இன்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களுக்கெதிராக கூக்குரலிடும் எதிர்க்கட்சி வரிசைக்கு 70 நிமிடங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. பிரதமரின் உரை ஹிந்தியில் இருப்பதால் முழுப்பேச்சையும் புரிந்து கொள்வதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. ராஜ்ய சபா டிவியோ அல்லது அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையோ ஆங்கிலத்தில் சப்டைட்டில் மாதிரி கீழே கொடுக்க முன்வந்தால் ஹிந்தி தெரியாத குறை நீங்கும்
பஞ்சாப் மண்டி வாலாக்களுக்கு மட்டுமே கசப்பாக இருக்கிற வேளாண் சட்டங்களை என்னமோ மொத்த விவசாயிகளுக்கும் எதிரானதாகச் சொல்லி, வேறு யார் யார் அஜெண்டாக்களுக்காகவோ போராடுகிற டிகாயத்துக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?
சன்டிவியில் கேள்விக்களம் நிகழ்ச்சியை குணசேகரன் நடத்திக் கொண்டிருக்கிறார். சசிகலா வருகையை வைத்து திமுகவின் அஜெண்டா இது என்பது ஒருபக்கம். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி அங்கிருந்தும் விலகி அமமுக பேச்சாளர் போலவே செயல் படுகிறவருக்கு சன்டிவி திராவிட இயக்கப் பேச்சாளர் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்களே! அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதாம்? #குழப்பம்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment