பாகிஸ்தானைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லப் படுகிற, ஆனால் துல்லியமான களயதார்த்தம் ஒன்றுண்டு. உலகத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராணுவம் இருப்பதுண்டு. ஆனால் ராணுவத்துக்காக (நேர்ந்து விடப்பட்ட) ஒருநாடு இருக்கிறது என்றால் அது பாகிஸ்தான் தான்! இந்தியாவிலிருந்து பிடிவாதமாகப் பிரிந்து போனார்கள். பிரிந்த பிறகாவது நிம்மதியாக வாழ முடிகிற நாடாக பாகிஸ்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்பது மட்டும்தான் பதிலாக இருக்கும். 1948 இலேயே ராணுவம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைட் கவிழ்த்துத் தன் வசமாக்கிக் கொண்டது.
முன்னாள் ராணுவத்தளபதியும் அதிபருமாக இருந்த பர்வேஸ் முஷாரஃபுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிற முஷாரஃபுக்கு தண்டனையை நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிற இன்னொரு விஷயம் நெருடலாக இருக்கிறது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் இறந்து போனால் அவருடைய சடலத்தை இழுத்துவந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்கவிடப்படவேண்டும் என்பதில் பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்த 14 நிமிட வீடியோவில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்.
இந்த 53 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். ஆர்னாப் கோஸ்வாமி வழக்கத்துக்கு மாறாக மிக நிதானமாக விவாதத்தை நடத்துகிறார். எதற்காக எதிர்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவர்களிடம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைத்த்தாரோ என்னவோ! நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே செம காமெடியாகப் போவதை பார்க்காமல் மிஸ் பண்ணுவீர்களா என்ன?
மீண்டும் சந்திப்போம்.
தலைவரே அர்னாப் குடியுரிமைச் சட்டம் தவறு என்று வெளிப்படையாகவே அறிவித்தார் என்பது உங்களுத் தெரியுமா? பாஜக குறித்த கட்டுரையை இப்போது தான் வெளியிட்டுள்ளேன். பாருங்க.
ReplyDeleteபதிவை இப்போதுதான் படித்து முடித்தேன் ஜோதிஜி! மாசேதுங் சொன்ன மாதிரி அரசியலிலும் கூட என்ன உத்தி , ஆயுதத்தைக் கையிலெடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றாகிவிட்டது. காங்கிரஸ் கையாண்ட ஆயுதத்தை அவர்களுக்கெதிராக பிஜேபி வெற்றிகரமாகக் கையாள்கிறார்கள்.
Deleteகுறைகள் இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் யாரும் கைவைக்க முடியாது என்று மமதையோடு அலைந்த சிதம்பரத்தை அடக்கவும் ஒரு அமித் ஷா வேண்டியிருக்கிறது. அரசு நிர்வாகத்தில், நீதித்துறையில் காங்கிரஸ் விட்டுப்போயிருக்கிற பெருச்சாளிகளை முழுக்கக் களையெடுத்தால் மட்டுமே மோடி என்றில்லை வேறு எவராக இருந்தாலுமே உருப்படியான மாற்றங்களை சாதிக்க முடியும்