தேர்தல் நேரம் நெருங்கினாலே காமெடி டைம் கூடவே சேர்ந்து வரும்! சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் ஜெயிக்க முடியுமோ என்கிற ஜுரம், ஜன்னியாக மாறும்போது எழுகிற உளறல்கள் ஒருபக்கம்! திமுகவின் துரை முருகன் எப்போது வாயைத்திறந்தாலும் நையாண்டி ஒருபக்கம், என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டாரு என்கிற கோபம் கவலை மறுபுறமுமாக துரை முருகன் வாழ்கிறாரய்யா ஒரு வாழ்க்கை!
வீடியோ நிமிடம். கோட்டைவாயாக ஒருகாலத்தில் இருந்தவர் நாசா! அதே வாயால் கெட்டவரும் அவரே! கடைசியாக ராஜினாமா செய்த காங்கிரஸ் சமஉ சொன்னாராம் :: எல்லோரும் நாளை ராஜினாமா செய்யத்தான் போகிறார்கள். நான் ஒரு நாள் முன்னதாகச் செய்கிறேன்! அவ்வளவுதான், விஷயம் முடிந்தது!
காங்கிரஸ்காரர்களே கிறுக்கு மாய்க்கான்கள் தான்! சந்தேகமே இல்லை என்பதை வயநாடு எம்பி, ரோட்டில் ட்ராக்டர் ஓட்டி நிரூபித்திருக்கிறாராம்! வீடியோ 1 நிமிடம்
மீண்டும் சந்திப்போம்.
நாசா பாவம்தான். கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு.
ReplyDeleteகாங்கிரஸ் செய்யாத ஜனநாயக படுகொலைகளா.... அதனால் பாஜகவின் மீதான குற்றச்சாட்டு அடிபட்டுப் போய்விடுகிறது
நாசாவுக்கு பாவம் பார்க்கிற ஒரே நபர் நீங்கள்தானா நெல்லைத்தமிழன் சார்? :)))
DeleteMoS ஆக ஐயா செருக்குடன் இங்கே தமிழ்நாட்டுக்கு வருகிற சமயங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும் பேசிய விதம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதைவிட ஒரு மாநில முதல்வரை மேலிருந்து திணிக்கிற காங்கிரஸ் கலாசாரமே இப்படியெல்லாம் கொண்டுவந்து சேர்த்திருப்பதை மறந்து விடலாமா?