Showing posts with label திராவிட மாயை. Show all posts
Showing posts with label திராவிட மாயை. Show all posts

Friday, February 12, 2021

#திராவிடப்புரட்டு உடைத்த மாரிதாஸ்! குமுதம் ரிபோர்ட்டர் சர்வே! சசிகலா புராணம்!

திராவிடப்புரட்டு, திராவிட மாயையாக தமிழ்நாட்டில் ஒரு விஷவிருட்சமாகவே வளர்த்துவிடப்பட்டிருப்பதை எதிர்த்து மாரிதாஸ் செய்து வந்த தொடர்முயற்சிகளின் பலனாக ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உலவ விடப்பட்ட ஒரு பொய்ச்செய்தி அம்பலமானது. ஈவெராவின் பிம்பத்தைக்கட்டமைக்க ஏதுவாக ஊரெங்கும் சிலைகள், அரசுநூலகங்களில் வரிப்பணத்தை வீணடித்து  திக,திமுக வரலாறு புகழ் பாடும் புத்தகங்கள் இன்னபிறவற்றோடு, இந்தக் கருமத்தையெல்லாம் பள்ளிமாணவர்கள் பாடமாகவும் படித்தாகவேண்டும் என்றும் திணித்தார்களே, அந்தப் பாடத் திணிப்பு, நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது.  மாரிதாஸ் மற்றும் குழுவினரால் நல்லதொரு ஆரம்பம்!       


வீடியோ 13 நிமிடம் ஈவெரா பெயருக்குப் பின்னால் நடந்து வரும் வேறுசில தகிடுதத்தங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!


2021 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற சர்வே / கருத்துக்கணிப்பை குமுதம் ரிபோர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. இதன்மீது தனியாக என்னுடைய கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. சாம்பிள் சைஸ் 58500 என்பது உண்மையிலேயே பெரியது தான்! அதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைவிட அதிமுகவின் எடப்பாடியார் தனது வலுவான இருப்பையும், அதிகரித்துவரும் செல்வாக்கையும் சொல்லியிருப்பதுமே கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. என்னுடைய கடந்தகால கள அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட இரண்டு அடிப்படையான விஷயங்கள்:: 1)தமிழக வாக்காளர்கள் தங்களுடைய உண்மையான சாய்ஸ் இதுதான் என்று இப்படி சர்வே எடுப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை 2) இன்னகட்சிக்கு வாக்கு என்று முடிவுசெய்து கொண்டு போகிறவர்களில் கணிசமானவர்கள் வாக்களிக்கும்  போது உல்டாவாக வேறேதோ கட்சிக்கு வாக்களிப்பது!.இளைஞர்கள்தான் பெரும்பாலும் இப்படி கடைசிநொடியில் மாறுகிறவர்கள் என்பது கூடுதல் தகவல். கருத்துக்கணிப்புகள் தோற்கிற இடம் எது என்பதை இங்கும், அந்தப்பக்கங்களிலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் 



Vasanthan Perumal  10 பிப்ரவரி, முகநூலில் எழுதியது 

அதிமுக அதிகார மோதல்-2.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி சசிகலா நடராஜன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் ரத்து செய்யப்பட்டன.

பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்

என்ற பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டன. அதிமுகவின் கட்சி விதிமுறை பிரிவு-20 இன் படி

நடந்து இருந்தால் இந்த நியமனங்கள் சரியானவை.பொதுச் செயலாளர் பதவி வகிப்பவர் இல்லாத போது மாற்று ஏற்பாட்டுக்கான வழிமுறையை இந்த பிரிவு தெளிவாக சொல்கிறது.ஏதாவது காரணங்களால் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கும் போது,புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை, முந்தைய பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது.இடைக்கால ஏற்பாடாக கூட தேர்ந்தெடுக்கப்படாத பொதுச் செயலாளரை நியமினம் செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும.இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களில் தவறு இல்லை;ஆனால், அவை நிரந்தரமானவைகளாக ஆக முடியாது.( பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மட்டுமின்றி இடைக்கால நிர்வாக ஏற்பாட்டுக்கும் கட்சி விதிமுறைகள் படி திருமதி நடராஜன் தகுதியற்றவர்.ஏனெனில், அவர் முந்தைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.) ஆனால், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் உருவாக்கியது மட்டுமின்றி பொதுச் செயலாளர் என்கிற பதவியையே நீக்கிவிட்டதாக ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்கிறது.அதிமுக அமைப்பு விதிமுறைகளில் மாற்றி அமைக்க பொது குழுவுக்கு அதிகாரம் உண்டு என விதிமுறை 43 கூறுகிறது.

அந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு அவசியமில்லை என்ற திருத்தம் செய்யப்பட்டு இருக்குமால் அது தவறு.ஏன்எனில்,அதே விதி எண் 43 தான் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு என்ற விதிமுறையைத் தவிர மற்ற விதிமுறைகளை மாற்றி அமைக்க மட்டுமே பொதுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்கிறது.

அதாவது, பொதுச் செயலாளர் பதவி குறித்த எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை.மேலும்,பொதுச் செயலாளர் விஷயத்தில் திருத்தங்கள் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்ற  விதி எண்-43 அதற்கான காரணத்தையும் தெளிவு படுத்துகிறது.அதாவது,பொதுச் செயலாளரே அதிமுக என்ற கட்சி அமைப்பின் அடித்தளம்;அதனால், அதில் திருத்தம் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறது.அந்த அம்சத்தை கொண்டு பார்த்தால் பொதுச் செயலாளர் என்னும்பதவியையே நீக்கிவிட்டதாக சொல்வது அதிமுகவின் அடித்தளத்தை தகர்த்து விட்டதாக ஆகிவிடும்.எனவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்காலிக ஏற்பாடு.ஆனால், கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டது. சரியானது.தேர்தல் ஆணையம் இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து இருப்பதில் குறை காண முடியாது!

சாணக்யா சேனலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் சசிகலா புராணம் எடுபடாது என்று இன்றைக்குப்பேசும் வீடியோ முதல் 39 நிமிடம் வரை அடுத்த 16 நிமிடம் மேற்கு வங்க அரசியல் என மொத்தம் 55 நிமிடம். ஆர்வம் இருக்கிற நண்பர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன்,

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, March 19, 2020

அதான் எனக்குத் தெரியுமே! எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்!

ட்வீட்டர் தளத்தில் இந்தக் கீச்சைப் பார்த்ததுமே வாய் விட்டுச் சிரித்துவிட்டேன். இங்கே திமுகவை எதிர்ப்பது என்பது தங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதான நக்கலான தொனி இருக்கிறதே, இதை அறியாமை என்பதா அல்லது அகந்தை என்பதா? நல்ல மனிதர் என்றுதான் சொல்லக் கேள்வி, ஆனாலும் அந்த அது தான் எனக்குத் தெரியுமே என்கிற மிதப்பு இருக்கிறதே அதற்கு என்ன சொல்வீர்கள்? டணால் தங்கவேலுவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதானா? சற்றே நகுக என்று இந்த 9 நிமிடக் காமெடியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே போகவேண்டியதுதான்!

 
   
ஒரு கட்சி, ஒரு நடிகன், ஒரு எழுத்தாளன் இப்படி நமக்கு பிடித்தமாக இருக்கலாம்! தவறில்லை! பகடியாகக்  கூட விமரிசிக்கலாம்! அதுவும்கூடத் தவறே இல்லை! ஆனால் தனக்கு வராத ஒன்றை, தெரியாத ஒன்றை இப்படி எழுதினால் காமெடிப்பீசாகி நிற்கவேண்டியதுதான்! கழகங்கள் என்றாலேயே விமரிசனத்துக்கு அப்பாற் பட்டவர்கள் என்பது மாதிரியான திராவிட மாயை இங்கே வெகுகாலமாக இருந்திருக்கிறது. எதுவானாலும் காலாவதியாகிப் போகிற நாள் என்று ஒருவிஷயம் இருக்கிறதல்லவா? இன்றும் கூட திராவிடப் புரட்டு, பிரபல பதிவர், திராவிட வலைப்பதிவர் என்ற பழைய மிதப்பிலேயே இருந்தால் எப்படி?


கலாட்டா தமிழின் விக்ரம் கூட அதேமாதிரியான ஒரு மயக்கத்தில் இருந்து தான் ரங்கராஜ் பாண்டேவுடன் இந்த 23 நிமிட நேர்காணலை நடத்தியமாதிரி எனக்குத் தோன்றுகிறது. ரங்கராஜ் பாண்டே அனுபவமுள்ள ஊடகக்காரர் அவர் ரஜனிகாந்த் ஆதரவு நிலையெடுத்து விட்டார் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சரியான கேள்விகளைக் கேட்கத்தெரியாததால் தான் அவரிடம் தெளிவான பதில்களைப் பெறமுடியவில்லை என்பது புரிகிறதா?

இங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறியப்பட்ட ஒரே நல்லமுகமான  தோழர் நல்லகண்ணு சாணக்யா தளம் அறிவித்த விருதைப் பெற மறுத்துவிட்டார் என்பது அவரும் அவருடைய கட்சியும் எடுத்த முடிவாக இருக்கலாம். அதில் விமரிசிப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அதைவைத்து ரங்கராஜ் பாண்டேவோ, அவர் நடத்தும் சாணக்யா தளமோ மூக்குடைபட்டதாக நினைத்துக் கேள்வியைத் தொடங்கியது என்னமாதிரி ஜர்னலிசம் என்று எனக்குத் தெரியவில்லை. லயோலா விஸ்காம் படித்தவர்களிடமிருந்து தொற்றிக்கொண்ட வியாதியோ என்ற சந்தேகம் தான் திரும்பத்திரும்ப எழுகிறது.  


கொஞ்சம் லோக்சபா காமெடி ஒன்றையும் பார்த்து விடலாம்!

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, March 3, 2020

#572 வெறும் அக்கப்போர்களால் ஆனது தானா அரசியல்?

இந்திய அரசியலோ தமிழக அரசியலோ எதுவானாலும்  வெறும் அக்கப்போர்களிலேயே நடத்தி முடித்துவிடுவது தானென்பதை நேற்றைய சேனல்விவாதங்களிலிருந்து  மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. நம்மூரில் டிவி சேனல்கள் எதுவும் ஜனங்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிப்பவை அல்ல! அரசியல் எஜமானர்களுக்காக அல்லது காசுக்குக் கூவுகிறவை என்பதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள்!


ஆதன் தமிழ் சேனலின் மாதேஷ் கேணத்தனமான கேள்விகளிலேயே நேர்காணலை ஓட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளலாம்!  அதற்காக ரவீந்திரன் துரைசாமியை தமிழகத்தின் பிரசாந்த் கிஷோர் என்று சொன்ன ஒரு நேர்காணலை இன்னமும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதிலும் கூட ஏகத்துக்கும் பில்டப். ரஜனிகாந்த் இசுடாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவில்லையே என்று ஆரம்பிக்கிறார்கள். சொல்லாவிட்டால்தான் என்ன? வீடியோ 29 நிமிடம்.

      
ராஜனிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்தது மார்ச் முதல் தேதி நடப்பு நேற்றும் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தந்திடிவியின் ஆயுத நிகழ்ச்சியில் அரசியல்கட்சிகளைச் சார்ந்த எவரும் பங்குகொள்ளாமல் இருந்ததிலிருந்தே வெளிப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அசோக வர்ஷினி பாவம்! இந்த 42 நிமிட விவாதத்தில் கேள்விகளை சரியாகப் போட்டு பதில் வாங்கத் தெரியாமல் தவிப்பது தமாஷாக இருக்கிறது. சேனல் முதலாளிக்கு, ஏதோ நாங்களும் இதைப்பற்றி பேசிப்  பொழுதைக் கடத்தி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டிருக்கும். அவ்வளவு தான்!

   
WIN News சேனலில் மதன் ரவிச்சந்திரனுக்கு மற்ற சேனல்கள் எதுவும் விவாதிக்கத் துணியாத வேறு ஒரு விஷயம் விவாதத்துக்குக் கிடைத்திருப்பதில் சக்கை போடு போடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்! இந்த 48 நிமிட விவாதத்தில், தகுதியான கேண்டிடேட் இருந்தும் கூட  ஒரு இஸ்லாமியருக்கு திமுக ராஜ்ய சபா சீட் கொடுக்காமல் விட்டுவிட்டதே என்று நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற துணிச்சல்! அந்தத் துணிச்சலுக்காகவே மதனைப் பாராட்டியாக வேண்டும்!  விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக அறிமுகம் இல்லாதவர்கள்.  துளசிராமன் என்பவர் இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜனிகாந்தை சந்தித்ததற்கு, வட்டிக்குப் பணம் வாங்கப் போயிருப்பார்கள் என்று சர்வசாதாரணமாக காரணம் சொல்லி நக்கலடிக்கிறார். ஆனால் இங்கே சரியான கேள்விகளோடு மதன் ரவிச்சந்திரன் விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்றே உரக்கச் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்.            

Tuesday, January 28, 2020

ஈவெரா! துக்ளக் அம்பலப்படுத்திய உண்மைகளும் தொடர்ச்சியும்!

துக்ளக் 50வது ஆண்டு நிறைவு  நிகழ்ச்சியில் நடிகர் ரஜனிகாந்த் பேசிய ஒரு 13 நிமிடப்பேச்சு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதென்றே சொல்லவேண்டும்! எதையும் திரித்தும் மிகைப் படுத்தியுமே வெற்றுப்பரப்புரைகளிலே வளர்ந்த திராவிடங்கள் என்னமோ ஈவெரா மீது ரஜனிகாந்த் அவதூறு பரப்பிவிட்டதாக, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  கூக்குரல் எழுப்பியதில் கடந்த 21 ஆம் தேதி மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று இரண்டே நிமிடப் பேட்டியில் ரஜனிகாந்த் தனது நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார். ஈவெரா  என்கிற பகுத்தறிவு பிம்பத்தைக் கட்டமைத்து, அதைவைத்தே பிழைப்பு நடத்திவரும் தீ'னா கழகமும், தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் ஈவெராவின் மகிமைகளைப் பயன் படுத்திக்கொள்கிற இதர கழகங்களும் லபோதிபோவென இன்னமும் கூக்குரல் எழுப்பி வருகின்றன. அதில் துக்ளக் இதழில் வெளியானதென்ன என்ற ஆதாரத்தைக் காட்டாமல் அவுட்லுக் இதழில் 2017 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை ஆதாரம் காட்டுவானேன் என்கிற கூக்குரலும் ஒன்று!     

இது இன்று நியூஸ் 7 சேனல் செய்தி!
  

இன்றைக்கு வெளியான (28/1/20) துக்ளக் இதழில் 1971 ஆம் ஆண்டு துக்ளக் இதழில் வெளியான சேலம் திராவிடர் கழக ஊர்வலம் பற்றிய செய்திகள், படங்களை மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள். ஆக அன்றைக்கு கருணாநிதி துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து மார்கெட்டிங் ஆசாமிபோல உதவியதைப் போல கழகங்கள் மறுபடியும் துக்ளக் இதழுக்கு மார்கெட்டிங் வேலையைச் செய்திருக்கின்றன என்பது திராவிட மாயை வேகமாகக் கலைந்து வருவதற்கான அடையாளம்! தொடர்ந்து பொய்களின் மீதே கட்டப் பட்ட திராவிடப் பம்மாத்து என்ன செய்வது என்பதறியாமல் திகைத்து நிற்பதில், விஷயம் அவர்கள் கையை மீறிப்போய் விட்டதும் கூடப் புலப்படுகிறதோ!


திராவிட மாயை -- ஒரு பார்வை என்று மூன்று பகுதிகளாக புத்தகம் எழுதிய சுப்பு மணியன் முகநூலில் ஈவெரா பற்றிப்  பகிர்ந்திருந்த சுவாரசியமான இரு பகிர்வுகளை இங்கே தருகிறேன்.

ஈ.வெ.ராவின் ரகசியம்
ராஜா சார் அண்ணாமலை செட்டியாருக்கு அறுவதாண்டு நிறைவுற்ற போது ஆயுஷ் ஹோமம், நவகிரக சாந்தி, பூஜைகள், வேத விற்பன்னர்களுக்கு தானம் ஆகியவை பெருமளவில் நடந்தன. இது குறித்த செய்திகள் அன்றைய அச்சு ஊடகங்களிலும் வெளி வந்தன.
இதையெல்லாம் படித்த ஈ.வெ.ராவுக்கு சூடு அதிகமாகி விட்டது. அண்ணாமலை செட்டியாருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தார்.
ஈ.வெ.ராவின் போராட்டம் என்ற செய்தி வந்தவுடன் செட்டியாரை சுற்றியிருந்தவர்களுக்குக் கவலை. "பெரியாரை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர்களை சமாதானப்படுத்திவிட்டு செட்டியார் ஈ.வெ.ராவுக்கு ஒரு தபால் அனுப்பினார்.
தபாலைப் பார்த்தவுடன் ஈ.வெ.ராவின் போராட்ட அறிவிப்பு முடிவுக்கு வந்தது. அந்த தபாலிலிருந்தது ஆயிரம் ரூபாய்க்கான காசோலை. இதுதான் ஈ.வெ.ராவின் ரகசியம்.
திராவிடப் பொய்யும் புரட்டும் ஒன்றா இரண்டா?  
   
திராவிடப் பொய்.
"1971 சேலம் ஊர்வலத்தில் ஹிந்து கடவுளை இழிவுபடுத்தினோம் . அதனால் தி மு க அதிக இடங்களில் ஜெயித்தது" என்று பெரியாரிஸ்டுகள் இப்போது சொல்கிறாரகள்.
1. அந்தத் தேர்தல் பிரசாரத்தில் தி மு கவோ அதன் கூட்டணிக் கட்சியான இந்திரா காங்கிரசோ இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. தி்முக தரப்பில் அப்போது முக்கியமாகப் பேசப்பட்டது பிரதமர் இந்திராகாந்தியால் முன்னிறுத்தப்பட்டு ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்ட 'மன்னர் மானிய ஓழிப்பு' மசோதாதான். தி மு க உறுப்பினர் எஸ் எஸ் ராஜேந்திரன் ராஜ்யசபா வாக்கெடுப்பின்போது கக்கூசுக்குப் போய் விட்டார். மசோதா தோற்றது. ஆளும் கட்சி மசோதா தோற்றுவிட்டதால் இந்திரா மந்திரி சபை ராஜினாமா செய்து தேர்தல் வந்தது. இந்திராவுக்கு இந்தியா பூராவும் வெற்றி. இந்திரா தயவில் திமுக விற்கும் வெற்றி.

மன்னர் மானியம் நீடிக்கவேண்டும் என்றார் காமராஜர். தி மு க வினர் காமராஜரை " ராஜாவின் கூஜா" என்று போஸ்டர் போட்டார்கள். காமராஜர் இருந்தது வாடகை வீடு. அது சொந்த வீடு என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். "சோலை நடுவே வாழும் சோசலிசப் பிதா" என்று எழுதினார்கள்.
2. அன்றைய திமுக வின் ஸ்டார் பேச்சாளர் எம் ஜி ஆர். அவர் சேலம் ஊர்வலத்தை ஆதரித்துப் பேசவில்லை.
3.அன்றைய முதல்வர் மு கருணாநிதி தேர்தல் பிரசாரத்தில் ஊர்வலத்தைக் கண்டித்துப் பேசினார்.
4. ஊர்வலம் நடந்தது 24.01.1971. ஊர்வலத்தின் படங்கள் துக்ளக் 14.02.1971 இதழில் வெளிவந்தது .
அதுவரை சேலத்தில் நடந்த அயோக்கியத்தனம் ஊடகங்களில் வெளிவராமல் கருணாநிதி அரசு பார்த்துக்கொண்டது.
5. துக்ளக் இதழ் வெளிவந்து, தடைசெய்யப்பட்டு முழுவதுமாகச் செய்தி தமிழக வாக்காளர்களுக்கு போய் சேருவதற்குள் தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது ( 25.02.1971).
1971 தேர்தல் முடிவுகளுக்கு திக ஊர்வலம் தான் காரணம் என்பது திராவிடப் பொய்.   

ஆக, கடவுள் பொய், புராணம் பொய், பண்பாட்டு விழுமியங்கள் எல்லாமே பொய் என்று வெற்றுக் கூச்சல் போடும் திராவிடங்கள் சொல்வதென்னவோ பொய் மட்டும் தான்!    

மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவு :

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

Tuesday, January 21, 2020

தமிழக ஊடகங்களுக்கு நல்ல தீனிதான்! ஆனால் எப்படித் திரிப்பதாம்?

ஒரு சினிமா நடிகன்! ரஜனி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிக்கொண்டே இருப்பதைத்தவிர, இன்னமும் செயல்வடிவத்துக்கு வருகிறமாதிரிக் கூட அறிகுறிகள் இல்லை! ஆனால் அவர் வந்து விடுவாரோ என்கிற அச்சம் திராவிடக்கட்சிகளுக்குப் பிடித்து ஆட்டுகிறது. கடந்த 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் சோ ராமசாமியுடைய தைரியத்துக்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போக, ஒருவாரகாலமாக திருமாவளவன் உட்பட அநேகமாக எல்லோருமே பேசித்தீர்த்துவிட்டார்கள். இன்று காலை ரஜனிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசியது வெறும் இரண்டே நிமிடங்கள் தான்! தான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது.(ஈவெரா பற்றி) பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று சுருக்கமாக, அதே நேரம் இத்தனை காலமாக கட்டமைக்கப்பட்ட பெரியார் என்பதான ஒரு மாயபிம்பத்தின் மீது நேரடியாகவே ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.


இங்கே திராவிடக்கட்சிகளுக்கு, சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக, கொள்கை கோட்பாடு என்றெல்லாம் இருந்ததில்லை. ஈவெரா ஒரு சமூக சீர்திருத்த புரட்சியாளர், சிந்தனைச்சிற்பி, தத்துவஞானி என்றெல்லாம் தொடர்ந்து பரப்புரைகளில் கட்டப்பட்ட ஒரு மாயபிம்பத்தை முன்னிறுத்தி, தங்களுடைய பித்தலாட்டங்களைச் செய்துவந்த கதை சமீபகால வரலாறுதான்! 1949 இல் மணியம்மை ஈவெரா திருமணத்துக்குப் பின்னால் அண்ணாதுரை , நெடுஞ்செழியன் ஈவிகே சம்பத் முதலானோர் திராவிட கழகத்திலிருந்து வெளியேறி திமு கழகம் என்று தனிக் கடை ஆரம்பித்த நாட்களிலிருந்து ஈவெரா திமுக இடையிலான , விரோதம் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த விபத்து நடந்தபிறகுதான் கொஞ்சம் மாறியது.

ஆளுகிற தரப்பின் பக்கமே சாய்ந்து காரியத்தை சாதித்துக் கொள்கிற ஒரே ஒருவிஷ்யத்தை நிரந்தரக் கொள்கையாக வைத்திருந்த ஈவெரா-திகவுக்கு, கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஓவராக ஆட்டம் போட வாய்ப்புக் கிடைத்தால் என்னென்ன செய்திருப்பார்கள்? 1971 இல் சேலம் பேரணியில் அதுதான் நடந்தது. 

ஆனால் ரஜனி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படி ஒரு அதிரடி வரும் என்பதை கழகங்கள் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை! அடி கொஞ்சம் பலமாகவே விழுந்திருப்பது, இன்று இசுடாலின் கொஞ்சம் தணிவாக. ஈவெரா பற்றிப் பேசும்போது நண்பர் ரஜனி கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும் என்று ஹீனசுரத்தில் சொன்னதிலிருந்தே தெளிவாகியிருக்கிறது.        

புதியதலைமுறை மாறிவிட்டதோ என்று சந்தேகமெல்லாம் அனாவசியம்! உண்மைக்கு 
இப்படி ஒருநிமிடம் மட்டும்  ஒதுக்குவார்கள்!
மறக்க அடிப்பதற்கு திருமாவளவன்,
லூசு அருணன் கூவுவதைத் திரும்பத் திரும்ப 
ஒளிபரப்பித் தங்கள் விசுவாசம் எங்கே என்பதைக் 
காட்டியும் கொள்வார்கள்! 

1968 கீழவெண்மணி விவசாயக்கூலிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரைப்படி கூலி உயர்வு கேட்டுப்போராடியதில், 44 பேர் நிலச் சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் கூட ஈவெரா நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாகத் தான் பேசினார் கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்று பேசிய கதையை, சத்தமே இல்லாமல் ஹைஜாக் செய்து கூலிப் போராட்டத்தை தலித் மக்கள் மீதான ஆணவ ஜாதி வன்முறை என்று திசைதிருப்பிவிட்ட கதையை. எந்த மார்க்சிஸ்டுகள் மீது ஈவெரா பழிசுமத்தினரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஈவெரா புகழ் ஓங்குக என்று ஜிங்சக் அடித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய  நகைமுரண்! இந்த முகநூல் பக்கம் கொஞ்சம் நினைவு படுத்துகிறது 

பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்! 

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, November 30, 2019

உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு!

ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தி.மு.கழகம் செய்து வந்த பிரசார பாணியிலேயே அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதென்று கச்சை கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டமாதிரியே இங்கே தெரிவது இருவர்! ஒன்று கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் மாரிதாஸ். அடுத்தது காவேரி நியூஸ் சேனலிலிருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு இப்போது WIN News சேனலில் பணியாற்றி வரும் மதன்  ரவிச்சந்திரன்! எத்தனை நாட்கள் தனிமனிதர்களாகத் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கவலையும் கேள்வியும் எனக்கிருந்ததுண்டு. ஆனால் இருவரும் வெகுஜன ஆதரவுடன் இன்னும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பது ஊடகத்துறையில் பார்த்துவரும் அதிசயம்! வீடியோ 43 நிமிடம்

    
வத்திக்குச்சி பற்றிக்கொள்கிற மாதிரித் தலைப்பு வைக்கத் தெரிந்தவருக்கு, அதற்கேற்ற மாதிரி பங்கு கொள்கிறவர்கள் வேண்டாமா?  கிஷோர் கே சுவாமி ஒருவரைத் தவிர  எவரும் கிடைக்கவில்லை என்பது மைனசாகத் தெரிந்தாலும்,  தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திவருவது பெரிய ப்ளஸ்! 

 

உபிக்கள், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் இமேஜ் எல்லாம் சின்னதாக ஒரு ஊசிக்கு குத்துக்கே தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதைப்  பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் கர்மா விடாமல் துரத்துகிறதே! 

                                                        


இந்துக்களை மட்டும் அவமானம் செய்து அதன் மூலம் மதம்மாற்றும் இயக்கங்களை மகிழ்ச்சி அடைய செய்து, அந்த மக்களின் வாக்குக்கு வெக்கம் இல்லாமல் நாக்கை தொங்க போட்டு திரியும் கேடுகெட்ட இயக்கம் திமுக மதசார்பின்மை பேச எந்த தகுதியும் கிடையாது.
சமீபத்தில் ஆ ராசா பேச்சியதற்கு என்பக்க எதிர்வினை இந்த பதிவு.
இந்துகளின் ஒற்றுமையின்மையே பெரும் கேடு. ஒன்றிணைந்து ஒழித்துகட்டப் படவேண்டிய முதல் கும்பல் திமுக தான். - மாரிதாஸ் 
ஏசு பிறப்பிற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை - போப் ஃபிரான்ஸிஸ்.
ஏசு பிறப்பிற்கு ஆதாரம் இருக்கிறது - ஆண்டிமுத்து ராசா.
சொந்தமாக உளறி மாட்டிக்கொள்வது போக , கூடவே இருப்பவர்கள் உளறலும் கூட இசுடாலின் தலையிலேயே விடிகிறதாம்! மாரிதாஸ் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 15 நிமிடம்.



இது சீமான் கட்சிக்காரர் துரைமுருகன்  (சே)சாட்டை சேனல் லந்து வீடியோ 6 நிமிடம்தான்!
                                                         
மும்பை அரசியலையே பேசிக்கொண்டிருப்பதாக பதிவைப் படிக்க வராமலேயே இருக்கும் நண்பர்களுக்கு உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு! மகிழ்ச்சிதானே! 

மீண்டும் சந்திப்போம்.       

Thursday, June 27, 2019

திருட்டு திராவிடம்! பானாசீனா! குமாரசாமி! காஷ்மீர்!

வலைப்பதிவுகள் எழுதுவதை விட்டுவிட்டு கூகிள் பிளஸ்சில் வெகு மும்முரமாய்ச் செய்திகளையும் அதன்மீது சின்னச் சின்ன விமரிசனங்களாகவும் எழுதிக் கொண்டிருந்த கடந்த காலத்தில் சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இத்தனையாவது முறையாக சரிந்து விழுந்தது என்ற தகவலை நக்கலாகக் குறைந்தது பத்துப் பதினைந்து முறையாவது பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால் பானாசீனா விவகாரத்தில் இந்தக் குறிப்பிட்ட நீதிபதி எத்தனையாவது முறை கைது செய்யத் தடை என்று நீட்டித்துக் கொண்டே போகிறார் என்பதைக் கணக்கு வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும் போல! 


யாரை எங்கே எப்படிச் சரிக்கட்டுவது என்பதில்  சால்வை அழகர் பானாசீனாவுக்கு இருக்கிற   சாமர்த்தியம் இங்கே வேறெந்த கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை. அடுத்து எவரையாவது சொல்லலாம் என்றால் அது தயாநிதி மாறன் தான்! இன்றுவரை கைதுநடவடிக்கையை சந்திக்காமலேயே இந்த இரண்டுபேர்தான் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ!ராசா, கனிமொழி இருவரையும் சிக்க வைத்தது, இதுவும் கூட ஊரறிந்த ரகசியம் தான். நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்தப்பதிவைப் படித்துவிட்டு நம்மால் பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்! 


நரேந்திர மோடிக்குத்தானே ஓட்டுபோட்டீங்க? அங்கேயே போங்க என்று சொல்கிற குமாரசாமி, சட்டசபைத்தேர்தலில் கூட ஜனங்கள் அவருக்கோ காங்கிரசுக்கோ ஓட்டுப் போடவில்லை, அவர்கள் ஒரு ஒட்டுப்போட்ட  கூட்டணியை அமைத்துத்தான்ஆட்சியில் இருக்கிறார்கள்    என்பதை மறந்து விட்டு ஜனங்களிடம்  கோபப்படுவது ஏன்? 

   
உள்துறை அமைச்சர் காஷ்மீருக்குப் போயிருக்கிறார். முப்பது ஆண்டுகளில் இதுவரை காணாத அதிசயமாக, வழக்கமாக வீரமுழக்கம் கடையடைப்பு கல்லெறிதல் என்று தெருவில் இறங்கிப் போராடுகிற போராளிகள் எவரையும் காணோமாம்  இயல்பு வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப் படவில்லை என்பது ஒருபுறம்! மறுபுறம்  இதுவரை எல்லாவிதமான அடாவடிகளிலும் இந்திய அரசை பிளாக்மெயில் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ஹூரியாத் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது என்று கெஞ்சிக் கேட்கிறதென்பது. 18 நிமிட விவாதம்தான்!  கொஞ்சம் பாருங்களேன்!  

திராவிட மாயை, திருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன? 


இதுக்கு மேலே சுருக்கமாகச் சொல்ல முடியாதுதான்! இல்லையா?   

மீண்டும் சந்திப்போம்.
  

Saturday, May 11, 2019

ஊடகப் பொய்களும் திராவிடப் புரட்டுகளும்!

பாண்டேவைக் கேளுங்கள் என்று கேள்வி பதில் நிகழ்ச்சியை மீண்டும் இன்று நேரலையில் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ஊடகக்காரராக, ஜனங்களுடன் நேரடித்தொடர்பில் இருக்கிற வெற்றிகரமான முயற்சி இது, கொஞ்சம் புதிது  என்றே நினைக்கிறேன்.  இவரைத் தவிர இங்கே எத்தனை ஊடகக்காரர்கள் மக்களோடு இப்படி நேரடித் தொடர்பில் இல்லாமலேயே மக்களுடைய குரல் போலப்   பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரிய வந்தால் நிச்சயமாகக் காறித்துப்புவீர்கள்! இந்த நேரலையின்  வீடியோ 6வது நிமிடத்திலிருந்து தொடங்குகிறது 




ஊடகங்கள் தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்ட பழைய நாட்கள் இனிமேல் திரும்பிவரவே வராது என்றுதான் தோன்றுகிறது. இங்கே செய்திகளைத் தருவது என்பது ஒரு தனிவியாபாரமாக இருந்த காலம்  உண்டு. அன்றும் கூட பல ஊடகங்கள் ஒருபக்கச் சார்பாக இருந்ததுண்டு. ஆனால் அதை ஒளிவுமறைவில்லாமல் செய்த காலம், அதை ஒரு conviction உடன் செய்த காலம். இன்றைக்கு செய்திகளைக் காசுக்குத் தகுந்த மாதிரி உருவாக்கி அதையே ஜனங்கள் தலையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிற காலம் என்பதை #ஊடகப்பொய்கள் என்று பலமுறை இங்கே எழுதி வந்திருக்கிறேன். செய்திகளின் உண்மை, நம்பகத்தன்மையை சோதித்துப் பார்த்தே நம்பவேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவர்மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில்  தவறில்லையே!  


பொய் சொல்லுவதில் கோயபல்ஸ் பாணியை எல்லாம் மீறி. திராவிடப்பொய்கள் தனி ஆவர்த்தனமாக இங்கே ஒலித்துக் கொண்டே இருந்ததில், நிறுத்து! ரீல் அறுந்து போச்சு!  கட்டத்துக்கு வந்தாயிற்று! மாரிதாஸ் தன்பங்குக்கு யுனெஸ்கோ விருது புரட்டைப் புரட்டியெடுக்கிறார்.  

இவ்வளவு சொல்லிவிட்டுக் காங்கிரஸ் பொய்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்கள்! 




சீமான் திமுகவை விமரிசித்தால் புதியதலைமுறைக்கு ரொம்ப  வலிக்கிறதாம்! வலியோடு ஒரு விவாதம் ஏன் செய்கிறார்கள்?  

புரிகிறதா? #ஊடகப்பொய்கள் #திராவிடப்புரட்டு    

Thursday, April 25, 2019

செந்தமிழர் சீமான் உதவியாளர் செந்தமிழில் ...!

செந்தமிழர் சீமான் உதவியாளரோடு யாரோ ஒருவர் பேசுகிற ஆடியோ வைரலாகி வருசிறதாம்! நல்ல செந்தமிழில் இருப்பதாக பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் முகநூலில் பட்டியல் போட்டு சொல்கிறார். சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் ஒன்றிரண்டைக் கேட்டதில் திராவிடங்கள் என்ன செய்தனவோ அதையேதான் தமிழ்த் தேசியமும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  


இந்தமாதிரி  அருவருப்பான உரையாடல்களுக்கு இந்தப் பக்கத்தில் இடம் கொடுத்திருப்பதற்காக உண்மைலேயே வருத்தப்படுகிறேன். ஆனால் எப்படிப்பட்ட சீரழிவில் சிக்கி இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக, இதற்கும் இடம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.
   
#நாடகத்தமிழ் என்று சங்கரதாஸ் சுவாமிகளும் அவரது அடி ஒற்றி வந்தவர்களும் வளர்த்த தமிழும்  வள்ளிதிருமணம் மேடை நாடகமும்  இவர்களிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஆடியன்ஸ் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்பதற்காக இவ்வளவு கொச்சையாகப் பேசவேண்டுமா என்ன? குற்றம் அவர்களிடம் இல்லை, இதையெல்லாம் சகித்துக் கொண்டு அல்ல, ரசிக்கவே பழகிவிட்ட நம்மிடமல்லவா இருக்கிறது! எப்போது இதை நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்?

செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறியாமல் அப்படியே நம்பிவிடுவதோ, ஆவேசப்படுவதோ இல்லாமலிருக்கப் பழகுவது முதல்படி!  #திராவிடமாயை #திராவிடப்புரட்டு களிலிருந்து முழுமையாக விடுபடுவது அடுத்த  படி!  
பிரதமர் நரேந்திரமோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணலின் வீடியோ இப்போதுதான் கிடைத்தது. இதன் தமிழ்வடிவத்தை இன்று இன்னொரு வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தென்ன என்பதைச் சொல்லுங்கள்!    





Sunday, March 31, 2019

அமேதி போயாச்சு வயநாடு வந்ததே! டும் டும் டும்!

ராகுல் காண்டி தன்னை காஷ்மீர் கவுல் பிராமணனாக அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப்போய் வழிபாடு செய்கிற மாதிரி ஸ்டன்ட் அடித்துப்பார்த்தும் கூட அமேதி தொகுதியில் ஸ்ம்ருதி ஈரானிக்கு ஈடு கொடுக்க முடியாதென்பது  தான் கள யதார்த்தம்!


sting operation conducted by Times Now had thrown up some startling admissions by a Congress MLA regarding why Rahul Gandhi would be choosing Wayanad as his safe seat. In the sting video, a senior Congress Party leader could be seen saying Congress President Rahul Gandhi is facing pressure in Amethi and has to find a safe seat, implying that he should contest from Wayanad as Hindus form a minority in Wayanad constituency which will ensure an easy victory for Rahul Gandhi என்கிறார்கள் இங்கேபாட்டி இந்திரா அன்னை அன்டோனியோ மைனோ (சோனியாவின் ஒரிஜினல் பெயர்)  காட்டிய வழியில் ராகுலும் தெற்கே பாதுகாப்பான தொகுதி தேடியதில், இஸ்லாமியர் கிறித்தவர் வாக்குகள் மெஜாரிடியாக இருக்கும் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.The Janeu Dhari Shiv Bhakt avatar of Rahul Gandhi during the Gujarat elections was soon betrayed by the realisation that Congress if it wishes to survive, would need to bank on non-Hindu votes. It perhaps became even more apparent when the residents of Amethi expressed their resentment with the Congress party and the dynasty saying that they did not want to empower Muslims in the area அந்த செய்தி உண்மையைப்போட்டு உடைக்கிறது.ஆனால் இடதுசாரிகள் ராகுல் அங்கே போட்டியிடுவது தங்களுக்கெதிராகத்தான் என்று கொதிக்கிறார்கள். தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று சூளுரை, முழக்கங்கள் வேறு!  

மல்லுதேச எம்பி ஆவது கூடப் பெரிய விஷயமில்லை. கேரள நலன் சார்ந்தே பேசவேண்டும் என்பதும் தன்னை ஜெயிக்கவைத்த தொகுதிக்குக் கட்டாயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதும் அமேதியில் ஜெயித்து எம்பி ஆனபிறகும் தொகுதியைத் தங்கள் பண்ணையம்  மாதிரி வைத்திருந்தது போல  சேட்டன் மாரிடம் செல்லாது என்பதும் தெரியுமோ என்னவோ?       
Banu Gomes
இந்து மதத்தை விஷம் போல வெறுக்கும் தமிழக ஹிட்லர்கள் குழு .. கிருஷ்ணரை குறித்து மார்ச் 22 அன்று தண்டனைக்குரிய வகையில் பேசி மீண்டும் இந்து வெறுப்பு பிரச்சாரம் செய்த விடியோவை காண நேர்ந்தது.
''eve teasing -க்கு முன்னோடி கிருஷ்ணன் தான் . பொள்ளாச்சி வீடியோ பதிவுகள் அவன் கையில் கிடைத்திருந்தால்..தேவ லோகத்தில் அனைவருக்கும் போட்டு காட்டி இருப்பான்'' என்கிற பிதற்றலாக அப் பேச்சு இருக்கிறது.
இந்த பிதற்றல் பேச்சை..அதன் நட்பு கட்சிகள் எதுவும் கண்டிக்கவும் இல்லை. இதற்கு பலன் தரக்கூடிய, பொருள் பொதிந்த எதிர்வினைகள் இரண்டு தான் உண்டு.
1. இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவதூறு செய்து இந்து மக்களை புண்படுத்தும் தி.மு,க. + அரசியல் கட்சிகளுக்கு ...வாக்களிக்காமல் முற்றிலுமாக புறக்கணிப்பது.
2. இன்னும் அதிகமாக கிருஷ்ணரை கும்பிடுவது. 
செய்து பாருங்கள்.
அடுத்த தேர்தலில் ..அவதூறு பேசிய இதே கட்சிகள்.. கிருஷ்ணர் வேடமணிந்து..பஜனைகள் பாடி... வாக்கு கேட்டு.. உங்களை தேடி வருவார்கள் !
இந்த இணையதளத்தைப் பற்றி
  
இதெல்லாம் லுலுலாயிக்குத்தான் என்பது பாளையக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? 

"தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் கூட ஹெச்.ராஜா போன்ற கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை பார்க்கவே  முடியாது; அவரைத்  தான் பாஜக வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது” - ஸ்டாலின்
அப்படி அவர் செய்த அயோக்கியத்தனம் என்ன? அவர் என்ன ஊழல் செய்து சொத்து சேர்த்திருக்காரா? சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளாரா?இல்லை பெண்கள் விஷயத்தில் பெயரை கெடுத்து கொண்டாரா? சாதி கலவரத்தை தூண்டினாரா? அடுத்தவன் வயிற்றில் அடித்து அவன் சொத்தை ஆட்டைய போட்டாரா? இப்படி ஊரில் இருக்கும் அத்தனை அயோக்கியத்  தனங்களையும் செய்த இசுடாலின்  வெட்கப்படாமல்  தேர்தலை சந்திக்கும் போது H ராஜா கடைந்தெடுத்த அயோக்கியனா?  என்று முகநூலில் பொருமுகிறார் கார்த்திக் விஸ்வநாதன். பாவம், தமிழக அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை அறியாத அப்பாவி போல!  

பின்னே! திராவிடமாயை என்றால் சும்மாவா?  
    

Wednesday, March 13, 2019

டூப்ளிகேட் காண்டிகளும்! பல்லிளிக்கும் திராவிடங்களும்!

காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO? என்று எழுதிய பதிவுக்கு ஆதாரம் இருக்கிறதா? அல்லது இதுவும் நேரு, வாரிசுகள் மீது தொடர்ந்து கட்டமைக்கப் படும் அவதூறுகளில் ஒன்று தானா என்று யாரும் என்னைக் கேள்வி கேட்கவில்லை! ஆனாலும் சமூகப் பொறுப்புள்ள பதிவராக தெளிவு படுத்தவேண்டிய கடமை எனக்கும் தெரிந்துகொள்ள வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கிறதே! அதுவும் நேற்று சோனியா G வாரிசுகளுடன் அகமதாபாத்  காந்தி நகரில் அரசியல் பிரசாரம் ஆரம்பித்த செய்திகளைப் பார்த்த பிறகு!


காங்கிரஸ் என்னவோ பிரியங்கா வாத்ரா, பாட்டி சாடை அச்சு அசலாக இருப்பதில் பிரம்மாஸ்திரமாக இருக்கப் போகிறார் என்று கணக்குப் போட்டுக் கொண்டு தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் அப்படித்தானா? டூப்ளிகேட் காந்தியாக உலாவரும் பிரியங்கா, நேற்றைக்குத்தான் முதன்முதலாக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். பாட்டி இந்திரா மாதிரியே தெனாவட்டான தேர்தல் பிரசாரப் பேச்சு. 

The Nehru-Gandhi dynasty has milked the ‘Gandhi’ name to the hilt. In fact, one could reason that the Dynasty’s rise to prominence was largely based on them claiming the Mahatma Gandhi legacy through their surname. With that history, it came as a surprise when Priyanka Gandhi Vadra, in her debut election rally, made a startling admission that after the decades she claims to have been in politics, this was the first time she had visited the Sabarmati Ashram என்கிறது இந்தச் செய்தி 

ஒரிஜினல் காந்திக்கும் இந்த சோனியா G கும்பலுக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா? இல்லவே இல்லையென்று, நேருவின் பரமரசிகர், ஆதரவாளரான ராமச்சந்திர குஹா தனது India After Gandhi நூலில் 14வது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார். அம்மாம்பெரிய புத்தகத்தில் எங்கேன்னு தேடறது என்று சோம்பலில் சலித்துக் கொள்ளவேண்டாம்! இன்னொரு reference கூட ரெடியாக இணையத்தில் இப்போதே சரிபார்த்துக் கொள்ள வசதியாகக் கிடைக்கிறது.

We remember Feroze Gandhi. During the independence movement he was arrested and jailed several times and was later elected as a Member of Parliament from Raebareli.

7:34 AM - 12 Sep 2018  இந்திரா உயிரோடு இருந்த நாட்களில் கூட நினைவுக்கு வராத பெரோஸ் காந்திக்கு சென்ற செப்டம்பரில் அவரது 106வது பிறந்த நாள் ட்வீட்டர் அஞ்சலியாக காங்கிரஸ் வெளியிட்டது ஒன்று.


          Feroze and Indira Gandhi during their wedding ceremony | File  

இந்திரா பெரோஸ் திருமணம் 1942 இல் நடந்தது. இந்திராவின் தாய் கமலாவுக்கோ நேருவுக்கோ விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம். அப்பனை வெறுப்பேற்றுவதற்காகவே இஸ்லாத்துக்கு மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்திகள் நேருவின் பிம்பத்துக்குப் பின்னால் மறைக்கப்பட்டன.

Compared with the other members from the Nehru-Gandhi family, there's very little known about Feroze. There are many theories about his Gandhi surname. The most popular one says that Feroze was born to Faredoon Jehangir Ghandy and Ratimai, who lived in Mumbai. In his prime, Feroze was drawn to India's independence movement. He soon got inspired by Mahatma Gandhi and changed the spelling of his surname from ‘Ghandy’ to ‘Gandhi’. Apparently, Feroze considered himself a Parsi. At the same time, he was not religious என்று சொல்கிற இந்தச் செய்தி       மாமியார் இந்திராவே மறந்து போன பெரோஸ் காண்டியை மருமகள் சோனியா G நினைவில் வைத்துப் போற்றுகிற மாதிரி!

டூப்ளிகேட் காந்திகளுக்கு இப்போது ஒரிஜினல் காந்தி ஞாபகம் கூட வந்திருப்பது, காலம் செய்யும் கோமாளித் தனம் என்றுதான் சொல்லவேண்டுமோ?  



On the anniversary of Gandhi Ji’s historic Dandi March, the Congress Working Committee in Ahmedabad, resolved to defeat the RSS/ BJP ideology of fascism, hatred, anger & divisiveness. No sacrifice is too great in this endeavour; no effort too little; this battle will be won.

எதற்கு இந்தப் பழைய கதை? நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த M O மத்தாய் எழுதிய புத்தகம் இன்னும் துல்லியமாகச் சொல்கிறதே? இலவசமாய்க் கிடைத்தாலும் இங்கே புத்தகம் வாசித்துத் தகவலை கிரகித்துக் கொள்வதற்கு ஜனங்களுக்கு வரும் சோம்பல் இருக்கிறதே! அதைத்தான் மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு டுபாக்கூர்கள், ஒரிஜினல் காந்தியைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு இவர்களே காந்தி ஆகிவிட்டதாக ஒரு அய்யம்பேட்டை வேலை!


ராவுல் பாபா ஒரு கூட்டத்தில் மசூத் ஆசார் ஜி என்று ஒரு பயங்கரவாதியை மரியாதையாக அழைக்கும் வீடியோ கிளிப் ஒன்றை ட்வீட்டரில் பார்த்தேன். அதை வைத்து @timeshow என்ற ஐடியில் ராவுல் பாபாவை வச்சு செஞ்சதன் ஸ்க்ரீன் ஷாட் இது. அந்த அக்கௌன்ட் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறது.


உளறுவாயர்களுக்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது? !!

அதுசரி! இங்கே இசுடாலின்! அங்கே ராவுல் பாபா என்று உளறுவாயர்கள் கூட்டணி சேர்ந்திருக்கிற விசித்திரம், என்னவென்று சொல்வது? 

இவர்களை முற்றொட்டாக நிராகரிப்பது தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா என்ன?        

  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)