மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களின் ராஜாங்க அமைச்சராக இருந்த, நாசா என்றே அந்தநாட்களில் அழைக்கப்பட்ட வி நாராயணசாமி அமர்த்தலாகப் பேசி வலம்வந்த பழைய நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, அதேநபர் புதுச்சேரி CM ஆகப் பேசும் தொனி மிகவும் பரிதாபமாக இருக்கிறதே, அந்தத் தமாஷாவை நண்பர்கள் யாராவது கவனிக்கிறீர்களா?
ஜெகத்ரட்சகனை வைத்து திமுக நடத்திய நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்கிய ஒரே சீனோடு அவர் காமெடிப்பீசாகிப் போனது ஓருபக்கம்! அந்த ஒரே சீனில் நொந்து நூடுல்சாகிப்போனவர் நாசா என்பது அந்தக் காமெடியின் இன்னொருபக்கம். அசோகவர்த்தினியுடன் நாசா உரையாடும் இந்த 22 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி புதுச்சேரி தமாஷாவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. வெறும் விளையாட்டுப்பிள்ளையாகவே இருக்கும் ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு இரண்டுமுறை அரசியல் விஜயம் செய்து ஷோ காட்டியது கூட நாசா சோனியாவிடம் அழுதுபுலம்பியதால் தான் என்கிற மாதிரி செய்திகளும் வந்தனவே! திமுகவுக்குத் தாங்கள் யார் என்பதை ஒரு காட்டுகாட்ட வேண்டும் என்பதற்காகவே முதலில் ஜல்லிக்கட்டு, அதன்பின் மூன்று நாள் விஜயம் செய்தார் ராகுல் காண்டி என்பது ஊரறிந்த விஷயம். பதிலுக்கு திமுக என்ன காட்டப் போகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரியலாம்.
இந்த லட்சணத்தில் `கமல்ஹாசன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்!' - என சிலிர்த்திருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்! உண்மையாகக்கூட இருக்கலாம்! அந்த அளவுக்கு சோனியா காங்கிரசைப்போலவே கமல் காசரும் படு கலப்படம், பெரும் குழப்பம்! சிலகாலமாக பீட்டர் அல்போன்சின் பெயர் செய்திகளில் காணாமல் போயிருந்தது.இப்போது பீட்டர் அல்போன்ஸ் மீது, கட்சி தலைமைக்கு புகார் கொடுத்துள்ளார் கோபண்ணா. இதையடுத்து, பீட்டரும், கோபண்ணா மீது புகார் அளித்துள்ளார். ராகுல், சோனியா என, இருவருக்குமே இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.'தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படி புகார்கள் வருகிறதே' என, ராகுல் வெறுப்படைந்து உள்ளார். சோனியாவுக்கும் இது பிடிக்கவில்லை. 'சண்டையை நிறுத்திவிட்டு தேர்தல் வேலைகளைப் பாருங்கள்' என்று ராகுல்.சொன்னதாக தினமலர் செய்தி.
இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் பேசப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால் திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயக்கடன்கள் ரத்து என்ற அறிவிப்பொன்றே போதுமே! பாமகவைக் கழற்றிவிட அதிமுகவுக்கு இதை விட வேறு நல்லதருணம் இருக்கமுடியாது! ஒரு உதிரிக் கட்சியாவது பலவீனப்பட்டு ஒழியட்டுமே!
இன்னொரு குழப்பமும் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது போல. இப்படியாக தமிழக அரசியல் நிலவரம் இன்று.
மீண்டும் சந்திப்போம்.
இன்னும் பதினைந்து நாளில் கூடங்குளம் செயல்பட ஆரம்பிக்கும் என்று வாரம் ஒரு தடவை சென்னை விமான நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாகப் பேட்டி கொடுத்த நாசா இவர்தானே..
ReplyDeleteவிவசாயக் கடன் தள்ளுபடி போன்ற எதுவுமே அதிமுகவை இந்தத் தடவை காப்பாற்றும் என எனக்குத் தோன்றவில்லை.
ரஜினி பாவம்.... வாய்ஸ் கொடுத்துக் கொடுத்து வாழ்க்கையைக் கழித்துவிட்டார்.
வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!
Deleteஅதே கோட்டைவாய் நாசா தான்! மறுபடியும் போட்டியிட முடியுமா என்பதைச் சொல்லக்கூட இப்போது வாய் வரவில்லை!
திமுகவின் தொடர் தம்பட்டங்கள்,IPAC பிரசாந்த் கிஷோர் & டீம் உத்திகள் எல்லாமாகச் சேர்ந்து திமுக தான் ஜெயிக்கும் என்கிற பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன என்பதுவரை சரி! ஆனால் ராகுல் காண்டி, இசுடாலின் இருவருக்குமே இலவுகாத்தகிளியாக் இருக்கிற யோகம் தான் முன்னைவிட பிரகாசமாக இருக்கிறது!
ரஜனியை வாய்ஸ் கொடுக்கவைத்து அன்றைய காங்கிரஸ் தலைமைக்கு ஷாக் கொடுத்தது ஜிகே மூப்பனார்.
ரஜனிவாய்ஸை வைத்து ஆதாயம் அடைந்தது பானாசீனா கருணாநிதி இருவரும்தான்! இப்போது ரஜனியை வைத்து KDbrothers விளையாடுகிறார்களோ என்கிற சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ரஜனிவாய்ஸ் ஒரு potent force ஆக இருக்க முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே!