சீட்டாட்டத்தில் வேண்டுமானால் ஜோக்கருக்கு எங்கே இருந்தாலும் மரியாதை இருக்கலாம்! ஆனால் அரசியல் ஜோக்கர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்குமா என்பது சந்தேகமே! ஸ்தாபன காங்கிரசில் இருந்தவரை மரியாதையோடு இருந்தவர் பழ கருப்பையா. அவர் போதாத காலம் கழகங்களுடைய அரசியலுக்குள் போனார். ஒரு கழகத்துடைய அரசியல் ஒத்துவராது என்று வெளியேறி இன்னொரு கழகத்துக்குப் போய்க் கொஞ்ச காலத்துக்குப் பிறகு முந்தைய கழகத்துக்கே போய், இன்று எங்கேபோவதென்று புரியாமல் திகைத்து நிற்கிறார். ஆனாலும் ஸ்தாபன காங்கிரசில் இருந்த பழைய நினைப்பு மனிதருக்குள் அவ்வப்போது வெளிப்படுவதைப் பார்க்கையில், பெருங்காயம் இருந்த டப்பா தான்! இப்போது காலி என்றாலும், பழைய வாசனை இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேதனையாக இருக்கிறது.
கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கடந்த 11 அம தேதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பழ. கருப்பையா பேச்சை 10 நிமிடம், 14 நிமிடத் துண்டுகளாக முன்பே பார்த்திருந்தாலும் முழுதாயக கிடைக்கவில்லை இந்த 26 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டால், அவர் சொன்னதில் இருந்த ஆதங்கம், ஏக்கம் புரியும். சேரக்கூடாத கழகங்களுடன் சேர்ந்து, நம்பகத்தன்மை அறவே இழந்து போனாலும், பழைய ஸ்தாபன காங்கிரஸ் வாசனை இன்னமும் இருக்கத்தான் செய்கிறதோ?
பழ. கருப்பையா புகழ் பாட இந்த வீடியோவை இங்கே எடுத்துக்கொள்ளவில்லை.முந்தைய பதிவுகளில் நான் வலியுறுத்திவரும் சில அடிப்படையான கேள்விகளை அவரும் எழுப்புகிறார். இரண்டு கழகங்களும் மிகவும் மோசமானவை என்று நன்றாகத்தெரிந்த பிறகும் கூட இதற்கு மாற்று அதுதான் என்று ஏதோ ஒரு கழகம் நம் தலையை மொட்டையடிக்க ஏன் விட்டுவிடுகிறோம்?
இந்த 9 நிமிட வீடியோவின் முதல் 1.20 முதல் 1..50 நிமிடத்தில் கமல் காசர் கூட்டணிக்காகத் தங்களிடம் தூது வந்ததைப்பற்றிச் சொல்கிறார். ஆனால் நேரடியாகத் தன்னிடம் பேசியிருக்க வேண்டும் என்று சொல்வதையும் கொஞ்சம் கவனியுங்கள். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.
மேலும் மேலும் என் தரப்பு வாதங்களை வைப்பதற்குப் பதிலாக, பழ கருப்பையாவின் ஆதங்கம், இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று சொல்கிற கமல் காசர். இவை மீதான உங்களுடைய புரிதல், கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்
பழ.கருப்பையாவை அறிமுகப்படுத்துவது கவிஞர் சிநேகன் அவர்கள்தானே... கொடுமை... தமிழே தெரியாதவரெல்லாம் கவிஞர் என்று சொல்லிக்கிறார். இந்தச் சிந்நேகன். எங்க ஒற்று போடணும் எங்க ஒற்று போடக்கூடாது என்றுகூடத் தெரியாத சிநேகன்லாம் தமிழ்ல கவிதை எழுதறாராம் காலக் கொடுமை
ReplyDeleteபிக் பாசிலிருந்து கமலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற சினேகன் எனக்கு முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே தெரிகிறார்! :-)))))
Deleteபழ கருப்பையா சிறந்த பேச்சாளர். நிறைய படித்த அனுபவம் உள்ளவர். ஆனா பாருங்க.. அவர் எந்தத் திசையில் பயணிப்பது என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை.
ReplyDelete"நேரடியாகத் தன்னுடன் பேசியிருக்கவேண்டும்" - இப்படிச் சொல்வதன் காரணம் என்ன? கூட்டணி ஆசையா இல்லை, 'என்னை மானாமதுரைல கூப்டாஹ சப்பான்ல கூப்டாஹ' என்று பெருமையடித்துக்கொள்வதற்கா?
அது சரி... மக்களெல்லாம் அறிவாளிகளாக இருக்கிறார்களா (பழ.கருப்பையா சொல்கிறார்.. தலைவர்கள் முட்டாள்கள், மக்கள் அறிவாளிகள் என்கிறார்)
பழ கருப்பையாவை எனது மாணவப்பருவத்திலிருந்தே அறிமுகம். காலம் மனிதர்களை எப்படி எப்படியெல்லாமோ ஆக்கிவைத்து விடுகிறது. என்ன செய்ய?
Deleteதூதுவிடப்பட்டது உண்மைதான்! திமுக தரப்பிலிருந்து என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் வெளிப்படையாகவே நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைந்தது.
இந்தமுறை கேள்வி என்னுடையது. பதில்களை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னபிறகும் என்னிடம் கேள்வி கேட்கலாமா நெல்லைத்தமிழன்'சார்?!!