நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை எழுத்துப் பிசகாமல் பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து இரவல் வாங்கினோம்! ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் சொந்த நாட்டில் பின்பற்றிய நாடாளுமன்ற நாகரீகத்தையும் பின்பற்றவேண்டும் என்று கற்றுக்கொள்ளாமல் போனது யார் தவறு? நம்முடைய எதிர்க் கட்சிகளுக்கு, குறிப்பாக 55 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் அந்த் விவஸ்தை இல்லாமல் போனது காங்கிரசுடைய அழுகி வீணாகப் போகும் காலம் என்றுதான் சபிக்கத் தோன்றுகிறது.
நிதித்துறைச் சீர்திருத்தங்களில் முக்கியமான அம்சமாக 2016 ஆம் ஆண்டு Insolvency and Bankruptcy Code என்று சட்டம் கொண்டுவந்த பிறகு, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கல்லுளிமங்கன்களாக கடனைத் திரும்பிச் செலுத்தாமலும், சொத்துக்களை கையகப் படுத்துகிற நடவடிக்கைகளிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்த கார்பரேட் நிறுவனங்களை வழிக்கு வர வைத்ததையும், வராக்கடன்களாகவே வளர்ந்து கொண்டிருந்த சுமையில் சுமார் 25% குறைந்ததையும் (அடுத்து வந்த நிதியாண்டுகளில் வராக்கடன் சுமை, அதற்கான ஒதுக்கீடு அதிகரித்ததில், இன்னும் கொஞ்சம் கூடியது,தனியாகப் பேச வேண்டிய விஷயம்) சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறோமா?
கணக்கு என்றாலேயே நம்மில் பலருக்கும் ஜுரம் வந்துவிடும் என்பதால் சாய்ஸில் விட்டுவிடலாம்! ஆனால் நம்முடைய பிரதிநிதிகள் என்று சிலரை சட்ட சபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் வாக்களித்துத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோமே, அவர்கள் அங்கே போய் என்ன வெட்டி முறிக்கிறார்கள் என்றாவது பார்க்கிறோமா? சட்டமன்றம், நாடாளுமன்றம் என்பதெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவை. நம்முடைய பிரதிநிதிகளுக்கு சட்டம் என்றால் என்ன, சட்டம் இயற்றுவதென்றால் என்ன என்பதெல்லாம் தெரியுமா என்று எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறோமா?
இன்றைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் IBC சட்டத்தில் தேவைப்படும் சில அம்சங்களுக்காக, திருத்தம் கொண்டுவரும் மசோதாவை அறிமுகப் படுத்த முயன்றபோது, காங்கிரசின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்த்திருக்கிறார். அவருடைய ஆட்சேபனைகள் என்ன? ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு இரு நாட்களுக்கு முன்னாலேயே முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பது முதலாவது. அதுவாவது, தேவலை! அடுத்துச் சொன்னது காங்கிரசின் எதையும் தள்ளிப் போட்டே நாசமான கதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற மாதிரி இருந்தது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இந்த மாதிரி நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிற மசோதாக்களின் கதி என்ன? கிடப்பில் போடுவது என்பதை விட கிணற்றில் போட்டு, விஷயத்தை அப்படியே ஊற்றி மூடுவது என்பதாகத்தான் இதுவரை இருந்திருக்கிறது.
The IBC (Second Amendment) Bill, 2019, was approved by the Union cabinet on Wednesday. The first amendment was passed by Parliament in July. As per the statement of objects and reasons of the bill, it seeks to amend Section 7 of the IBC to insert certain provisions specifying a minimum threshold for certain classes of financial creditors for initiating insolvency resolution process.
It also seeks to amend section 227 of the Code so as to clarify that the insolvency and liquidation proceedings for financial service providers may be conducted with such modifications and in such manner as may be prescribed என்கிறது செய்தி. இந்த விஷயத்தில் நியாயம் இருக்கிறதா என்ற கவலை எல்லாம் காங்கிரஸ் காரனுக்கு இருந்ததே இல்லை! கடலை கொறிப்பதற்காக மட்டும் தான் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார்கள் போல! இவர்கள் இப்படிச் செய்வதால் தான் சென்ற கூட்டத் தொடரில் விரட்டி விரட்டி மசோதாக்களை அமித் ஷா நிறைவேற்றினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சபாநாயகர் ஓம் பிர்லா, நிதியமைச்சர் திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய அனுமதி அளித்து விட்டார்.
கேள்வி கேட்கத் தவறுவதால் என்ன ஆகும்? பழ கருப்பையா செட்டியார் மாதிரி அதுவும் சொத்தை இதுவும் சொத்தை என்று புலம்பிக் கொண்டே இருப்பது போலவா?
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், அப்படித்தான் செயல்படுகிறார்களா என்பதைக் கேள்வி கேட்கவும் கண்காணிக்கவும் மக்களாகிய நாம் தயாராகிற வரை இந்தமாதிரிக் கலப்படங்களிடம் சிக்கிச் சீரழிய வேண்டியதுதானா? யோசித்து ஒரு பதில் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment