2500 கோடி ரூபாய் செலவில் சென்னையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பூங்காக்கள் அவசியம் தான்! ஒரு பேரிடர்த்தொற்று அபாயம் முற்றிலும் குறையாத தருணம் இது, இப்போது இது ரொம்ப முக்கியமா என்று கேள்வி கேட்டால் பதில் வருமா வராதா என்று எனக்குத் தெரியாது.
1980 களில் ராஜீவ் காண்டி பிரதமராக இருந்த சமயம், புதிய கல்விக்கொள்கை ஒன்று அறிவிக்கப்பட்டு அதன் ஒரு அம்சமாக மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளியும் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு நல்லவிஷயத்தையும் குறுக்கே விழுந்து மறிக்கும் இடதுசாரிகள் அதையும் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழகத்தில் அன்று ஆண்ட கழகம் என்ன காரணத்தாலோ நவோதயா பள்ளிகளைத் தமிழகத்துக்குள் நுழைய விடவில்லை. இப்போதும் கூட பூங்காவுக்குச் செலவிட உத்தேசித்திருக்கும் 2500 கோடியில் 125 - 150 நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசே செலவுசெய்து ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்யலாம். நீட் தேர்வு பற்றி எல்லாம் வீணாக அச்சப்படாமல் மாணவர்கள் தயாராக தரமான பள்ளிகளை உருவாக்குவதுதான் உண்மையான சமூகநீதி, சமநீதியும் கூட! இலவச சைக்கிள்களோ, கலர் டிவி போன்ற இலவசங்களோ அல்ல என்பதை யாரிங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பது?
மே 2க்கு முன்னால் தமிழகத்தில் எல்லோருமே பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்துத் தான் போராடினார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தை உதாரணமாக காட்டி, அங்கு போல தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து, விலையை குறைத்தால் என்ன என்றெல்லாம் கேட்டார்..
ஆனால் தற்போது, பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் எல்லாப் போராட்டத்திலும் மாநில அரசு கழன்று விட்டது; மத்திய அரசை மட்டும் கண்டிக்கிறார்கள். இங்கே ஒரு நியாயமான ஊடகமிருந்தால், அது என்ன கேள்வி எழுப்ப வேண்டும்? என சுந்தர் ராஜ சோழன் முகநூலில் கேள்வி எழுப்புகிறார். யார் இதற்குப் பதில் சொல்வது?
பிரிட்டன் உட்பட சில மேற்கத்திய நாடுகளில் Shadow Government என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் செயல் பாடுகள், துறை வாரியான யோசனைகள், விமரிசனம் என்பதை காப்பியடித்து பாமக இங்கே சிலகாலமாக நிழல் நிதிநிலையறிக்கை (பட்ஜெட் ) வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராம்தாஸ் இங்கே வெளியிட்டு இருக்கிறார். 126 அறிவிப்புக்களைக் கொண்டதாக இந்த அறிக்கை இருப்பதை பாமகவினரே புரிந்துகொண்டு விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஆளும் தரப்பு எப்படிப்புரிந்து கொள்ளுமோ?
ஒரு போலிப்பாதிரி மரணம் குறித்து விதம்விதமாகப் புகழுரைகளும் கார்டூன்களும் வந்துகொண்டே இருப்பதன் மீதான சலிப்பை போக்குகிற மாதிரி ஒத்திசைவு பதிவர் வெ.ராமசாமியின் இந்தப்பதிவு
மீண்டும் சந்திப்போம்.
//இப்போதும் கூட பூங்காவுக்குச் செலவிட உத்தேசித்திருக்கும் 2500 கோடியில் 125 - 150 நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசே செலவுசெய்து ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்யலாம். நீட் தேர்வு பற்றி எல்லாம் வீணாக அச்சப்படாமல் மாணவர்கள் தயாராக தரமான பள்ளிகளை உருவாக்குவதுதான் உண்மையான சமூகநீதி, சமநீதியும் கூட! இலவச சைக்கிள்களோ, கலர் டிவி போன்ற இலவசங்களோ அல்ல என்பதை யாரிங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பது? //
ReplyDeleteபூங்கா, சைக்கிள், டிவி போன்றவற்றுக்கு அரசு செலவழிக்கும்போது கட்சியினர் நன்றாக கல்லா காட்டுவார்கள், கீழிருந்து மேல் வரை. ஸ்கூல் கட்டினால் அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம்? மக்கள் மீது யாருக்கு அக்கறை இங்கே?
/மக்கள் மீது யாருக்கு அக்கறை இங்கே?/
Deleteஎன்னுடைய கேள்வியும் அதுதான் பந்து! மக்கள்தான் தங்களைப்பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அக்கறை கொள்ள வேண்டும். ஜனங்களுக்கே அந்த உருத்து இல்லாததால் தான் இந்தமாதிரி ஏமாற்றுப்பேர்வழிகளிடம் திரும்பத்திரும்ப ஏமாந்து கொண்டே இறுக்கிறார்கள்!?