Saturday, January 19, 2019

படித்தான் பரிந்துரை! சில புத்தகங்கள்

தோ பழங்காலத்துக் கதை, ரொம்பவே போரடிக்கும் என்று எண்ணுகிறவர்கள் படித்துப் பார்த்தால் தாங்கள் எண்ணியது எவ்வளவு தவறு  என்பதைப் புரிந்து கொள்வார்கள்.சமூகநீதி, சமநீதி, ஒதுக்கீடு என்று  சில பகிர்வுகளை இந்தப்பக்கங்களில் பார்த்துக் கொண்டு வந்தது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக  முன்னம் படித்த சில நல்ல புத்தகங்களை இங்கே அறிமுகமாகப் பார்க்கலாமா?

  
தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் எழுதிய இந்தப் புத்தகம் கேரளாவில் ஆங்கிலேயர்களின் கல்வி முறையை எந்த ஜாதி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறது. சமநீதி, சமூகநீதி என்பதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி, இங்கே தமிழகத்தில் நிகழ்ந்ததற்கும் அங்கே கேரளாவில் நடந்ததற்கும் உண்டான வேறுபாடு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் புத்தகம் இது.

இங்கே சென்னை மாகாணத்தில் நடந்தது வேறு!

During the early decades of the 20th Century, when the Indian freedom movement was fast spreading across the country, another movement began to make itself felt in the Madras Presidency. Supporting the ruling British more than somewhat, this movement was more caste- and community-based. The party which was born out of it was popularly called the Justice Party, of which the Dravidian parties of today, whatever their hues, are the descendants and of that movement. 

Basically, the movement was directed against the Brahmin community in the Presidency and, frankly stated, the Justice Party had no other policy than anti-Brahminism. Indeed, before the Party was founded, the movement was called the Non-Brahmin Movement. The person who sowed the seeds for the formation of the Party was Dr. C. Natesa Mudaliar. என்று ராண்டார் கை சுருக்கமாக பிராமண வெறுப்பே நீதிக்கட்சியின் ஆரம்பம் என்று சொல்வதை படிக்க இங்கே       

*******
அந்த நாட்களில் பிரபல பதிவராக வலம்வந்த அதிஷா என்கிற வினோத் சென்னைப் புத்தகக் கண்காட்சி பற்றி எழுதியிருந்ததை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. புத்தகங்கள் கட்டுப்படியாகக் கூடிய விலையிலோ, வாசகர்கள் வொரும்புகிற விதத்திலோ புத்தகங்கள் வெளியிடுவதில்லை என்று பதிப்பகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு  அழிச்சாட்டியம் செய்வது இன்னமும் மாறினபாடில்லை என்பது ஹரன்பிரசன்னா உள்ளிட்ட சிலரது பகிர்வுகளை பார்த்ததில் புரிந்து கொள்ள முடிகிறது.    

ஒரு நல்ல புத்தகத்தை மீண்டும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்! 1956 வாக்கில் ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்தப் புதினம், இன்றைக்குப் படிக்கும் போதும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது! ஒரே வித்தியாசம், இந்தக் கதையில் நீங்கள் பார்க்கிற கலைஞர்கள், கலாரசிகர்கள் தான் இன்றைக்கு ரொம்பவுமே மாறிப் போய்விட்டார்கள். 

ரண்டு ஹிட் கொடுத்தவுடன் இங்கே கதாநாயகனுக்கு முதல்மைச்சராகும் கனவு வந்து விடுகிறது! திரைப்படத்தில் நாட்டாமையாகவும், வீரப் பிரதாபனாகவும் விஜயகுமாரனாகவும் வேஷம் கட்டியவுடனேயே நடிகனுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மிரட்டுகிற அளவுக்கு, இன்றைய அரசியல் தரம் தாழ்ந்துபோயிருக்கிறது. கலைஞர்கள் அதைவிடத் தாழ்ந்து போயிருக்கிறார்கள்! 

ல்ல கலைஞர்கள், ரசிகர்கள் அந்த நாட்களில் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது, இந்தப் புதினத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று பலமான சிபாரிசு செய்கிறேன்!

திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கலைமணி என்ற புனை பெயரில் அன்றைக்கு எழுதிய  ஆரம்ப வரிகளை ஒரு சாம்பிளுக்காக-...........


ப்படி இன்றைக்கும் சுவாரசியம் குறையாமல் இருக்கிறதுன்பதைத் தொட்டுக் காட்டுவதற்காக.......

"டவுள் ஆண் பிள்ளையை முதலில் படைத்தாரா, அல்லது பெண்ணை முதலில் படைத்தாரா?" என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டதால் எனது நண்பர் பேராசிரியர் தில்லைநாயகம் அவர்களிடம் இதைப் பற்றி ஆராய்ந்தேன். அவர் பின்வருமாறு கூறினார்.

"டவுள் ஆணைத்தான் முதலில் படைத்தார். ஆண்மகன் புதிதாகப் பிறந்த கா
ளங்கன்று போல் துள்ளி விளையாடினான். அவன் உடலில் வலிமையையும், உள்ளத்தில் வீரமும், நடையில் அழகும், செயலில் கம்பீரமும், ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன. சிங்கம், புலி, கரடி ஆகிய எல்லாவற்றையும் மனிதன் அடக்கினான். மலையைப் புரட்டினான். மரத்தை வெட்டினான். கடலில் நீந்தினான். கப்பல் விட்டான். இவ்வாறு நாளாக நாளாக, அவன் வீரம் வளர்ந்து வரவே, அவனை எதிர்ப்பார் யாருமின்றி உலாவத் தொடங்கினான். உலாவினான், உலாவினான், உலாவினான், வேறென்ன செய்வது? வாழ்க்கை சலித்து விட்டது. வெறும் வீரத்தில் அவனுக்கு இன்பம் இல்லை."நம்மை யாராவது அடக்க மாட்டார்களா?" என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.அவனை அடக்குவார் உலகில் ஒருவருமே இல்லை என்றால் மனிதன் உயிரை விட்டு விடக் கூடத் துணிந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கடவுள் கையிலே ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு மனதில் தியானித்தார். வீராதி வீரர்களையெல்லாம் அடக்கும் ஒரு பிறவி இதில் பிறக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் கையிலிருந்து ஒரு பெண் குதித்தாள். கடவுளுக்கே அந்த வ்யக்தியைப் பார்த்ததும் தலை சுழன்றது. சற்று நேரம் சிந்தனை செய்து மனத்தை அடக்கிக் கொண்டு, "உன் பெயர் பெண். போ, ஆணுக்கு எதிரே போய் நில்" என்றார். மதோன்மத்தனாகத் திரிந்த ஆணின் முன் பெண் வந்து நின்றாள். ஆண்மகனைத் தன் கண்களால் ஒரு முறை பார்த்தாள். ஒரே ஒரு முறை தான் பார்த்தாள்.அந்தப் பார்வையிலேயே ஆண் மகனின் வீரம் தீரமெல்லாம் விடைபெற்றுக் கொண்டன. மயங்கி வீழ்ந்தான். அப்போது வீழ்ந்தவன், வீழ்ந்தவன்தான். இன்னும் அவன் எழுந்திருக்கவே இல்லை. 

"ந்த முடிவுக்கு நன் வருவதற்குக் காரணமாயிருந்தது வெறும் ஆராய்ச்சியல்ல.........தில்லானா மோகனாம்பாளின் திவ்ய சௌந்தர்யம் தான் காரணம்." என்றார் தில்லைநாயகம்.

"யா, உமது கண்களுக்கு அழகாகத் தோன்றும் ஒன்று எனது அவ நம்பிக்கை பிடித்த கண்களுக்கு அழகில்லாமல் தோன்றலாம். இருந்தாலும், அந்த மோகனாம்பாள் எங்காவது நாட்டியம் செய்தால் எனக்கும் சொல்லுங்கள்." என்றேன் நான்.

தில்லைநாயகம் பெருமூச்சு விட்டார்.

"சில கலைஞர்களுக்கு புத்தியும் வித்தையும் இருந்தாலே போதும். சங்கீதம், நாட்டியம் போன்ற காந்தர்வ வித்தைக் கலைஞர்களுக்கோ, இவைகளோடு கூட பூர்வ புண்ணியமும் நிறைய வேண்டியிருக்கிறது. அழகும், அமைப்பும், சரீரமும், சாரீரமும் நாமாக உண்டாக்கிக் கொள்பவை அல்ல. ஆண்டவன் அருளால் தான் கிடைக்க வேண்டும். அந்த ஆண்டவனோ, ஒரு நல்லதைக் கொடுத்தால் கூடவே பத்துக் கெடுதல்களையும் கொடுத்து விடுகிறார். அப்படி இல்லையென்றால், அந்த அபூர்வ சிருஷ்டியைப் போட்டு ஆட்டி அலைக்கழித்து காட்டி மறைத்து விடுகிறார்........

"மோகனாம்பாள் அத்தகைய பிறவிகளுள் ஒருத்தி. பற்றற்று வாழும் எனக்கே அந்தப் பெண்ணின் நினைவு ஒரு பாரமாக இருக்கிறதென்றால் அவளிடம்  ஏதோ ஒரு சக்தி இருந்திருக்கத் தானே வேண்டும்?"

"வள் யார், எந்த ஊர், அவள் வரலாறு என்ன? விவரமாய்ச் சொல்லுங்கள்" என்றேன் நான்.

ஸ்ரீ தில்லைநாயகம் 
அவர்கள் இந்தச் சரித்திரத்தை எனக்குச் சொல்லிப் பல வருஷங்களாய் விட்டன. இன்னும் அது என் மனத்தை விட்டு அகலவில்லை. இப்பொழுது நினைத்தாலும் பசுமையாகவே காட்சி அளிக்கிறது. அப்பேர்ப்பட்ட தில்லானா மோகனாம்பாளின் கதையைத் தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்....."

தில்லானா மோகனாம்பாள்

கலைமணி (எ) கொத்தமங்கலம் சுப்பு 
1341 பக்கங்கள், இரண்டு பாகங்களில்
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு 
மூன்றாம் பதிப்பு, விலை ரூ.250/- 


இது எழுதியது 2010 இல்! ஒரு பின்னூட்ட விவாதம் நிறைவாக நடந்ததை முழுதும் படிக்க இங்கே  

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)