Friday, February 12, 2021

#திராவிடப்புரட்டு உடைத்த மாரிதாஸ்! குமுதம் ரிபோர்ட்டர் சர்வே! சசிகலா புராணம்!

திராவிடப்புரட்டு, திராவிட மாயையாக தமிழ்நாட்டில் ஒரு விஷவிருட்சமாகவே வளர்த்துவிடப்பட்டிருப்பதை எதிர்த்து மாரிதாஸ் செய்து வந்த தொடர்முயற்சிகளின் பலனாக ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உலவ விடப்பட்ட ஒரு பொய்ச்செய்தி அம்பலமானது. ஈவெராவின் பிம்பத்தைக்கட்டமைக்க ஏதுவாக ஊரெங்கும் சிலைகள், அரசுநூலகங்களில் வரிப்பணத்தை வீணடித்து  திக,திமுக வரலாறு புகழ் பாடும் புத்தகங்கள் இன்னபிறவற்றோடு, இந்தக் கருமத்தையெல்லாம் பள்ளிமாணவர்கள் பாடமாகவும் படித்தாகவேண்டும் என்றும் திணித்தார்களே, அந்தப் பாடத் திணிப்பு, நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது.  மாரிதாஸ் மற்றும் குழுவினரால் நல்லதொரு ஆரம்பம்!       


வீடியோ 13 நிமிடம் ஈவெரா பெயருக்குப் பின்னால் நடந்து வரும் வேறுசில தகிடுதத்தங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!


2021 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற சர்வே / கருத்துக்கணிப்பை குமுதம் ரிபோர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. இதன்மீது தனியாக என்னுடைய கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. சாம்பிள் சைஸ் 58500 என்பது உண்மையிலேயே பெரியது தான்! அதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைவிட அதிமுகவின் எடப்பாடியார் தனது வலுவான இருப்பையும், அதிகரித்துவரும் செல்வாக்கையும் சொல்லியிருப்பதுமே கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. என்னுடைய கடந்தகால கள அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட இரண்டு அடிப்படையான விஷயங்கள்:: 1)தமிழக வாக்காளர்கள் தங்களுடைய உண்மையான சாய்ஸ் இதுதான் என்று இப்படி சர்வே எடுப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை 2) இன்னகட்சிக்கு வாக்கு என்று முடிவுசெய்து கொண்டு போகிறவர்களில் கணிசமானவர்கள் வாக்களிக்கும்  போது உல்டாவாக வேறேதோ கட்சிக்கு வாக்களிப்பது!.இளைஞர்கள்தான் பெரும்பாலும் இப்படி கடைசிநொடியில் மாறுகிறவர்கள் என்பது கூடுதல் தகவல். கருத்துக்கணிப்புகள் தோற்கிற இடம் எது என்பதை இங்கும், அந்தப்பக்கங்களிலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் 



Vasanthan Perumal  10 பிப்ரவரி, முகநூலில் எழுதியது 

அதிமுக அதிகார மோதல்-2.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி சசிகலா நடராஜன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் ரத்து செய்யப்பட்டன.

பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்

என்ற பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டன. அதிமுகவின் கட்சி விதிமுறை பிரிவு-20 இன் படி

நடந்து இருந்தால் இந்த நியமனங்கள் சரியானவை.பொதுச் செயலாளர் பதவி வகிப்பவர் இல்லாத போது மாற்று ஏற்பாட்டுக்கான வழிமுறையை இந்த பிரிவு தெளிவாக சொல்கிறது.ஏதாவது காரணங்களால் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கும் போது,புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை, முந்தைய பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது.இடைக்கால ஏற்பாடாக கூட தேர்ந்தெடுக்கப்படாத பொதுச் செயலாளரை நியமினம் செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும.இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களில் தவறு இல்லை;ஆனால், அவை நிரந்தரமானவைகளாக ஆக முடியாது.( பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மட்டுமின்றி இடைக்கால நிர்வாக ஏற்பாட்டுக்கும் கட்சி விதிமுறைகள் படி திருமதி நடராஜன் தகுதியற்றவர்.ஏனெனில், அவர் முந்தைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.) ஆனால், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் உருவாக்கியது மட்டுமின்றி பொதுச் செயலாளர் என்கிற பதவியையே நீக்கிவிட்டதாக ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்கிறது.அதிமுக அமைப்பு விதிமுறைகளில் மாற்றி அமைக்க பொது குழுவுக்கு அதிகாரம் உண்டு என விதிமுறை 43 கூறுகிறது.

அந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு அவசியமில்லை என்ற திருத்தம் செய்யப்பட்டு இருக்குமால் அது தவறு.ஏன்எனில்,அதே விதி எண் 43 தான் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு என்ற விதிமுறையைத் தவிர மற்ற விதிமுறைகளை மாற்றி அமைக்க மட்டுமே பொதுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்கிறது.

அதாவது, பொதுச் செயலாளர் பதவி குறித்த எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை.மேலும்,பொதுச் செயலாளர் விஷயத்தில் திருத்தங்கள் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்ற  விதி எண்-43 அதற்கான காரணத்தையும் தெளிவு படுத்துகிறது.அதாவது,பொதுச் செயலாளரே அதிமுக என்ற கட்சி அமைப்பின் அடித்தளம்;அதனால், அதில் திருத்தம் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறது.அந்த அம்சத்தை கொண்டு பார்த்தால் பொதுச் செயலாளர் என்னும்பதவியையே நீக்கிவிட்டதாக சொல்வது அதிமுகவின் அடித்தளத்தை தகர்த்து விட்டதாக ஆகிவிடும்.எனவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்காலிக ஏற்பாடு.ஆனால், கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டது. சரியானது.தேர்தல் ஆணையம் இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து இருப்பதில் குறை காண முடியாது!

சாணக்யா சேனலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் சசிகலா புராணம் எடுபடாது என்று இன்றைக்குப்பேசும் வீடியோ முதல் 39 நிமிடம் வரை அடுத்த 16 நிமிடம் மேற்கு வங்க அரசியல் என மொத்தம் 55 நிமிடம். ஆர்வம் இருக்கிற நண்பர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன்,

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. ரிப்போர்ட்டர் தேர்தல் கணிப்பு சிரிப்பை வரவழைத்தது. ஒருவேளை அதிமுக பொதுக்குழுவில் அல்லது பொதுக்கூட்டத்தில் எடுத்திருப்பார்களோ? எனக்கு பாஜகவின் வாக்கு வங்கி 1.5 சதவிகிதத்துக்கு மேல் அதிகமாயிருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் பாஜக, அதிமுகவுடன் சேர்ந்துள்ளதால், அதிமுகவின் வாக்கு வங்கி 10-12 சதவிகிதம் குறையும் என்று நினைக்கிறேன். சசிகலா தனி கம்பெனியில் களத்தில் இறங்கினால் (டிடிவி யை முன்னால் வைத்துக்கொண்டு) இன்னும் 5-8 சதவிகித வாக்குகள் குறையும். அதனால் நான் நினைப்பது, திமுக 150, அதிமுக 40-50 வாங்கலாம் என்று நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் அதிமுக இணைந்து 6-10 எம்.பி சீட்டுகளாவது பெறும் என்று நம்புகிறேன்.

    பாடத்திணிப்பு - நீக்க முயற்சி எடுத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!

      பிஜேபியின் வாக்குவங்கி என்னவென்று இந்தத்தேர்தலில் பார்த்துவிடலாம்! மே மாதம் வரை பொறுத்திருங்கள்! அதிமுகவின் அமைச்சர்களால் குறையாத வாக்குகள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் குறைந்து விடுமா? உங்களுடைய லாஜிக் எனக்கு சரியாகப்புரியவில்லையோ? :)))

      வீடியோவில் மாரிதாஸ் பேசியதைக் கேட்டீர்களா?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)