அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய் தாலிபான்களுக்கு தானே எல்லாமுமாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய் தாலிபான்களுக்கு தானே எல்லாமுமாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?
இப்படி ஆரம்பித்து நேற்றைக்கு அக்கம் பக்கம் என்ன சேதி தளத்தில் எழுதியபிறகு, இன்று எகனாமிக் டைம்சில்
Pakistan is taking satisfaction that its view on resolving the Afghanistan problem is proving correct. Taliban is stressing to the US and others, including India, that it is an independent actor, not a creature of Pakistan. The fact is that Pakistan continues to have great leverage over it but does not, at this time, entirely control it. லோக்சபா தேர்தல்கள் வருகிற சமயமானாலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கண்வைத்திருக்க வேண்டும் என்று அரசுக்கு உபதேசம் செய்கிற மாதிரி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக முன்னால் பணியாற்றிய விவேக் கட்ஜு எழுதியிருப்பதைப் பார்த்தேன்.
நம்மூர் பாபுகளுக்கு(அதிகாரி வர்க்கம்) பணியை விட்டு வெளியே வந்த பிறகுதான், இது மாதிரி உபதேசம் செய்கிற தைரியம் வருகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. பணியாற்றுகிற சமயங்களில் வெறும் தலையாட்டி பொம்மைகளாகவோ, ஆதாயம் இருந்தால் மட்டுமே வாயைத் திறக்கிறவர்களாகவோ இங்கே அதிகாரிகள் வர்க்கம் இருப்பது தெரிந்த விஷயம்! வெளியுறவுத்துறையில் மலையாளிகள் மற்றும் மும்பைகர்கள் செயல்படுகிற விதத்தை, அறிந்துகொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை கவனித்திருக்கிறேன்.
தாலிபான்கள் முழுக்க முழுக்க பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்று விவேக் கட்ஜு ஒரு பகுதியை மட்டும் சொல்கிறார். ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று மூன்று நாடுகளிலும் வேர் பிடித்திருக்கிற இயக்கம் தாலிபான். ஆரம்பநாட்களில், ரஷ்யா ஆப்கானிஸ்தான் புதைகுழியில் சிக்கிய போது, அமெரிக்கர்களாலும், அடுத்து அமெரிக்கா சிக்கியபோது ரஷ்யர்களாலும் கொம்புசீவப்பட்டு வளர்க்கப்பட்டது தாலிபான் என்பதை கவனத்தில் கொண்டுதான் உபதேசம் செய்தாராமா?
தாலிபான்கள் விஷயத்தில் ஈரானும் ஒரு stakeholder என்பது இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் புதிய வாய்ப்புக்களுக்கான கதவையும் திறந்து வைத்திருக்கிறது.
மேலே ஒரு புதிய வலைப்பக்கத்தின் சுட்டி இருக்கிறது. படித்துப் பார்த்துப் பிடித்திருந்தால், நண்பர்களுக்கும் பகிரவோ பரிந்துரை செய்யவோ, மனது வைக்கலாமே!
No comments:
Post a Comment