண்ணங்கள் (44) புத்தகங்கள் (33) மனித வளம் (30) செய்திகள் (24) செய்திகளின் அரசியல் (22) சிறுகதை (20) ரங்கராஜ் பாண்டே (17) எது எழுத்து (13) விமரிசனம் (13) கமல் காசர் (12) Change Management (11) தேர்தல் சீர்திருத்தங்கள் (11) புத்தக விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) தொடரும் விவாதம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) பதிவர் வட்டம் (8) அக்கம் பக்கம் என்ன சேதி (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) காமெடி டைம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) மீள்பதிவு (5) வாசிப்பு அனுபவம் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) எங்கே போகிறோம் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கண்டு கொள்வோம் கழகங்களை (4) காங்கிரஸ் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) படித்ததில் பிடித்தது (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) கவிதை நேரம் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) ஞானாலயா (3) பதிப்பகங்கள் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) Tianxia (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பாரதியார் (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)