அரசியலைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் வியாதிதான்! அவர்கள் மாறலியே என்று குறை சொல்வதற்கு முன்னால், நம்முடைய யோக்கியதை என்ன? சில கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே அழகாகப் பதில் சொல்கிறார், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!
கொஞ்சம் மென்மையாக, இந்தப்பக்கங்களில் அரசியல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்ததில், மையக்கருத்தாக மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பித்தாக வேண்டும் என்பதைச் சொல்லிவருவது தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! வாக்குச்சீட்டு நம்மிடம் இருக்கும் வலிமையான ஆயுதம்! ஒருமுறைக்குப் பலமுறை நன்கு யோசித்துப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது.
அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும் என்ற தலைப்பே ஊடகங்கள் எத்தனை வக்கிரத்துடன் செய்தி சேகரிக்கின்றன, அவதூறுகளையே கேள்விகளாக எழுப்புகின்றன என்பதைச் சொல்லும். ஊடகங்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதற்காக மட்டுமே இந்த வீடியோவைப் பகிர்கிறேன்! அன்புமணிக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல! பாமகவையும் நிராகரிக்கவேண்டிய உதிரிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தலித் எழில்மலை என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?
கே பொன்னுசாமி என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? விடுதலைச் சிறுத்தைகளோடு கூடிக் குலாவியதாவது நினைவுக்கு வருகிறதா? சௌகரியப் படுகிற போது வன்னியருக்கு மட்டுமே ஆன கட்சியாகவும் சௌகரியம் மாறும்போது அய்யங்காருக்கும் இடம் கொடுத்து எல்லோருக்கும் பொதுவானகட்சியாகவும் இருந்து பார்த்து அதுவும் எடுபடாதபோது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன தான்!
ஆனால் அன்புமணியையோ, ராமதாசையோ மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற catchy கோஷத்தோடு ஒரு மாற்றத்துக்கான அரசியலை அன்புமணி, எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவராக, தமிழ்நாடு முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்ல மருத்துவர் அன்புமணி எடுத்த முயற்சிக்கு என்ன வரவேற்பு இருந்தது? அவருடைய ஆதங்கம், எதிர்க்கேள்வி நியாயமானதுதான்!
என்னமோ அன்புமணியை வறுத்தெடுத்து விட்டதாக மீடியா ஹைப் இங்கே கிளப்பிவிடப்பட்டிருக்கிறது! உச்ச பட்ச டென்ஷனில் அன்புமணி என்று பீற்றிக் கொள்கிறது நக்கீரன்!
விஜயகாந்த் தெம்பாக இருந்த நாட்களில் இதுமாதிரி ஊடகங்களைக் காறித்துப்பியது நியாயம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!
வேறென்ன?
//அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும்// - ஊடகங்கள் இதேபோல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்க மாட்டார்கள். திமுக + காங்கிரஸ் கூட்டணியைக் கேள்வி கேட்பதில்லை. இதே நேரத்தில் ஜெ. இருந்திருந்தால் இவங்களை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டார்.
ReplyDeleteஊடக தர்மம்னு ஒன்றை நான் பார்க்கிறதில்லை. அவங்க அவங்க, அவங்க தொலைக்காட்சி ஓனரோட கொள்கைக்கு ஏற்ற மாதிரித்தான் ரிப்போர்ட் பண்ணறாங்க. இதில் இந்து ராம், சன் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தந்தி என எதுவும் விதிவிலக்கில்லை
ஊடகதர்மம் என்பதெல்லாம் திமுக காங்கிரஸ் வைத்திருந்த கூட்டணி தர்மம்தான்! செய்திகளும் ஒரு வியாபார பொருள்! காசுகொடுப்பவனுக்கு சௌகரியமாக செய்தி வெளியிடுவது கூட ஐக்கிய முன்னணிக்கு கூட்டணிக்குழப்ப ஆட்சிகாலத்தில் பரவலாக வளர்ந்த ஒன்றுதானே!
Delete