மோடியை மாற்று என்ற ஒற்றை அஜெண்டாவோடு, மாநிலக் கட்சிகளோடு, காங்கிரசும், சர்வ தேசியம் பேசுகிற இடதுசாரி அமைப்புகளும் கைகோர்த்துக் கூவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் அதிசயம் ஏதுமே இல்லை! தங்களுடைய இருப்பே கேள்விக்குறியாகிவிடுமோ என்று பயப்படுகிறவர்கள் கூவும் அவலக்குரல் அது. மாற்று அவசியம்தான்! எதை நம்பி மாற்றுவது? என்ற கேள்விக்கு அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா? சொல்லியிருக்கிறார்களா?
இந்தப்பக்கங்களில் தலைமைப்பண்பு, ஒரு தெளிவான திட்டத்தோடும், பார்வையோடும் செயல்படுகிற அரசியல் தலைவன், அப்படிப் பட்ட தலைவனிடம் இருக்க வேண்டிய, அல்லது இருக்கக் கூடாத குணங்கள் என்று கொஞ்சம் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை பற்றிய நேற்றைய நாட்களின் இந்தக் கருத்து, அது ஓரளவுக்கு உண்மையானதாகவும் இருந்தது.
"எவ்வளவுதான், காங்கிரஸ் பலவீனப்பட்டுச் சிதைந்துகொண்டிருந்தாலுமே, நாடு முழுமைக்கும் அறியப்பட்ட கட்சியாகவும், எல்லாப் பகுதிகளிலுமே, ஆதரவு சதவீத அளவில் மட்டுமே மாறுபட்டிருந்தாலும், நாடுமுழுக்கவும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரே கட்சி." இப்போது கூடஇந்தக் கருத்து உண்மையானதாக இருக்கிறது என்றாலும், காங்கிரஸ், தனக்கென்று சொந்த லட்சியங்களோ,தேசத்தின் எதிர்காலத்தைக் குறித்த தெளிவான பார்வையோ, உறுதியான தலைமையோ இல்லாமல், சீரழிவின் உச்சகட்டத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது. பதவி வெறியும் ஊழலும் நிறைந்த மாநிலக் கட்சிகளுக்குக் கொஞ்சம் தீனிபோட்டுக் கொண்டு, பதவிவெறியும் ஊழலும் நிறைந்த நபர்களால் மட்டுமே ஆனதாக காங்கிரஸ் மாறி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. இப்படி எழுதியும் நாட்களாகி விட்டன.

தங்களுடைய பயணம் எங்கே, பாதை என்னவென்றே தெளிவில்லாத அரசியல்கட்சிகள் என்ன மாற்றத்துக்காகக் கூவுகின்றன? போகாத ஊருக்கு வழிசொல்கிற கதையாக அவர்கள் அம்பாரம் அம்பாரமாக காதுல பூ சுற்றுவார்கள்!நாமும் நம்பிக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?
இருக்கிற குழப்பங்கள் போதாதென்று அன்னா ஹசாரே வேறு குடைச்சல்!11 நாட்கள் உண்ணாவிரதத்தை மஹாராஷ்டிர முதல்வர் வந்து பழரசம் கொடுத்து முடித்து வைத்திருக்கிறார். அவருக்கும் பாவம் ஊடக வெளிச்சமெல்லாம் பழையபடி வேண்டியிருக்கிறது என்பதற்குமேல் என்ன சாரம் இதில் இருக்கிறது? டிவி காமெரா முன்னால் இருந்தால் செருப்படி வாங்குவதற்கும் தயாராக இருக்கிற ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கேசரிவாலுவை உருவாக்கியதைத் தவிர, அன்னா ஹசாரேவால் வேறென்ன சாதிக்க முடிந்தது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
ஜெயமோகன் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளியதை சாதனை வரிசையில் சேர்த்தீர்களானால், பிச்சுப்போடுவேன் பிச்சு!
இப்பொழுது தான் அந்த ஒற்றை அஜெண்டா. போகப்போக பாருங்கள். யார் யாருக்கு என்னன்ன லாபம் என்று பார்க்கும் காலம் வரும்.
ReplyDelete