Friday, February 15, 2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்! விரலில் மை வைக்கும் வரை!

இங்கே மாற்று அரசியல் , அரசியல் மாற்று என்ன என்ற தெளிவான புரிதல் இல்லாமலேயே, அரசியல் களம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மாறிக் கொண்டே வருவதில், புதிய மாற்றங்கள் என்ன வந்து விடுமென்று நினைக்கிறீர்கள்?
மாற்றத்தை நோக்கி என்று தலைப்பு வைத்ததனாலே மட்டும் மாற்றத்துக்கான வழிமுறைகள் பேசப்படும் என்று எதிர்பார்ப்பதே கூட இங்கே தவறாகத்தான் இருக்கிறது.இங்கே ஒரு பத்திரிகையாளர், ஓட்டு வாங்கி ஜெயித்ததனாலேயே அவருக்குத்தான் மொத்தகுத்தகை என்று சொல்வது ஏற்புடையதுதானா?

ஒருவிரல் புரட்சி என்று சொல்லப்படுகிற winner takes all  வாக்குச் சீட்டு ஜனநாயகத்தில் தான் எத்தனை எத்தனை கோளாறுகள்? ஒருமுறை ஒருத்தனுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்காக, ஐந்துவருடங்கள் அந்தநபர் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சில காலத்துக்கு முன்னால் right to recall தேர்ந்தெடுத்த நபரைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டுமென்கிற குரல் இங்கேயும் எழுந்தது நினைவு இருக்கிறதா?
எப்போது இந்தக்கூத்தெல்லாம் நடந்தது என்கிறீர்களா? இங்கே அதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். ஆனால். இங்கே  முதலில் வாக்களிக்கிற மகாஜனம், என்ன தெரிந்து, நல்லவனைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்று புரிந்துதான் ஓட்டுப் போடுகிறார்களா? பெரும்பாலான தருணங்களில், இங்கே ஓட்டுப்போடுவதே, அவனைப் பிடிக்காது அதனால் இவனுக்குப் போடுகிறேன் என்கிற நெகடிவ் ஓட்டாகத் தான் இருக்கிறது, கவனித்திருக்கிறீர்களா? 

இன்னார் வரவேண்டும் என்று தெளிவாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. கணிசமான பகுதி,யார் ஜெயிப்பார்கள் என்று படுகிறதோ, அங்கேயே கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போடுகிற ரகம்! ஆக எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தும் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலேயே 1952 முதல் இதோ எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் என்றிருக்குமானால் யாரை நொந்து கொள்வது? 
தேர்தல் என்றால் இதுமாதிரி காமெடிகள் இல்லாமல் இருக்குமா?   
மாற்றுக்கருத்துகளைத் தேடிப் படிப்பவன் நான்! எழுத்தாளர் ஜீவி சொன்னாரே என்பதற்காக கமென்ட் மாடரேஷனை விலக்கிவைத்திருந்தது தவறு என்று காண்பித்துக் கொடுத்த மணிவண்ணன் மாதிரி ஆசாமிகளுக்கு நன்றி.  

பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாதவை, வெட்டி ஓட்டுகிற போஸ்டர்கள், பின்னூட்டங்களில் கறாராக நிராகரிக்கப்படும்..

               

6 comments:

  1. ஸார்... உங்களுக்கேற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன். மாடரேஷனை பழைய நிலைக்குக் கொண்டு வந்தாலும் சரி தான்.

    ReplyDelete
    Replies
    1. அசௌகரியம் என்று எதுவுமில்லை ஜீவி சார்! இங்கே இணையத்தில் தேடினாலே கிடைக்கும் என்கிற சூழ்நிலையிலும் விடைகளை சுயமாகத் தேடவோ, சொந்தமாக யோசிக்கவோ முடியாமல் இன்னமும் spoonfeed கேட்கிற இளைஞர்களைப் பார்த்ததில் வந்த அயர்ச்சி!

      Delete
  2. ஒரு கேள்விக்கு உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். மோடி செய்த பல காரியங்களை நான் வரவேற்பேன். குறிப்பாக ஆன் லைன் தொடர்பாக அனைத்து சமாச்சாரங்களையும். ஆனால்

    1. கேஷ்லெஸ் இந்தியா என்பதற்கு அடிநாதமே இணைய இணைப்பு தான். ரயில்வே துறையில் காங்கிரஸ் அரசாங்கம் செய்த பல கேடுகெட்ட சமாச்சாரங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் முடிந்தவரைக்கும் சரி செய்துள்ளதைப் போல ஏன் பிஎஸ்என்எல் என்ற துறையை இவர்கள் கையில் எடுத்து அதை சிறப்பாக மாற்றவில்லை. இணைய இணைப்பு இல்லாத ஊர்கள், சரியாக செயல்படாத இடங்களில் மேம்பாட்டு பணிகள் என்று அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நடுத்தர மக்கள் இன்னமும் இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து இருப்பார்கள் தானே?

    2. ஏன் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்த மோடி ஆதார்கார்டு உடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை. இது நடந்து இருந்தால் பல வித மாற்றங்கள் (கட்டாயம் ஓட்டு போட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்து இருக்குமே?) நடந்து இருக்குமே?

    உங்கள் பார்வை என்ன?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! தனிப்பதிவாகவே எழுதுகிறேன்.

      Delete
  3. தயவு செய்து மூடி வைக்க வேண்டாம். மாற்றுக் கருத்துக்கு காது கொடுத்து கேட்கவும். அநாகரிக வார்த்தைகள் வந்தால் அழித்து விடவும்.

    ReplyDelete
    Replies
    1. கமென்ட் பெட்டியை open to all என்ற நிலைக்கே மாற்றிவிட்டேன் ஜோதி ஜி! நேற்றைக்கு செய்திகளைப் பார்த்துக் கொண்டே வந்த தருணத்தில் வினவு தளத்தில் வந்த ஒரு போஸ்டை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து இங்கே உண்மையான பிஜேபி ஆதரவாளனாக நான் என்ன சொல்லப்போகிறேன் என்ற ரீதியில் கேள்வி கேட்டிருந்த பின்னூட்டத்தை அங்கே அனுமதித்து சுருக்கமான பதிலையும் சொல்லிவிட்டேன். இங்கே வந்து பார்த்தால் இன்னும் இரண்டு கமெண்டுகள் அதே மாதிரி ...எரிச்சலோடு ரிமூவ் செய்தாயிற்று. உபிக்கள் மாதிரி ஆபாச அர்ச்சனை இல்லையென்றாலும், .முன்கூட்டிய முடிவோடு, தனக்காக வேறுயாரோ வந்துதான் யோசிக்கவேண்டும், பதில்சொல்ல வேண்டுமென்கிற மாதிரி ஒரு சிறுபிள்ளைத்தனம் தென்பட்டதால் ஏகத்துக்கும் upset ஆனதில்

      புல்வாமா பயங்கரவாதத்தாக்குதல் தொட்டு ப்ரம்ம செலானி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய கட்டுரை ஒன்றில் கவனம் செலுத்த முடியாமல் போனது, அதை இங்கே பதிவிலும் கொண்டுவர முடியாமல் போனது.

      .

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)