Showing posts with label அக்கம் பக்கம் என்ன சேதி. Show all posts
Showing posts with label அக்கம் பக்கம் என்ன சேதி. Show all posts

Friday, April 10, 2020

அக்கம் பக்கம்! இன்று என்ன சேதி?

1950களில் இந்தோ சீனி பாய் பாய் என்ற முழக்கங்களை காங்கிரஸ்காரர்கள் எழுப்பிக்கொண்டு  இருந்த கதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு மாயஉலகில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எழுந்த கோஷம் அது. 1962 இல் இந்திய சீனப்போருக்குப் பிறகு அந்த கோஷம் என்ன ஆனது என்பது அந்த நாளைய CONகிரஸ் ஆசாமிகளுக்கே நினைவிருக்காது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோசீனி பாய்பாய் கோஷம் கடந்தவாரம் மறுபடி சீனத்தரப்பிலிருந்து வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப் பட்டிருக்கிறது என்பது காலமும் கொரோனா வைரசும் ஏற்படுத்தித் தந்திருக்கிற விசித்திரம்! இங்கே ஹிந்து நாளிதழுக்கும் செலெக்டிவாக வேறுசில ஊடகங்களுக்கும் இந்திய-சீன் உறவு: எழுபது ஆண்டுகள் என்று முழுப்பக்க விளம்பரங்கள் சீன தூதரகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டதைக்கூட  கவனித்திருக்க மாட்டோம் தானே! என்று இந்தப்பக்கங்களில் எழுதியதன் தொடர்ச்சியாக இன்று அக்கம் பக்கம்! என்ன சேதி தளத்துக்காக  

அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கின்றன. 

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்க.  

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

இது இன்று இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டதன் சுருக்கம்  நண்பர்கள் இந்தப்பக்கமும் வந்து வாசிக்கலாமே! மீண்டும் சந்திப்போம்.  

Friday, January 3, 2020

உலக அமைதியைக் கெடுக்க டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் -2

பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியனில் Donald Trump’s assassination of Qassem Suleimani will come back to haunt him என்று தலைப்பிட்டு மொகமது அலி ஷபானி எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது: The US has assassinated Qassem Suleimani, the famed leader of Iran’s Quds force, alongside a senior commander of Iraq’s Popular Mobilisation Units, Abu Mahdi al-Muhandis. To grasp what may come next, it is vital to understand not only who these men were but also the system that produced them.

Nicknamed the “Shadow Commander” in the popular press, Suleimani spent his formative years on the battlefields of the Iran-Iraq war during the 1980s, when Saddam Hussein – who at the time enjoyed the support of western and Arab powers – was attempting to destroy the emerging Islamic Republic. But few remember that his first major mission as commander of the Quds force – the extraterritorial branch of Iran’s Revolutionary Guards – was involved in implicit coordination with the United States as it invaded Afghanistan in 2001. The Taliban were, and to some extent remain, a mutual enemy. That alliance of convenience ended in 2002 when US president George W Bush notoriously branded Iran a member of the “Axis of Evil”. காசிம் சொலைமானி படுகொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அவரது இடத்தை  இஸ்மாயில் கானி என்கிற நம்பிக்கைக்குரிய துணைவர் நிரப்பிவிட்டார் என்பது படுகொலைகளின் வழியாக ஒருசில விஷயங்களை அழிக்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது என்கிற பாடத்தை, அவர்கள் கற்றுக்கொள்ளத்தயாராக இல்லை என்றாலும், அமெரிக்கர்களுக்குப் புகட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


மீண்டும் சந்திப்போம். 

Friday, November 15, 2019

அரசியல் செய்திகள்! கொஞ்சம் சுவாரசியமானதாக!

அமெரிக்க அதிபர்களில் தகுதிநீக்கம் செய்யப்படுகிற அளவுக்குப் போனது 1868 இல் ஆண்ட்ரூ ஜான்சன் என்பதற்குப்பிறகு 1974 இல் ரிச்சர்ட் நிக்சன், தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கியவுடனேயே ராஜினாமா செய்துவிட்டார் என்றவகையில் அவரே முதலாவது! நிக்சனுக்கு அப்புறம்  1999 இல் தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு ஆளாகி செனேட் வாக்கெடுப்பில் காப்பாற்றப் பட்டு பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தவர் பில் கிளிண்டன். அடுத்து 20 வருட காலத்தில் தகுதிநீக்க நடவடிக்கைகள்  டொனால்ட் ட்ரம்ப் மீது தொடங்கியிருக்கின்றன என்பது கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான செய்தி.


டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்க நடவடிக்கைகளை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்பது டெமாக்ரட்டுகளுடைய எரிச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது.

  
தமிழக அரசியல்நிலவரமே சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையே! இந்த லட்சணத்தில்  அடுத்தவீடு ஆந்திரா, தெலங்கானா அரசியலைப் பற்றி என்னவென்று எழுதுவதாம்? ஹிந்து நாளிதழில் இன்று சுரேந்திரா வரைந்திருக்கிற இந்த ஒரு கார்டூன் அங்கேயும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையென்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.


அமேசான் எழுத்தாளர்கள் தமிழில் பெருகிப் போனதில் எழுத்தும் வாசிப்பும் வளர்ந்ததோ இல்லையோ, திமுக ஆதரவாளர்கள் உபயத்தில் அக்கப்போர்களுக்குப் பஞ்சமே இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது. 

  
இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா நினைவு உரையாக 48 நிமிடங்கள் பேசியதை The Print தளத்தின் சேகர் குப்தா, இந்த 25 நிமிட வீடியோவில் விளக்குகிறார். வெளியுறவுக் கொள்கையில் படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் எழுதிவருவது நண்பர்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதை கொஞ்சம் கேளுங்கள், விரிவான பதிவாக பிறகு பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.           

Monday, October 7, 2019

கலைவாணிக்கு வணக்கம்! அது கலைஞர்களுக்கும் சேர்த்துத் தான்!

சரஸ்வதி பூஜை என்று கலைவாணியை வணங்குகிற நாள் இன்று! அப்படியானால் கலைவாணர்களை? இரண்டில் எது ஒன்றைச் செய்தாலும் இன்னொன்றையும் செய்த மாதிரித் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம்! அதற்காகக் கூத்தாடிகளை நடுவீட்டிற்குள் அழைத்துவந்து  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது என்று அர்த்தமில்லை. 


ரேவதி சங்கரன்! நினைவிருக்கிறதா? பன்முகத்திறமை கொண்ட ஒரு கலைஞர்! சரியாகத்  தெரியவில்லையே என்று புருவத்தை நெரிக்கிறீர்களா?  இந்த 26 நிமிட வீடியோவைப் பாருங்கள், ஞாபகம் வந்துவிடும்! 


இந்த 42 நிமிட சோலோ நிகழ்ச்சியில் முதல் 30 நிமிடங்கள்  எப்படிக் கலக்குகிறார் என்று கொஞ்சம் பாருங்கள்! (அப்புறம் சில பழைய படங்களில் இருந்து கிளிப்பிங்ஸ்)  தொடங்கும் போது அப்பளக் கச்சேரி என்று பழைய நாட்களில் கிராமங்களில் இருந்த அப்பளமிடும் முறையைச் சொன்ன விதத்தில்  எழுத்தாளர் தேவனின் அப்பளக் கச்சேரி தொடரில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக நினைவுக்கு வந்து போனார்கள். நாட்டியம் தெரியாத  அஞ்சலி தேவி, பானுமதி இவர்களை எப்படி நாட்டியமாடுகிற மாதிரி காமெராவில் காண்பித்தார்கள் என்பதைச் சொன்னவர் போகிற போக்கில் பத்மினி நலந்தானா நலந்தானா பாட்டுக்கு லெக்கின்ஸ் மேலே விசிறிமடிப்பு வைத்தமாதிரி உடையணிந்து  ஆடியதையும் சொல்லத் தவறவில்லை. இவர் இப்படிப் பேசியது நாட்டிய கலா கானபெரென்ஸ் என்ற நிகழ்ச்சியில்!  


கலைவாணிக்கு வந்தனம் செய்ய ஆரம்பித்த பதிவில் இந்த இரண்டுபேரும் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்கிறீர்களா? ராஜீய உறவுகளைத்  திறம்படக் கையாளுவதே ஒரு தனிக்கலை! பிரதமர் நரேந்திரமோடி அதில் வித்தகர் என்றால் இத்தனைநாட்கள் திறமைகளைக் காட்டாமல் ஒதுங்கியே இருந்த நம்முடைய வெளியுறவுத்துறை, முந்தைய காலங்களில் இல்லாத சுறுசுறுப்பை வெளிக்காட்டிவருவதில் நம்முடைய வெளியுறவுக் கொள்கை முதிர்ச்சியடைந்து வருகிற விதமும் சமீபகாலத்து நிகழ்வுகளில் தெரிகிறது!  வருகிற வெள்ளிக் கிழமை மதியம் சென்னை வந்திறங்குகிற சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 24 மணி நேரங்களில் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடுகிற விதத்திலும், மாமல்லபுர சிற்பங்களை இருவருமே சேர்ந்து பார்க்கிற மாதிரியும் நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டிருப்பதில் கூடுதல் சுவாரசியமும் ஒன்று இருக்கிறது. 


வழக்கமாக சீன அதிபர் இந்தியப் பிரதமருடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து அடாவடி செய்வதையும் ஒரு மறைமுகமான மிரட்டலாகச் செய்துதானே பார்த்திருக்கிறோம். இந்த முறை இந்தியா வித்தியாசமாக சீன அதிபர் வருகைக்கு முன் ஒரு கட்டமாக, வந்துபோன பிறகு இன்னொரு கட்டமாக என்று லடாக்கின் கிழக்குப் பகுதியிலும் அருணாச்சல பிரதேசத்திலுமாக ஹிம் விஜய் என்ற பெயரில் மலைப்பிரதேசப்போர் ஒத்திகை ஒன்றை நடத்துவதில் முதல் கட்டம் இன்று 7ஆம் தேதி தொடங்கி 10 தேதி வரையிலும் அடுத்த கட்டம் 20-24 தேதி வரை நடக்கிறது. வழக்கம் போல சீனா இதற்குத் தனது கண்டணத்தைத் தெரிவித்திருப்பதில் சீன அதிபர் விஜயம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது நாளை அல்லது நாளை மறுநாள்தான் உறுதியாகும். ஆனாலும் போர் ஒத்திகையை ரத்துசெய்வதில்லை என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று TOI செய்தி சொல்கிறது.

முந்தைய நாட்களில் நாம் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை நமது நட்பு நாடோ எதிரிகளோ தான் தீர்மானித்து வந்தது இனிமேல் நடக்கவே  நடக்காது என்பதில்  மிகத் தெளிவாக இந்திய அரசு இருக்கிறது.

இந்தமாதிரிச் செய்திகளுக்கென்றே அக்கம் பக்கம்! என்ன சேதி! தளம் தனியாக இருக்கிறது. இங்கே வருகிற நண்பர்கள் அந்தப்பக்கங்களுக்கும் வந்துபார்த்தால் அடிக்கடி இதுமாதிரித் தம்பட்டம், சுயவிளம்பரம் எல்லாம் தேவையில்லை தான்! மனது வைக்கவேண்டியது நீங்கள் தான்!

மீண்டும் சந்திப்போம்.   
     .

            

Tuesday, September 17, 2019

அக்கம் பக்கம்! என்ன சேதி! வெளியுறவு விவகாரங்கள்!

இன்றைக்கு கவனிக்கவேண்டிய முக்கியச் செய்தியாக நரேந்திர மோடி அரசு 2.0 முதல் நூறு நாட்களில் சாதித்ததென்ன, வெளியுறவு விவகாரங்களில் என்ன முன்னேற்றம், வெளியுறவுக்கொள்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் இப்படி முக்கியமான விஷயங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு விளக்கிய நிகழ்வின் காணொளி. அமைச்சர் உரையும் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலுமாக 71 நிமிடம். 


பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பதவிக்கு வந்த நாட்களில் இருந்தே இந்திய வெளியுறவுத்துறை கொஞ்சம் சுறுசுறுப்பாக, முதிர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்த விதத்தை Consenttobe....nothing! தளத்திலும் அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வருவதை நண்பர்கள் வாசித்திருக்கலாம்! Neighbourhood First, Act East என்று மிகவும் முக்கியமான விஷயங்களை  முந்தைய காலங்களில் நினைத்துப் பார்த்தது கூட இல்லையென்றே சொல்லிவிடலாம்! முந்தைய காலங்களில் நமது வெளியுறவுக்கொள்கை என்பது பெரும்பாலும் பாகிஸ்தானை மையப்படுத்தியே இருந்தது. ஒரு வலிமையான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துவரும் சூழலில் வெளியுறவு விவகாரங்களில் முதிர்ச்சியோடு விரைந்து செயல்படுகிற தன்மையோடு வெளியுறவுத்துறை மாறியாக வேண்டியிருந்தது. ஒரு உறுதியான  அரசியல் தலைமை  இருக்கும்போது, அதற்குத் தகுந்தமாதிரி வெளியுறவுத் துறையும் தன்னைத் தகவமைத்துக் கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன
    
தமிழர்களுக்கு இந்த அளவு செய்தி சொன்னாலே போதும் என்று தினமலர் நினைக்கிறது போல. தினத்தந்தி மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு வரி சேர்த்துச் சொல்லி இருப்பதைத் தவிர வேறு தமிழக ஊடகங்களில் இதுவரை செய்தியைக் காணோம்.

இந்தக் காணொளியில் அமைச்சர் ஜெய்சங்கர் சுருக்கமாக நூறு நாள் சாதனையாகச் சொல்லிவிட்டு, நிருபர்கள் கேள்விக்கு விரிவாக அண்டைநாடுகளுடனான உறவு, சீனா, பாகிஸ்தான், அப்புறம் அமெரிக்காவுடனான உறவுகள் கடந்த 20 ஆண்டுகளை விட எவ்வளவு முன்னேறியிருக்கின்றன என்று விரிவாகவே பதில் சொல்லியிருக்கிறார். 

வெளியுறவு விவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளியாகப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.                      . 

Saturday, September 7, 2019

உலகின் நட்டநடு நாயகம் யார்? சீனாவா? அமெரிக்காவா?

சீன அரசியலைப்பற்றியோ சீன அதிபராக இரண்டாவது முறையாகவும் தொடருகிற ஜி ஜின்பிங் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? என்ன கிண்டலா? பேசினால் காங்கிரசைப்பற்றியே பேசுவது இல்லாவிட்டால் ஏதாவது சீனா கொரியா அமெரிக்கப் பூச்சாண்டி காட்டுவது! இதெல்லாம் சரியில்லை என்று முனகுகிறீர்களா? ஆகஸ்ட் கடைசிநாளன்று எழுதிய பதிவு நினைவிருக்கிறதா?


இன்றைக்கு நாளிதழ்களில் முக்கிய செய்தியாகிவரும் ஹாங்காங் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், 22 வருடங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ்காரர்கள் வசமிருந்த ஹாங்காங், கம்யூனிஸ்ட் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கொஞ்சம் மேலே உள்ள வீடியோவில் (10 நிமிடம்) பார்க்கலாம். ஹாங்காங் மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப் படும் என்ற வாக்குறுதி One Country Two Systems முழக்கத்தோடு ஆரம்பமான ஹாங்காங் இன்றைக்கு ஏன் கலவர பூமியாக ஆகிக்கொண்டிருக்கிறது?


Umbrella Movement என்று 2014 இல் ஆரம்பித்த போராட்டங்கள் இன்று வரை தொடர்வது ஏன்?  இந்த 25நிமிட வீடியோ செய்திக் கதை கொஞ்சம் விவரிக்கிறது. 2 வருடப்பழசுதான்! ஆனால். வளவளக்காமல் சொல்கிறது என்பதால் இங்கே. 

இதுபோல, நம்மைச்சுற்றி நடக்கிற செய்திகளை, அவை நம்மை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பேசுவதற்காகவே தனியாக ஒரு வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது ஞாபகம் வருகிறதா?

அந்தப்பக்கங்களுக்கும் வாருங்களேன்! Tianxia உலகத்தின் நட்டநடு நாயகம் என்ற பொருளில், அமெரிக்காவும் சீனாவும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற செய்திகளைக் கொஞ்சம் வாசிக்கலாம். அக்கம் பக்கம்! என்ன சேதி!   என்று தெரிந்து கொள்ளலாம்!  

மீண்டும் சந்திப்போம்.       

Thursday, August 29, 2019

ஓடி வாங்க! பூச்சாண்டி பார்க்கலாம்!

டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற  செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்? 



சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள்!

இது அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்காக இன்று எழுதிய பதிவின் ஒருபகுதி!  

இங்கே விரிவாகப்படிக்கலாம்.

இந்தப்பக்கங்களை புக்மார்க் செய்துகொள்வதுடன் நண்பர் குழாத்துக்கும் பரிந்துரை செய்வீர்கள் தானே!

நன்றி. மீண்டும் சந்திப்போம்.
   
  

Wednesday, August 7, 2019

அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் இன்று

ஒரு புத்தகம்! அப்புறம் உல்டாவாக ஒரு பேட்டி!  என்னவென்று விரிவாகப் படிக்க 



B. R. Mahadevan
காஷ்மீர் யாருக்கு சொந்தம்?
நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்துவிட்டிருக்கிறது.
படேல், அம்பேத்கர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநில மக்களைத் துளியும் கலந்தாலோசிக்காமல் காஷ்மீருக்கு என்று சிறப்பு சலுகையை நேரு தன்னிச்சையாக வழங்கினார்.
இன்று அந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் ஓர் அங்கமான காஷ்மீரில் அதே தேசத்தின் பிற அங்கங்களான பிற மாநிலத்தினர் நிலம் வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது என்பது தொடங்கி காஷ்மீருக்கு என்று தனி சட்டசபை; தனி கொடி; பாகிஸ்தானியருக்கு காஷ்மீரில் இருக்கும் சில உரிமைகள் கூட இந்தியர்களுக்குக் கிடையாது எனப் பல சலுகைகள் காஷ்மீருக்குத் தரப்பட்டதற்கு என்ன காரணம்?
உண்மையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா... பாகிஸ்தானுக்கா... அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? என்ற இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி எ மிஷன் இன் காஷ்மீர் (தமிழில்: காஷ்மீர் முதல் யுத்தம்) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார்.
பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார்.
பிரிவினையின் போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த மடாலயத்தில்தான் காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல், 91 வயதில் மரணத்தின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.
அவர் சொன்ன விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக் கண் முன் கொண்டுவருவதில் கடும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம்... பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.
பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்துஸ்தானானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை படேலின் பொறுப்பில் விடப்பட்ட 500 சொச்சம் சமஸ்தானங்களில் சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அது நேருவின் கையில் விடப்பட்ட காஷ்மீர்.
காஷ்மீர் பிரச்னை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது... உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய ராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷ்மீர் மீதான பாகிஸ்தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள் வரை அனைத்து அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷ்மீர் பிரச்னை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.

அக்கம் பக்கம்! என்ன சேதி!  தளம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் புக்மார்க் செய்து வைத்துக் கொண்டோ அல்லது மின்னஞ்சலில் பதிவுகளைப் பெறுகிற மாதிரியோ செய்து கொள்வதுடன் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
   

Friday, March 15, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள் #2

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கர வாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி.


அவர்கள் பார்வையில் இந்திய பிரதமர் சீனாவுக்கு முன்னால் பயந்து நிற்கிற பிரதமர், அவ்வளவுதான்! தேசத்தைவிட அவர்களுக்குக் கட்சி அரசியல் தான் முக்கியம். National Conference leader Omar Abdullah said on Thursday the BJP cannot claim to have been tough on terror as Prime Minister Narendra Modi "surrendered" to China on Masood Azhar இது News 18 செய்தி.  

ஆனால்  உண்மை நிலவரம் அப்படித் தானா?


The United States, France, and Britain were behind the most recent move (Russia has also been very supportive) and the "technical hold" means China has warded off the issue for three months. And then, if it wants a second "hold," more breathing space for another six months, after which a decision is mandatory. Then, China will have to say "Yes" or "No". Will it support the rest of the 15-member UNSC or will it support Pakistan's Masood Azhar? But are these countries, or for that matter, India, which is not a member of the UNSC, ready to wait? This time, they are not. என்கிறது டைம்ஸ் நவ் செய்தி.

பாகிஸ்தானோடு சேர்ந்து  சீனாவும் உலகின் இதர நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகிற சூழல் இப்போது உருவாகி வருகிறது. இடதுசாரி வார இதழ் BLITZ இன் துணை ஆசிரியராக இருந்து, அப்புறம் வாஜ்பாய், அத்வானி இருவருக்கும் நெருக்கமாக இருந்து இப்போது பிஜேபி எதிர்ப்பாளராக ஆகியிருக்கும் சுதீந்த்ர குல்கர்னி NDTVயில் Best Way To Deal With China? Befriend Pakistan என்று நக்கலாகத் தலைப்பிட்டு உபதேசம் எழுதுகிறார். 

இப்படி இங்குள்ள ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்மறையாய்ச் செயல்படுகிற விதம் குறித்து இங்கே இந்தியாவின் எதிரிகள் யார்? நமக்குள்ளேயே இருக்கிறார்களே! பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சீனா போட்டுவரும் முட்டுக்கட்டை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் இப்படிச் சொல்கிறது. This episode is not the end of the matter for India. The listing definitely would have been a diplomatic victory, but the unsuccessful effort does not mean that Masood Azhar is not a terrorist in the eyes of the world. In fact, just the opposite, as seen from the number of countries that supported the proposal. Each of those non-permanent members is a representative of its region in the Security Council. No one doubts that the JeM is headquartered in Pakistan, and that Azhar is based there too. India has succeeded in making clear both the JeM’s role in the February 14 Kashmir bombing, and its own intention of not holding back on exercising a military option against terrorist groups based inside Pakistan. 



இது டைம்ஸ்  ஆப் இந்தியா செய்தியில் இருக்கும் படம். சீனா தொடர்ந்துபோட்டுவரும் முட்டுக்கட்டை அதற்கே பாதகமாகக் கூட மாறலாம். சீனா தன்னுடைய சொந்தநலன்களைப் பாகிஸ்தானுக்காகக் காவு கொடுக்காது என்பது 1965 இந்தியா பாகிஸ்தான் போர் முதல் சென்றமாதம் பாலாகோட்  JeM பயிற்சிப்பட்டறை மீது இந்தியா எடுத்த நடவடிக்கைவரை வெளிப்பட்டதே!

Days after pledging to designate Pakistan-based Jaish-e-Mohammed chief Masood Azhar as a global terrorist at the United Nations, France has sanctioned him and frozen his assets on its soil. என்று முதலடியை இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் எடுத்திருக்கிற செய்தியை இன்றைய Hindu நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

அப்படியானால் பாகிஸ்தான்......?


கேசவ் இன்று வரைந்த கோடுகளே சொல்கிறதே!


அக்கம் பக்கம்! என்ன சேதி! வலைப்பக்கங்களில் இன்று வெளியான பதிவு இது. பிடித்திருந்தால் புக்மார்க் செய்துகொள்ளுங்கள்! பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்!   

Tuesday, January 29, 2019

ஆப்கானிஸ்தான், தாலிபான், பாகிஸ்தான்! இது என்ன முக்கோணம்?

மெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு தானே எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

ப்படி ஆரம்பித்து நேற்றைக்கு அக்கம் பக்கம் என்ன சேதி தளத்தில் எழுதியபிறகு, இன்று எகனாமிக் டைம்சில்
Pakistan is taking satisfaction that its view on resolving the Afghanistan problem is proving correct. Taliban is stressing to the US and others, including India, that it is an independent actor, not a creature of Pakistan. The fact is that Pakistan continues to have great leverage over it but does not, at this time, entirely control it. லோக்சபா தேர்தல்கள் வருகிற சமயமானாலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கண்வைத்திருக்க வேண்டும் என்று அரசுக்கு உபதேசம் செய்கிற மாதிரி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக முன்னால் பணியாற்றிய விவேக் கட்ஜு எழுதியிருப்பதைப் பார்த்தேன்.  

ம்மூர் பாபுகளுக்கு(அதிகாரி வர்க்கம்)  பணியை விட்டு வெளியே வந்த பிறகுதான், இது மாதிரி உபதேசம் செய்கிற தைரியம் வருகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. பணியாற்றுகிற சமயங்களில் வெறும் தலையாட்டி பொம்மைகளாகவோ, ஆதாயம் இருந்தால் மட்டுமே வாயைத் திறக்கிறவர்களாகவோ இங்கே அதிகாரிகள் வர்க்கம் இருப்பது தெரிந்த விஷயம்! வெளியுறவுத்துறையில் மலையாளிகள் மற்றும் மும்பைகர்கள் செயல்படுகிற விதத்தை, அறிந்துகொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை கவனித்திருக்கிறேன்.  

தாலிபான்கள் முழுக்க முழுக்க பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்று விவேக் கட்ஜு ஒரு பகுதியை மட்டும் சொல்கிறார். ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று மூன்று நாடுகளிலும் வேர் பிடித்திருக்கிற இயக்கம் தாலிபான். ஆரம்பநாட்களில், ரஷ்யா ஆப்கானிஸ்தான் புதைகுழியில் சிக்கிய போது, அமெரிக்கர்களாலும்,  அடுத்து அமெரிக்கா சிக்கியபோது ரஷ்யர்களாலும் கொம்புசீவப்பட்டு வளர்க்கப்பட்டது தாலிபான் என்பதை கவனத்தில் கொண்டுதான் உபதேசம் செய்தாராமா?

தாலிபான்கள் விஷயத்தில் ஈரானும் ஒரு stakeholder என்பது இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் புதிய வாய்ப்புக்களுக்கான கதவையும் திறந்து வைத்திருக்கிறது. 

அக்கம் பக்கம்! என்ன சேதி!

மேலே ஒரு புதிய வலைப்பக்கத்தின் சுட்டி இருக்கிறது. படித்துப் பார்த்துப் பிடித்திருந்தால், நண்பர்களுக்கும் பகிரவோ பரிந்துரை செய்யவோ, மனது வைக்கலாமே!

       

Saturday, January 26, 2019

இந்த நூற்றாண்டு சீனாவுடையதா?

அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்து பிறக்கிறது என்பது சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு #மாசேதுங் கற்பித்த வலுவான பாடம். அதனால் தானோ என்னவோ சீனா தன்னுடைய அண்டை நாடுகள் எதனுடனும் #சுமுகஉறவுகள் வைத்துக்கொண்டதே இல்லை.

#வாய்க்கால்வரப்புத்தகராறு கள் போலவே அண்டைநாடுகள் அத்தனையுடனும் தகராறு #எல்லைப்பிரச்சினைகள் அடாவடிகள், அத்து மீறுவது, வன்மத்தைக் கக்குவது இவையெல்லாம் சீன ராணுவத்துக்கும் சீன கம்யூனிஸ்ட்கட்சிக்கும் உள்ள பொதுவான குணங்கள்.

#மாசேதுங் சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் விடுபட்ட நிலையில் தான் #டெங்சியாவோபிங் சீனாவை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திச் செல்ல முடிந்தது என்பதில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும், ராணுவமும் அடக்கியே வாசிக்கவைக்கப்பட்டன. முழுக்கவனமும் சீனாவை தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்குவதிலேயே செலுத்தப்பட்டது. #டெங்சியாவோபிங் வழியில் சீனா முப்பதே வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவானது.

#சீனவர்த்தகநடைமுறைகள் எப்படிப்பட்டவை என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், இங்கே கவனம் கொள்ள வேண்டியது சீனா #வர்த்தகஉபரி யாக இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைக் கையிருப்பாக, குறிப்பாக அமெரிக்க அரசு கடன்பத்திரங்களில் முதலீடாக வைத்திருக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதுதான்.

இந்தப் பின்னணியில் தான் சீன ராணுவ அதிகாரி ஒருவரின் மகனான #ஜிஜின்பிங் சீன அதிபராகவும், கம்யூனிஸ்ட்கட்சித் தலைவராகவும் 2012 இல் உருவானார். கம்யூனிஸ்ட் கட்சிமீதும் ராணுவத்தின் மீதும் தனதுபிடியை வலுப்படுத்திக் கொண்டே வந்த அதே சமயம் சீனர்களுக்குள் ஒரு கனவையும் விதைத்தார்.

#AmericanTianxia என்கிற வார்த்தைப்பிரயோகம் முதன்முதலில் 2013 இல் #வாங்குங்வு என்கிற சரித்திர ஆசிரியரால் பயன் படுத்தப் பட்டது. உலகத்துநாடுகளின் மொத்த அரசியல், பொருளாதாரத்துக்கும் #அமெரிக்கா நடுநாயகமாக (அல்லது ஆதாரமாக) இருக்கிறது என்று பொருள்படும்படியாக. இதே கருத்தை ஒரு சிறுபுத்தகமாக விரிவு செய்து அமெரிக்கா இன்னமும் உலகின் நடுநாயகமாக இருக்கிறது என்று #சால்வடோர்பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலியப்பேராசிரியர் எழுதியதைப் பற்றி முன்னமே கூகிள் பிளஸ்சில் பேசியிருக்கிறோம்.

20ஆம் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது போலவே 21ஆம் நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும். சீனா உலகின் நடுநாயகமாக இருக்கும் இப்படி ஒரு சிந்தனை சீனர்களிடையே சிலகாலமாகவே இருப்பதுதான்! அதற்குச் செயல்வடிவம் தருகிற மாதிரியே #ஜிஜின்பிங் #ஒரேபெல்ட்ஒரேரோடு என்கிற #OBOR #BeltandRoadInitiative திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இதெல்லாம் சின்னச் சின்னப் பகிர்வுகளாகத் தரவுகளுடன் பலமுறை இங்கே கூகிள் பிளஸ்சில் பேசப்பட்டதுதான்.

இந்த அடிப்படை விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது இந்த விஷயத்தில் புதிதாகச் சொல்வதற்கு என்ன என்பதை பார்ப்போம்.

In a surprise Sunday move, Beijing announced that the Communist Party leadership wants to abolish the two-term limit for China’s president and vice president, potentially paving the way for China’s 64-year-old President Xi Jinping to stay in power indefinitely. What does this mean for Chinese politics, political reform, and relations with the rest of the world? http://www.chinafile.com/conversation/xi-wont-go

எல்லா அரசியல்வாதிகளுக்கும் வருகிற அதே வியாதிதான்! #நிரந்தரத்தலைவர் ஆக ஆயுட்காலம் முழுக்க இருந்துவிடுகிற முனைப்பு ரஷ்யாவின் புடினைத் தொடர்ந்து #ஜிஜின்பிங் குக்கும் வந்து சீனக்கம்யூனிஸ்ட் கட்சி விதிகளிலும் திருத்தம் மேற்கொள்ளப் படவிருக்கிறது என்பது செய்தி. சரி! அது அவர்கள் உள்விவகாரம் நமக்கென்ன என்கிறீர்களா?

பிலிப்பைன்ஸ் அதிபர் தென்சீனக்கடல் செயற்கைத்தீவுகள் அமெரிக்கா சீனாவுக்குமான பிரச்சினை எங்களுக்கென்ன வந்தது? என்று அலட்சியமாகப் பேசியது போல இந்தியாவும் இருந்துவிடமுடியாது இந்த #Infographic இல் என்னதான் சொல்கிறார்கள் என்பதையாவது படத்தைப்பெரிதாக்கிப் பார்த்து விடுங்கள்.

சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்!


இப்படி நம்மைச் சுற்றி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், நம்மை எப்படி பாதிக்கும், நமக்கென்ன சம்பந்தம் என்று செய்திகள், அவை மீதான சிறு குறிப்பு , விமரிசனங்களோடு ஒரு புதிய வலைப்பக்க அறிமுகம்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)