இங்கே ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொருவிதமாகக் குழப்புவதையே தொழிலாகச் செய்து கொண்டு வருகிறது என்பதைத் தொடர்ந்து உதாரணங்களுடன் இந்தப்பக்கங்களில் பார்த்துவருகிறோம்! இங்கே , இன்னும் ஒரு உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராகவும், இப்போது The Print தளத்தை நடத்துகிறவராகவும்.. சேகர் குப்தா! இந்தக் காணொளியில் குழப்பவில்லை, இம்ரான் கானுக்கு உபதேசம் செய்கிறார் என்பது சுவாரசியம்!
இந்த வீடியோவில் அயூப் கான் முதல் இப்போது இம்ரான் கான் வரை, பாகிஸ்தான் தலைவர்களை, ஒவ்வொருவர் கதையாகக் கொஞ்சம் சுருக்கமாக சொல்லிவிட்டு, அவர்களுடைய முடிவு என்னமாதிரியானது என்பதையும் சொல்கிறார்! அந்த ஒரு காரணம் போக, இந்த யூட்யூப் வீடியோவுக்கு வந்திருக்கிற ஒரு கமென்ட், அதற்கு ஒரு பதில் கமென்ட் புன்னகைக்க வைத்தது.
No comments:
Post a Comment