Showing posts with label காசுக்குக் கூவும் ஊடகங்கள். Show all posts
Showing posts with label காசுக்குக் கூவும் ஊடகங்கள். Show all posts

Saturday, December 14, 2019

ஊடக அறமும் அரசியல் போகிற போக்கும்!

ஊடக அறம், ஊடக தர்மம் என்பதெல்லாம் வெறும் கதையாகிப்போன தமிழக சூழலில் ஒருவர் ரங்கராஜ் பாண்டேவிடம் ஊடக தர்மம் என்றால் என்ன? கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன் என்று கேட்கிறார். ரங்கராஜ் பாண்டேவும் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறார்.

     
வீடியோ 11 நிமிடம்.உங்களுக்காவது பாண்டேவின் பதில் திருப்தி அளிக்கிறதா என்று சொல்லுங்களேன்! 


ஊடக அறமென்பது வாங்கின காசுக்குக் கூவுவது!காசு பெயரவில்லை என்றால் கொஞ்சம் இப்படிக்காகவும் கூவுவது! இதை ரங்கராஜ் பாண்டே வெளிப்படையாகச் சொல்வார் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறு! அது போகட்டும்! ஜூவியில் சொல்வதைப் பார்த்தால் இசுடாலின் துண்டுச் சீட்டைப் பார்த்துப் படித்தும் கூடத் தப்பும் தவறுமாக உளறுவது, சங்கிலிப் பறிப்பை சங்கிலிப் பருப்பாக மாற்றியது முதலான நிகழ்கால தமாஷாக்களை இனிமேல் பார்க்க முடியாதோ? 


உனாநிதி சைதாப்பேட்டையில் குடியுரிமைச்சட்டத் திருத்த மசோதா நகளைக் கிழித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தைப் பற்றி முகநூலில் எப்படிப் பதிவு செய்திருக்கிறார்களாம்? நடந்த கூத்துக்குச் சற்றே நெருக்கமாக இருந்த ஒரு வரலாற்றுச்சுவடு.   

"அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டது
பிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்
யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷா
அந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி நாம் எங்கு செல்வோம் என ஒலமிட்ட நேரம், அவர் எழும்பினார்
ஆம், உதயநிதி என்பவர் தைரியமாக எழும்பினார், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்திலே கிழித்தெறிந்தார், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று மீதி சட்டத்தை எடுத்து வந்து சென்னையிலே கிழித்தெறிந்தார்
இந்திய ராணுவமே வந்தாலும் அவரை நெருங்க முடியவில்லை, அவ்வளவு மக்கள் திரண்டனர்.
பழ கருப்பையா எனும் திமுக தியாகி அந்த கூட்டத்தில் தொலைந்தே போனார், இன்றுவரை அவரை பற்றிய தகவல் இல்லை, அது அமித்ஷாவின் சதியாக இருக்கலாம்
எனினும் நாடே அவர்பின் திரண்டது
அஞ்சிய அமித்ஷா சட்டத்தை வாபஸ் பெற்று அடுத்த நாட்டில் இருந்து இங்கு இஸ்லாமியர் வரகூடாது, இங்கிருக்கும் இஸ்லாமியர் வெளிநாடு செல்ல கூடாது என சட்டத்தை திருத்தினார்
இஸ்லாமிய மக்கள் அவரை நன்றியோடு நோக்கினர், இது காயிதே மில்லத் பிடித்து அழுத கருணாநிதியின் கரம் தொட்டு வளர்ந்த குழந்தை, உங்களுக்கு எக்காலமும் நானே காவல் என உதயநிதி சொன்ன பொழுது வானில் காப்ரியேல் தூதன் தோன்றி "திமுகவில் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே, உம் தகப்பனான முக ஸ்டாலினும் ஆசீர்வதிக்கபட்டவரே" என சொல்லி மறைந்தது
உதயநிதி என்றொரு போராளி இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இஸ்லாமியனோ ஒரு பள்ளிவாசலோ இருக்காது, நெல் வயலுக்கும் வாழை இலைக்கும் ஊட்டி காடுகளுக்கும் கூட காவிவண்ணம் அடித்திருப்பார்கள் படுபாவிகள்"
இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு இப்படித்தான் இருக்கும், ஏனென்றால் பெரியார் பற்றி இப்படித்தான் அன்றே எழுதிவைத்தார்கள்.


தினத்தந்தி நாளைய வரலாற்றை நேற்றே எழுதி முடித்து விடுகிற வித்தியாசமான ஊடகம். ஆயுத எழுத்து என்கிற இந்த நிகழ்ச்சி கூட காஷ்மீர் இளைஞர்கள் 500 ரூபாய் காசுக்கு ராணுவத்தின் மீது கல்லெறிகிற சூரத்தனம் போல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதே பாவம் என்று ஒரு  பேத்தல். இதை ஆரம்பித்து வைப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் என்பது கூடுதல் விசேஷம். வீடியோ 46 நிமிடம். பொழுதுபோக்க நல்லதொரு ஊடக விவாதம்.

காசுக்கு கூவுகிற ஊடகங்களில் போய்  யாராவது உண்மை, அறம் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்களா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.      
  

Thursday, October 10, 2019

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்! எங்கே போகின்றன தமிழக சேனல்கள்?

மாற்றத்தை நோக்கி என்று ஆரம்பிக்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல், வெளியிலிருந்து வந்த அழுத்தம் தாங்க முடியாமல், கடைசியாக மதன் ரவிச்சந்திரனை வெளியே அனுப்பிவிட்டது அல்லது அவராகவே வெளியேறி விட்டார். இப்போது அந்த இடத்தில் மாயக்குமார் என்பவர் சற்றே காரம் குறைந்த தொனியில் நிகழ்ச்சிகளைத் தொடர்கிறார் என்ற தகவலே இங்கே நிறையப்பேருக்குத் தெரிந்திருக்குமா என்பது கொஞ்சமல்ல சந்தேகம்தான்! ஏனென்றால் அந்த சேனலை இருட்டடிப்பு செய்வதில், பின்னாலிருந்து கையை முறுக்கிய ஆசாமிகள் இன்னார்தான் என்று தெரிந்தாலும், அதை அப்படியே வெளியே சொல்ல முடியாத சேனலும், நாங்கள்தான் அதைச் செய்தோம்  என்று வீரப்பிரதாபத்தை  வெளியே பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாத திராவிடங்களும் என்று இங்கே ஊடகங்கள், சேனல்களுடைய கதை இருக்கிறது. 


மதன் ரவிச்சந்திரன் இப்போது WIN நியூஸ் சேனலுக்கு வந்து தன்னுடைய பழைய பாணியிலேயே நேர்காணல்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார் என்பதை நேற்றே கவனித்தேன். அதைப் பதிவு செய்ய இன்றைக்குத்தான் பொழுது வாய்த்தது. வீடியோ 40 நிமிடம்.  தருமபுரி தொகுதி திமுக எம்பி Dr.செந்தில் குமார் நேர்காணல். பார்த்துவிட்டு மதன் இங்காவது நிலைப்பாரா என்ற  கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறதா பாருங்கள்! கூடவே தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் இப்படிக் கூழைக் கும்பிடுபோட்டே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன என்ற கேள்விக்கும் பதிலை யோசிக்க முடிகிறதா என்பதையும்! 

      
Nerpada Pesu: பாஜக - திமுக : இணையும் புள்ளியாக இருக்கிறதா சீன அதிபர் வருகை? | 09/10/2019 என்று இந்த வீடியோவுக்குத் தலைப்பு வைக்கிற அளவுக்கு ஒரு சேனல் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? தமிழக அரசியல் என்னவோ திமுகவை மட்டுமே ஆதாரமாக வைத்து இயங்குகிற மாதிரி, எதற்காக இப்படி ஒரு பில்டப்? இந்த விவாதத்தில் பேசிய எவருமே நாளையும் நாளைமறுநாளும் சீன அதிபரும் பிரதமர் நரேந்திரமோடியும் சந்திக்கவிருப்பது ஒரு Informal summit தான், இது ஒரு CBM Confidence Building Measure மட்டும்தான் என்பதில் எந்தவிதமான ஒப்பந்தமோ, சர்ச்சைக்கு உரிய விஷயங்களைப் பேசுவதோ இருக்காது என்பதை புரிந்துகொண்டு பேசியமாதிரி இல்லை. சம்பந்தமே இல்லாமல் பஞ்சசீலக்கொள்கை அணிசேராக்கொள்கை என்று பேசுகிறார் ஒருவர்! பஞ்சசீலக்கொள்கை நேரு உயிரோடு இருந்தநாட்களிலேயே காலாவதியாகிவிட்டது. அணிசேராக் கொள்கை இந்திரா காலத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டது என்ற விவரம் தெரியாமல் பேசுவது தமிழேண்டா சேனல் விவாதங்களுடைய ஸ்பெஷாலிட்டி. 

கார்டூன்களைப் பகிர்ந்து நாட்களாகிவிட்டதோ?


விஜயதசமி நாளன்று பிரான்சில் நம்முடைய பாதுகாப்புத் துறை அமைச்சர், நமது விமானப்படையில் சேரவிருக்கும் . முதல் ரஃபேல் விமானத்துக்கு ஆயுத பூஜை செய்து, அதில் ஒரு சிறிய பயணமும் செய்திருக்கிறார். காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே அதை விமரிசனம் செய்திருப்பதை அட்சய் சந்தர் கார்டூனில் பகடி செய்திருக்கிறார்.

மீண்டும் சந்திப்போம்.              

Friday, September 6, 2019

காசுக்குக் கூவுகிற ஊடகங்களா? அல்லது கேவுகிற ஊடகங்களா?

காங்கிரசுடைய தலைவிதி சோனியா மற்றும் வாரிசுகளோடு மட்டுமல்ல, காங்கிரசின் பாக்கெட்டில் இருந்த, வாங்கிக் கொழுத்த மீடியாக்களிடமும் கிடந்து சீப்படுகிறதென்றால் காங்கிரசைத் தொடர்ந்து 21 வருடங்களாகக் கட்டியாளும் சோனியாGயுடைய தலைமையின் யோக்கியதை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? இந்தப்பக்கங்களிலும். Consent to be......nothing பக்கங்களிலும் தொடர்ந்து இதைச் சொல்கிற தருணங்களில் எதிர்ப்பும் கண்டனமும் காங்கிரஸ்காரனிடம் இருந்து கூட அதிகம் வந்து நான் பார்த்ததில்லை! காங்கிரசுக்கு பல்லக்குத் தூக்கியே பழக்கப்பட்ட வலது கம்யூனிஸ்ட் ஆசாமிகள்  அல்லது அவர்கள் நடத்துகிற தொழிற்சங்கப் பிடிமானம் உள்ளவர்களிடம் இருந்தே வருகிற வினோதத்தை என்னவென்று சொல்வது? அது போல ஒரு வீடியோ வினோதம் இது! இதில் பர்கா தத் காங்கிரஸ் தலைமையைச் சாடுகிறார், டூப்ளிகேட் காண்டிகள் ட்வீட்டரில் மெசேஜ் போடுவதற்கு மேல் எந்த அரசியலும் செய்யத் தெரியாதவர்களா என்று கோபப் படுகிறார்!  


சீனாதானாவுக்காக, DK சிவகுமாருக்காகக் காங்கிரஸ் தலைமை தெருவில் இறங்கிப் போராடியிருக்க வேண்டாமா என்று அம்மணி பொங்குகிறார். Barkha Dutt’s bizarre rant on P. Chidambaram being sent to Tihar என்று தலைப்பிட்டு opindia தளத்தில் ஆஷிஷ் சுக்லா எழுதியிருந்த ஒரு செய்திக்கட்டுரை வழியாகத்தான் இந்த வீடியோவைப் பிடித்தேன். ஆஷிஷ் சுக்லா எழுதுகிறார்: Chidambaram wears a smile which he could patent. It’s a benign, patronizing smile, never warm, only favour which he is bestowing to his audience. When he speaks, there is this cocked eyebrow judging you on your incompetence. He is that Pope of politics who is used to reverence from his audience.

In a sense, it’s a classic cloak borrowed off from the Nehru-Gandhis: A benevolent knight, God’s chosen one for his people, who must have his cake while the masses must revel in the crumbs. A blue-blooded Congressman never questions the scions; and never lets down the coterie and sycophants who must do his bidding. இது சீனாதானாவுடைய சிரித்த முகத்துக்குப் பின்னால் இருக்கும் போலித்தனத்தைப் பற்றிச் சொல்கிற அறிமுகம் என்றால்........


அடுத்து காங்கிரசுக்கு சலாம் போட்டு எழுதியே காசுபார்க்கிற ஊடகங்களைப் பற்றி கொஞ்சம்! I scanned the timeline of Shekhar Gupta, Rajdeep Sardesai, Sagarika Ghose etc on twitter and found nothing this morning. JUST NOTHING. The one of Barkha Dutt, though, was outrageous. She may have changed media affiliations faster than actors change clothes in a song sequence but her crooked logic is unimpaired. கொஞ்சம் சுவாரசியமான எழுத்து! இணைப்பில் முழுதுமாகப் படித்துப் பாருங்களேன்! 


சேகர் குப்தா! காசுக்காகக்  காங்கிரசுக்கு கூவுகிறவர் தான்! ஆனால் பர்கா தத் மாதிரி காசு கொடுத்தவன் தலைமேலேறி உபதேசம் செய்கிற அளவுக்கெல்லாம் இல்லை! கொஞ்சம் பூசி மெழுகி, பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் செய்தியை விற்பவர்! காங்கிரசுக்கு இருக்கும், மரணபயம் காட்டிவரும் குழப்பங்களைப் பற்றிக் கொஞ்சம் வகைப்படுத்திச் சொல்வதை கேளுங்களேன்! இவ்வளவு நீட்டி முழக்கி 14 நிமிட வீடியோவில் சொல்வதை மேலே உள்ள ஒரு படம் சுருங்கச் சொல்லி விடுகிறதுதான்!  ஆனாலும் கோனார் நோட்ஸ் இல்லை என்றால் நமக்குத்தான் எதுவும் புரியாதே! சேகர் குப்தா  நோட்சும் அந்த ரகம்தான்! (நேற்றைக்கு கோனார் உரை எழுதி பிரபலமான ஐயன் பெருமாள் கோனாருடைய பிறந்த நாள் என்பது தற்செயலாக நினைவுக்கு வரும் செய்தி)


விசாரணை, கைது நடவடிக்கை எல்லாமே அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைதான் என்ற ஒற்றை வாதம், ஊடகக் கூவல்கள் எத்தனை நாளைக்குச் செல்லுபடியாகும்? சீனாதானா சிவகுமார் என்று வரிசையாகத் தொடர்ந்தால் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி  இன்னபிற காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்கள் எவ்வளவுதான் தாக்குப் பிடிப்பார்கள்?  உங்களால் ஊகிக்க முடிகிறதா? மேலே வீடியோ 26 நிமிடம்.

                
அரசியல் பழிவாங்கல் எ!ன்று கூவிக்கூவியே அந்த விஷயம் சுத்தப்பேத்தல் என்றாகிவிட்டதே!!  இம்பூட்டு அறிவா ஒரு மகனைப் பெத்ததுக்கான விலையைத் தான் சீனாதானா கொடுத்துக் கொண்டு வருகிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை! 

மீண்டும் சந்திப்போம். 

       

Sunday, June 23, 2019

கூத்தாடி ....கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

ஒருவழியாகக் கூத்தாடிகள் சங்கத்தேர்தல் நடந்து முடிந்து விட்டதாம்! வாக்கு எண்ணிக்கை இரண்டு வாரம் கழித்துத் தானாம்! இனிமேலாவது நாட்டில் என்ன நடக்கிறது, எது முக்கியமானது என்பதைப்பற்றி இங்குள்ள ஊடகங்கள் கவனத்தைப் பெறுமா? பேசுவார்களா? என்று கேட்டால் இல்லை, மாறமாட்டார்கள் என்பது மட்டுமே பதிலாக வரும். 


RJ பாலாஜி காமெடியாகப்பேசுகிறேனென்று, ஒரு  உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்! உண்மை கூட யார் பேசுகிறார்கள் என்பதில்தான் அளவிடப்படுகிற உலகத்தில் ஒரு சாதா காமெடியன் பேசினால் எடுபடுமா?    இங்கே ஊடகங்களுக்கு அதுவும் மெல்லக் கிடைத்த சிறு பொரி,  அவல் அவ்வளவுதான்! எது பொருளோ அதை பேசவே மாட்டோம் என்பதில் எத்தனை உறுதியாக நிற்கிறார்கள், பாருங்கள்!


தமிழ்நாட்டைச் சீரழிப்பதில் புதிய தலைமுறை, தந்தி டிவி இரண்டுமே  நீ முந்தியா நான் முந்தியா  என்ற போட்டியில் இருக்கின்றன போல!  

பெரும்பாலான தமிழ் சேனல்கள் ...மக்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத நடிகர் சங்க தேர்தலை.. அமெரிக்க அதிபர் தேர்தல் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வேயிலும் யூனியன் சங்க தேர்தல்கள் நடக்கின்றன. எக்கச்சக்கமான அரசியல். ஏகப்பட்ட அரசியல். SRMU வின் அரசியல் அட்டகாசங்களை குறித்து மட்டுமே பல மாதங்களுக்கு எழுதலாம்.அந்த அளவிற்கு பல நிர்வாக & அரசியல் விஷயங்களை /தகவல்களை கொண்டவை.
அத் தேர்தல்கள் குறித்து என்றாவது மக்களுக்கு கொண்டு சேர்க்கப் பட்டிருக்கிறதா ??!


மருத்துவர் ராமதாஸ் ஊடகக்காரர்களிடம் கோபப்பட்டதில் எவ்வளவு நியாயம் அவர்தரப்பில் இருந்தாலும், பேசியவிதம் அத்தனையையும் அடித்துப்போட்டுவிடுகிறதே!  ஊடகங்கள் தவறான செய்திகளைப் போட்டதில் தான் தோற்றோம் என்கிறார் ராமதாஸ். இப்படிப் பேசினால் எப்படி நல்லவிதமாகச் செய்தி போடுவார்கள்?


          
இங்கே விதவிதமாய் மோசடி செய்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பெரும்பாலான தருணங்களில் மோசடி செய்கிறவர்களுடைய கூட்டாளிகளாக இருப்பதும் ஒரு காரணம் Islamic Monetary Advisory என்ற மோசடி நிறுவனம் 2006 இலேயே ஆரம்பிக்கப்பட்டு 2008 இல் கலைக்கப் பட்டு 2013 இல் இப்போதைய வடிவத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து ஷரியத் சட்டப்படி நடத்தப்படுகிற முதலீட்டு நிறுவனம், வருடத்துக்கு 20% வருமானம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி 5000 கோடிரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்கிறார்கள். மோசடிக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 40000 பேர்களைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். இப்போது நடிகர் பிரபு விளம்பரங்களில் பிரபலப்படுத்திய நகைக்கடை மீதும் ரெட் பிக்ஸ் தளம் என்னென்னமோ சொல்கிறது. உஷாராய் இருந்து கொள்ள வேண்டியது மக்கள்தான்!

நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தானொரு  தோண்டி 
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்றொரு தத்துவப்பாடல் உண்டு! நான் இங்கே தத்துவமெல்லாம் பேசப் போவதில்லை! கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற கதையாக நாட்டுநடப்பைச் சொல்லவேண்டுமென்கிற ஆசையில் எழுத ஆரம்பித்த பதிவுக்கு  மிகவும் பொருத்தமான நபர் ராகுல் காண்டி  அவரையே பிடித்து இன்னமும்  தொங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி இந்த இரண்டை விட்டால் வேறேது?  சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

Monday, February 25, 2019

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! எல்லைமீறும் ஊடகங்கள்!

அரசியலைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் வியாதிதான்! அவர்கள் மாறலியே என்று குறை சொல்வதற்கு முன்னால், நம்முடைய யோக்கியதை என்ன? சில கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே அழகாகப் பதில் சொல்கிறார், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!

கொஞ்சம் மென்மையாக, இந்தப்பக்கங்களில் அரசியல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்ததில், மையக்கருத்தாக மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பித்தாக வேண்டும் என்பதைச் சொல்லிவருவது தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! வாக்குச்சீட்டு நம்மிடம் இருக்கும் வலிமையான ஆயுதம்! ஒருமுறைக்குப் பலமுறை நன்கு யோசித்துப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது. 

அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும் என்ற தலைப்பே ஊடகங்கள் எத்தனை வக்கிரத்துடன் செய்தி சேகரிக்கின்றன, அவதூறுகளையே கேள்விகளாக எழுப்புகின்றன என்பதைச் சொல்லும். ஊடகங்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதற்காக மட்டுமே இந்த வீடியோவைப் பகிர்கிறேன்! அன்புமணிக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல! பாமகவையும் நிராகரிக்கவேண்டிய உதிரிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தலித் எழில்மலை என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?

கே பொன்னுசாமி என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? விடுதலைச் சிறுத்தைகளோடு கூடிக் குலாவியதாவது நினைவுக்கு வருகிறதா? சௌகரியப் படுகிற போது வன்னியருக்கு மட்டுமே ஆன கட்சியாகவும் சௌகரியம் மாறும்போது அய்யங்காருக்கும் இடம் கொடுத்து எல்லோருக்கும் பொதுவானகட்சியாகவும்  இருந்து பார்த்து அதுவும் எடுபடாதபோது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன தான்!

ஆனால் அன்புமணியையோ, ராமதாசையோ மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற catchy  கோஷத்தோடு ஒரு மாற்றத்துக்கான அரசியலை அன்புமணி, எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவராக, தமிழ்நாடு முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்ல மருத்துவர் அன்புமணி எடுத்த முயற்சிக்கு என்ன வரவேற்பு இருந்தது? அவருடைய ஆதங்கம், எதிர்க்கேள்வி நியாயமானதுதான்! 

என்னமோ அன்புமணியை வறுத்தெடுத்து விட்டதாக மீடியா ஹைப் இங்கே கிளப்பிவிடப்பட்டிருக்கிறது! உச்ச பட்ச டென்ஷனில் அன்புமணி என்று பீற்றிக் கொள்கிறது நக்கீரன்!

விஜயகாந்த் தெம்பாக இருந்த நாட்களில் இதுமாதிரி ஊடகங்களைக் காறித்துப்பியது நியாயம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

வேறென்ன?


   

           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)