ஜவஹர்லால் நேரு பெயரை வைத்ததனாலேயே என்னவோ டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குழப்பங்களின் உச்சமாக ஆகிக் கொண்டிருக்கிறது. தறுதலைகளாகிப்போன இடது சாரி அரசியலும் ஓசிச்சோறும் பல்கலைக்கழகத்துக்கு வருவது படிப்பதற்காக அல்ல வெட்டி அரசியலும் ரகளைகளும் செய்வதற்காகவே என்றபோக்கு சமீப காலமாக வளர்ந்து விட்டது.
விடுதிக்கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து 40 நாட்களுக்கும் மேலாக JNU மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று ஜனாதிபதி மாளிகை நோக்கிப் பேரணி நடத்துவதற்காகத் திரண்ட மாணவர்கள் மீது டில்லிப் போலீஸ் லேசாகத் தடியடி நடத்தியதை வீடியோவில் தெளிவாகவே பார்க்க முடிகிற போதிலும் செய்தியாளர் திரும்பத் திரும்ப போலீஸ் மிருகத்தனமாக தடியடி நடத்தி மாணவர்களைத் தாக்கியதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பது தான் இங்கே சோனியா காங்கிரசுக்கு விலைபோன ஊடகங்களுடைய யோக்கியதை. படிக்கப் போகிறவனுக்கு படிப்பு முக்கியமில்லை, முழுநேர அரசியலில் இறங்குவதுதான் பிழைப்பு என்றாகிப் போன சீர்கேடடைந்த JNUவை ஒருசில வருடங்களுக்கு மூடி வைத்தால் என்ன? ஓசிச்சோற்றில் உடல்வளர்க்க இடதுசாரிகளுக்கு தங்கப் புற்றையும் கொடுத்து தினமும் பாலும் முட்டையும் கொடுப்பானேன்? விரட்டி அடித்து துரத்திவிட்டு, சிலகாலம் மூடி வைத்தால் என்ன தவறு? கொஞ்சம் சொல்லுங்களேன்!
மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் படிப்பைக் கோட்டை விட்டு, முழுநேர அரசியல் செயல்பாடு அவசியமா? Catch them young என்று மாணவர்களிடையில் புகுந்து ஆள்பிடிப்பது இடது சாரிகளுக்குக் கைவந்த கலை, அப்புறம் காங்கிரஸ், பிஜேபி என்று பிற அரசியல்கட்சிகளும் களத்தில் குதித்தன. இடதுசாரிகள் செய்திருக்கிற பிழைகளில் மாணவர்களை அரசியலுக்கு இழுத்தது மிகப்பெரும் பிழை என்றுதான் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் என்னால் சொல்ல முடிகிறது.
மாறுபட்ட கருத்து இருப்பவர்க.ளும், ஆரோக்கியமான உரையாடலைத் தொடர விரும்புகிறவர்களும் கமென்ட் பாக்சில் வரலாம். வரவேற்கிறேன்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment