அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்து பிறக்கிறது என்பது சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு #மாசேதுங் கற்பித்த வலுவான பாடம். அதனால் தானோ என்னவோ சீனா தன்னுடைய அண்டை நாடுகள் எதனுடனும் #சுமுகஉறவுகள் வைத்துக்கொண்டதே இல்லை.
#வாய்க்கால்வரப்புத்தகராறு கள் போலவே அண்டைநாடுகள் அத்தனையுடனும் தகராறு #எல்லைப்பிரச்சினைகள் அடாவடிகள், அத்து மீறுவது, வன்மத்தைக் கக்குவது இவையெல்லாம் சீன ராணுவத்துக்கும் சீன கம்யூனிஸ்ட்கட்சிக்கும் உள்ள பொதுவான குணங்கள்.
#மாசேதுங் சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் விடுபட்ட நிலையில் தான் #டெங்சியாவோபிங் சீனாவை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திச் செல்ல முடிந்தது என்பதில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும், ராணுவமும் அடக்கியே வாசிக்கவைக்கப்பட்டன. முழுக்கவனமும் சீனாவை தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்குவதிலேயே செலுத்தப்பட்டது. #டெங்சியாவோபிங் வழியில் சீனா முப்பதே வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவானது.
#சீனவர்த்தகநடைமுறைகள் எப்படிப்பட்டவை என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், இங்கே கவனம் கொள்ள வேண்டியது சீனா #வர்த்தகஉபரி யாக இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைக் கையிருப்பாக, குறிப்பாக அமெரிக்க அரசு கடன்பத்திரங்களில் முதலீடாக வைத்திருக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதுதான்.
இந்தப் பின்னணியில் தான் சீன ராணுவ அதிகாரி ஒருவரின் மகனான #ஜிஜின்பிங் சீன அதிபராகவும், கம்யூனிஸ்ட்கட்சித் தலைவராகவும் 2012 இல் உருவானார். கம்யூனிஸ்ட் கட்சிமீதும் ராணுவத்தின் மீதும் தனதுபிடியை வலுப்படுத்திக் கொண்டே வந்த அதே சமயம் சீனர்களுக்குள் ஒரு கனவையும் விதைத்தார்.
#AmericanTianxia என்கிற வார்த்தைப்பிரயோகம் முதன்முதலில் 2013 இல் #வாங்குங்வு என்கிற சரித்திர ஆசிரியரால் பயன் படுத்தப் பட்டது. உலகத்துநாடுகளின் மொத்த அரசியல், பொருளாதாரத்துக்கும் #அமெரிக்கா நடுநாயகமாக (அல்லது ஆதாரமாக) இருக்கிறது என்று பொருள்படும்படியாக. இதே கருத்தை ஒரு சிறுபுத்தகமாக விரிவு செய்து அமெரிக்கா இன்னமும் உலகின் நடுநாயகமாக இருக்கிறது என்று #சால்வடோர்பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலியப்பேராசிரியர் எழுதியதைப் பற்றி முன்னமே கூகிள் பிளஸ்சில் பேசியிருக்கிறோம்.
20ஆம் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது போலவே 21ஆம் நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும். சீனா உலகின் நடுநாயகமாக இருக்கும் இப்படி ஒரு சிந்தனை சீனர்களிடையே சிலகாலமாகவே இருப்பதுதான்! அதற்குச் செயல்வடிவம் தருகிற மாதிரியே #ஜிஜின்பிங் #ஒரேபெல்ட்ஒரேரோடு என்கிற #OBOR #BeltandRoadInitiative திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இதெல்லாம் சின்னச் சின்னப் பகிர்வுகளாகத் தரவுகளுடன் பலமுறை இங்கே கூகிள் பிளஸ்சில் பேசப்பட்டதுதான்.
இந்த அடிப்படை விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது இந்த விஷயத்தில் புதிதாகச் சொல்வதற்கு என்ன என்பதை பார்ப்போம்.
In a surprise Sunday move, Beijing announced that the Communist Party leadership wants to abolish the two-term limit for China’s president and vice president, potentially paving the way for China’s 64-year-old President Xi Jinping to stay in power indefinitely. What does this mean for Chinese politics, political reform, and relations with the rest of the world? http://www.chinafile.com/conversation/xi-wont-go
எல்லா அரசியல்வாதிகளுக்கும் வருகிற அதே வியாதிதான்! #நிரந்தரத்தலைவர் ஆக ஆயுட்காலம் முழுக்க இருந்துவிடுகிற முனைப்பு ரஷ்யாவின் புடினைத் தொடர்ந்து #ஜிஜின்பிங் குக்கும் வந்து சீனக்கம்யூனிஸ்ட் கட்சி விதிகளிலும் திருத்தம் மேற்கொள்ளப் படவிருக்கிறது என்பது செய்தி. சரி! அது அவர்கள் உள்விவகாரம் நமக்கென்ன என்கிறீர்களா?
பிலிப்பைன்ஸ் அதிபர் தென்சீனக்கடல் செயற்கைத்தீவுகள் அமெரிக்கா சீனாவுக்குமான பிரச்சினை எங்களுக்கென்ன வந்தது? என்று அலட்சியமாகப் பேசியது போல இந்தியாவும் இருந்துவிடமுடியாது இந்த #Infographic இல் என்னதான் சொல்கிறார்கள் என்பதையாவது படத்தைப்பெரிதாக்கிப் பார்த்து விடுங்கள்.
சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்!
இப்படி நம்மைச் சுற்றி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், நம்மை எப்படி பாதிக்கும், நமக்கென்ன சம்பந்தம் என்று செய்திகள், அவை மீதான சிறு குறிப்பு , விமரிசனங்களோடு ஒரு புதிய வலைப்பக்க அறிமுகம்!
No comments:
Post a Comment