பாண்டிச்சேரி அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இன்றைக்கு ஆளும் தரப்பிலிருந்து இரண்டு சமஉக்கள் ராஜினாமா செய்து ஆட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். இதில் ஒருவர் காங்கிரஸ் இன்னொருவர் திமுக என்பதுதான் தமாஷ்! கிரண் பேடி மீதே குறைசொல்லி இத்தனை நாட்கள் அரசியல் செய்துவந்த கோட்டைவாய் நா சாவின் பவிசு அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. நாராயணசாமியை முதல்வராக்கிய நாளிலிருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த அதிருப்தி இப்போது வெளிப்பட்டிருப்பதில், ஒன்று: காங்கிரஸ் மீது கட்சி MLA/MPக்களே நம்பிக்கை இழந்து வருவது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு: மேலிடத்திலிருந்தே முதல்வர்களை நியமனம் செய்கிற காங்கிரஸ் கலாசாரம் தொடர்வதில் மாநிலங்களில் கட்சி வேரற்ற மரமாக மட்டுமே இருந்திருக்கிறது. இதை ஒதுக்கித்தள்ளிவிட்டு, வெளியே காரணங்களைத் தேடி, பழிசுமத்துவது வீணாய்ப்போன அரசியல் மட்டுமல்ல, தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வதும் கூட!
Twitter தளம் இந்தியாவில் தனக்குத்தானே மூடுவிழா நடத்திக் கொள்ளும் நிலைமையை வலிந்து செய்கிற மாதிரித்தான் இருக்கிறது. முந்தாநாள் சத்ரபதி சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு நரேந்திர மோடி எழுதிய செய்தியை இப்படி வடிகட்டியிருக்கிறது. வாட்சப் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருவது, முகநூல் செலெக்டிவாகச் செயல் படுவது, இப்படி எல்லாமாகச் சேர்ந்து இன்னொரு கிழக்கிந்திய கும்பேனி மாதிரி ஆக முயற்சிக்கிறார்களோ?
இந்திய இறையாண்மையை மறுதலிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்
சத்ரபதி சிவாஜி மகராஜின் பேரைக் கேட்டாலே இன்னமும் சிலருக்கு அடி வயிறு கலங்குகின்றது...
ReplyDeleteஎன்ன செய்ய!..
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteசிவாஜி இன்னும் நிறையப்பேருக்கு சிம்ம சொப்பனம் தான்!