அருள்கூர்ந்து முந்தைய பதிவைப் படித்து விடுங்கள்!
தேசத்துக்குக் கொள்கை தான் வேண்டும், தலைவர்கள் அல்ல என்று பிப்ரவரி 2 ஆம் தேதி முழங்குக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி! மிகவும் சரி! சொல்கிறவரிடம் என்ன கொள்கை இருக்கிறதாம்? அவரே சொல்கிறார்!
ரொம்ப சிம்பிளாக இரண்டே இரண்டு! மோடியை ஒழிப்போம்! மம்தாவை ஒழிப்போம்! இது சர்வரோக நிவாரணியாக மார்க்சிஸ்டுகளின் கண்டுபிடிப்பு! இதே மாதிரித்தான் எமெர்ஜென்சி நாட்களிலும் முன்பும் இந்திரா முழக்கமும் இருந்தது என்பது நினைவுக்கு வருகிறது. ஆக்கபூர்வமாக லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்றும் வாஜ்பாய் காலத்தில் ஜெய் விஞ்ஞான் என்பதையும் சேர்த்து ஒரு பாசிடிவ் முழக்கமாக இருந்ததெல்லாம் பின்னுக்குப்போவிட்டது.
கரீபி ஹடோ! வறுமையே வெளியேறு! 1971 முழக்கம்! வறுமை வெளியேறி விட்டதா? ஒரு சுவர், பஸ், பேப்பர் விடாமல் இந்த முழக்கம் அம்மணி முகத்தோடு அந்தநாள் அலப்பறைகள் தவிர சாதித்தது என்ன?
ஒரே ஒரு கோர்ட் தீர்ப்பு, அம்மணியுடைய கோரமுகம் எப்படியிருந்தது என்பதைக் காட்டிவிட்டதை மேலே! தொடர்ச்சி இங்கே பார்த்துவிட்டு கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!
1974 லிருந்தே இந்திராவின் சர்வாதிகாரப்போக்கை எதிர்த்த காந்தீயவாதி ஜெயப்ரகாஷ் நாராயணனே மனம் நொந்து இந்திரா ஹதாண்டவம் டோ தேஷ் பச்சாவோ என்று சொல்லியிருப்பாரானால், இந்திராவின் கோர தாண்டவம் எப்படியிருந்திருக்கும்? ஊகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அந்த நிகழ்வை bihar movement என்று கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள்!
என்னவோ மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும்தான் இந்த ஒழிக கோஷம் சொந்தமா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் முதற்கொண்டு இங்கே அரசியல் சில்லுவண்டிகள் எல்லோர் வாயிலும் மோடி ஒழிக கோஷம் புறப்படுவதாலேயே, சரியாகி விடுமா?
ஒழித்து விட்டு எதை, யாரை வைத்து என்னமாதிரி மாற்றப் போகிறார்களாம்? அவர்களுக்கு ஒரு தெளிவு அதிலாவது இருக்கிறதா? விடையைக் காணோம்!
சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.
கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்! இப்படி ஒரு திரைப்பட விமரிசனமாக அந்த நாட்களில் எழுதியிருந்தேன்!
அரசியல் மாற்றங்களுக்குமே கூட குறுக்குவழி எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றை ஒழித்து வரும் வெற்றிடத்தை நிரப்ப இங்கே இடதுசாரிகள் உட்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் தகுதி உள்ளதாக இல்லை என்பது புரிகிறதா?
இவர்களில் எவராவது மோடி எதிர்ப்புக்குச் சரியான காரணம் சொல்கிறவரை, நம்புவதற்கு அவசரமா என்ன? கூட்டத்தோடு சேர்ந்து கூவியே ஆகவேண்டிய அவசியம்தான் என்ன?
நமக்கு சொந்தமாக யோசித்து முடிவெடுக்கத் தெரியும் இல்லையா? மந்தைகள் அல்லவே நாம்!
//ரொம்ப சிம்பிளாக இரண்டே இரண்டு! மோடியை ஒழிப்போம்! மம்தாவை ஒழிப்போம்! //
ReplyDeleteபார்க்கப்போனால் மூன்று. மூன்றாவது: மேற்கு வங்கத்தைக் கைப்பற்றுவோம்; கேரளத்தை தக்க வைத்துக் கொள்வோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கே மே.வங்கம் கேரளா திரிபுரா என்று மூன்றே பிரதேசங்களில் தான்! அதனால் கட்சி அங்கெல்லாம் தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போராடுவதும் இயற்கையே! ஆனால் காம்ரேடுகள் நீண்டநாட்களாக மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருந்து துருப்பிடித்தும் போனார்கள். சர்வதேசியம் பேசி, தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு கூடுதல் சீட்டுக்காக கருணாநிதியிடம் நடையாய் நடந்த தோழர் என் வரதராஜனை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கட்சியை இங்கே கழகங்களின் தொங்கு சதையாய், குறுகிப்போனதைத் தவிர வளரவே இல்லை என்கிற கவலை கூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை
Deleteகேரளா கதை வேறு! அங்கே காங்கிரஸ்கூட்டணி மார்க்சிஸ்ட் கூட்டணி இரண்டும் தான் மாறிமாறி ஆண்டு வருகின்றன. சேட்டன்மார் தொடர்ந்து இருமுறை ஒரே கூட்டணியை ஆட்சியில் அமர்த்துகிற சேட்டையைச் செய்வதில்லை!
மேற்குவங்கத்தில் மீண்டெழுவது மிகவும் கடினமென்றே தோழர்கள் சொல்கிறார்கள்.
//ஒரே ஒரு கோர்ட் தீர்ப்பு,//
ReplyDeleteஅது என்ன தீர்ப்பு, எதற்காக அந்த தீர்ப்பு, மக்களால் ஏகோபித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை பதிவியிலிருந்து நீககும் அளவுக்கு அவர் என்ன பஞ்சமா பாதகம் செய்தார் என்றும் சொல்லியிருக்கலாம்.
(அருள்கூர்ந்து எமெர்ஜென்ஸி விஷயங்களைத் தவிர்க்கலாம்.)
/என்ன பஞ்சமாபாதகம் செய்தாரென்று/
Deleteஉங்களுடைய கேள்விகளுக்கு இரண்டு காணொளிகள் மொத்தம் 47 நிமிடம் பதிலாகக் கொடுத்திருக்கிறேன். தவிர bihar movement இணையத்திலேயே நிறையத் தகவல்கள் இருக்கின்றன. என்னிடம் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் பீஹார் இயக்கம் என்று தமிழில் தொடர்ந்து 47 நாட்கள் எழுதியது பின்னாட்களில் புத்தகமாகவும் வந்தது இருக்கிறது.
எமெர்ஜென்சி! அதை அவ்வளவு எளிதாக மறந்துவிடுவதானால்....? நான் ஜடமில்லை!
வேறொரு வெர்ஷனில் பார்க்கலாம்:
Deleteஇந்திராவுக்கு முந்தைய காலங்களில் காங்கிரஸுக்கு பொதுவாகவே ஒரு கெட்ட பெயர் உண்டு. ஆவடி சோஷலிச காங்கிரஸ் என்று கிண்டலாகச் சொல்வார்கள். தமிழக ஆவடியில் தேசத்தின் சோஷலிச நிர்மாணங்களுக்காக போடப்பட்ட தீர்மானங்கள் வெற்று காகிதத் தீர்மானங்களாக பல ஆண்டுகள் இருந்தன. காங்கிரஸூக்குப் புத்துயர் ஊட்ட வேண்டுமானால் சோஷலிச நடவடிக்கைகளில் கொஞ்சமானும் ஈடுபட வேண்டும் என்று இந்திரா விரும்பினார். ஆனால் அந்த கொஞ்சமாவதுக்குக் கூட பலத்த எதிர்ப்பு கட்சியில் இருந்தது. அடுத்து வரவிருந்த தேர்தலில் காங்கிரஸ் கடைத்தேற சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்க இந்திரா விரும்பினார். அதன் அடிப்படையிலேயே சோஷலிச நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த சில பழம் பெருச்சாளிகளை ஓரம் கட்டினார்.
இந்த மாதிரியான மக்கள் நல நடவடிக்கைகளை சுலபமாக ஒத்துக்கொள்கிற தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரி குடியரசு தலைவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்.
அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரிட்சை. ரேபரேலியில் கிட்டத்தட்ட 1,10,000 ஓட்டுகள் அதிகம் பெற்று இந்திரா மகத்தான வெற்றி பெறுகிறார். அந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திராவுடன் இருந்தது.
இந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்பது அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.
காரணம், தனது தேர்தல் ஏஜெண்டாக யஷ்பால் கபூர் என்னும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியை இந்திரா
உபயோகப்படுத்திக் கொண்டார் என்பது. அரசு அதிகாரிகள் தேர்தல் பணி ஆற்றக் கூடாது என்பது சட்ட விதி. (நம்மவர்கள் அப்படியா என்று திகைப்பார்கள்!)
அந்த விதி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட இந்திராவை பதவி இழக்கச் செய்ய போதுமானதாக இருந்தது.
ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த ஐஏஎஸ் அதிகாரி யஷ்பால் கபூர் தான் பார்த்து வந்த அரசு உத்தியோகத்தை இராஜிநாமா செய்து விட்டுத் தான் தேர்தல் பணிக்கு வந்தார். அவர் ராஜினாமா செய்த காலத்திற்கு முந்தியதான பணிக்காலம் வரை தான் அவருக்கு சம்பளமும் வழங்கப்பட்டது.
ஆனால் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டத்தில் இருந்த தாமதத்தைச் சுட்டிக் காட்டி
அது வரை அவர் பதவியில் இருந்ததாக கொள்ள வேண்டும் என்பது நீதியாயிற்று.
நாட்டின் பிரதமர் பதவி இழந்தால் ஒட்டு மொத்த அமைச்சரவையே பதவி இழக்கும். வேறு ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி விரும்பவில்லை என்றால் இன்னொரு தேர்தலைத் தான் நாடு சந்திக்க வேண்டும்.
அதற்கு மேல் இந்திரா என்ன செய்தார் என்பது தான் வரலாறு. நாட்டின் வளர்ச்சிக்காக பத்து அம்ச திட்டமும், 14 வங்கிகளின் தேசிய மயமும், மன்னர் மான்ய ஒழிப்பும் தொடர்ந்து வந்த நிகழ்வுகள்.
சஞ்சய்காந்தி வரவால் 5 அம்ச திட்டம் என்று ஒன்று புகுத்தப்பட்டு 10 அம்ச திட்டம் திசைமாறியதும்
நாடு அலங்கோலமானதும் அடுத்து வந்த சரித்திர நிகழ்வுகள்.
எந்த நாடானாலும் முன்னேறுவதற்கு ஒரே வழி, தன்னலமற்ற தலைவர்கள். இடதுசாரி சிந்தாந்தத்தில் எல்லாமே அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். முதளாளித்துவம் எனவும் வலதுசாரி எனவும் அவர்கள் குற்றம் சாட்டும் பட்சத்தில் எல்லாமே தனியார் கவனித்துக் கொள்ளட்டும். போட்டி வளர்ச்சியைக் கொடுக்கும் என்பது அவர்கள் வாதம்.
ReplyDeleteமுதலாவது ருஷ்யாவில் பொய்த்துவிட்டது. அதிகார ஆசையில் சிக்குண்ட அடக்கு முறை வெகுகாலம் தாக்குப் பிடிக்காது. சீனாவில் காட்டப்படும் முன்னேற்றம் செயற்கையானது. All are equal some are more equal. சில வருடங்கள் முட்டுக் கொடுத்து நிறுத்தலாம். இது உலகப் பொருளாத நிபுணர்களின் கணிப்பு.
சேவை என்று காலங்காலமாக நாம் போற்றி வரும் கல்வியும் மருத்துவமும் இன்று பணம் காய்ச்சி மரங்களாகப் பார்க்கப் படுகின்றன. இதுவே முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு அடிப்படை. ஆக இரண்டிலும் பேச்சளவில் மனிதநேயமிருந்தாலும் நடைமுறையில் சுயநலமே ஓங்கி இருக்கிறது. குறைந்த பட்சம் ஜனநாயக அமைப்பு என்றிருந்தால் இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் நியாயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
தருமம் தலை காக்கும் என்று நமக்கென தேசத்தின் கொள்கையை வழியமைக்கும் தன்னலமற்ற தலைவர்கள் வந்தால் நாட்டிற்கு நல்லது. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
வாருங்கள் உமேஷ், சார்!
Deleteகம்யூனிசம் ஒரு நல்ல கனவு ஆனால் ஒரு மோசமான செயல்திட்டம் என்பது உள்ளே இருந்து பார்த்த அனுபவம்!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கே டி ராஜு என்றொரு வலது கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டப் பிரமுகர் சொல்வாராம்! "கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வர்றதே தப்பு! போறது அதைவிடப் பெரிய தப்புன்றதால இன்னும் கட்சியில இருக்கோம்" இப்படித் தேங்கிப்போனவர்களால் கட்சியையோ சரியான அரசியல் செயற்பாட்டையோ எப்படி முன்னெடுத்துச் சொல்ல முடியும்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் தத்துவார்த்த ரீதியில் விஷயங்களை அலசுவதில் எக்ஸ்பெர்ட்! அவர்காலத்துக்குப் பின்னால் தத்துவார்த்த அடிப்படையில் முடிவெடுப்பது அறவே இல்லாமல் போன விஷயம். மேற்கு வங்கத்தில் ப்ரோமோத் தாஸ் குப்தா வகுத்துக் கொடுத்த இடது ஐக்கிய முன்னணியில் இன்றைக்கு முன்னேறிச் செல்கிற இடதுசாரித்தன்மையோ, ஐக்கியமான முன்னணியோ இல்லை. தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்ததற்கு முக்கியமான காரணம் glasnost (openness) perestroika (listen) இன்று கொர்பசேவ் திறந்துவிட்டதன் வெளிச்சத்தைத் தாங்க முடியாமல், கம்யூனிஸப் புனிதபிம்பங்கள் எல்லாம் கட்டுடைக்கப்பட்டதே! கம்யூனிச மாயை பெருமளவு விலகிப்போனது
சீனாவிலும் டெங் சியாவோ பிங் 1978 இல் சீனத்தலைமையை ஏற்றபிறகு, மாவோ சிந்தனைகளை தூக்கிக் கிடாசிவிட்டு, வெளிநாட்டு மூலதனத்துக்கு கதவுகளைத் திறந்து விட்டதில், இந்த நாற்பதாண்டுகளில் சீனா வலிமையான பொருளாதாரமாக,வலிமையான ராணுவ சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதில் பொய்யில்லை.
நீளம் கருதி, இந்த அளவுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தத் தலைமுறையினருக்கு இதெல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வளவு எழுத நேரிட்டது.
ReplyDeleteஎமெர்ஜென்ஸிக்கு முன்னால் நடந்தவையெல்லாம் எமெர்ஜென்ஸிக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள். முன்னால் நடந்தவைகளையெல்லாம் மறைத்து விட்டு பின்னால் நடந்தவைகளை மட்டும் சொல்வது முழு சரித்திர நிகழ்வுகளைச் சொல்லியது ஆகாது.
ReplyDeleteஎனது 'பாரதியார் கதை' தொடரில் கபீரன்பனின் கேள்விக்காகப் போட்ட பின்னூட்டம் இது. நாம் இந்தப் பதிவில் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் பொருத்தமாக இருப்பதினால் பொதுவுடமை சித்தாந்தம் பற்றிய எனது கருத்தாக இங்கும் பதிந்திருக்கிறேன்:
பொதுவுடமை சித்தாந்தத்தையும் பொதுவுடமை கட்சிகளையும் ஒன்றாக நினைத்து நாம் அடிக்கடி குழப்பிக் கொள்கிறோம்.
மனித நேயம் என்பதே பொதுவுடமை சித்தாந்தத்தின் ஆணிவேர். மனித குல மேன்மைகளுக்கு வழி சொல்வது பொதுவுடமை சித்தாந்தம்.
பொதுவுடமை சித்தாந்தம் என்பது உலகின் ஆகச்சிறந்த வாழ்வாங்கு வாழும் முறை. அந்தந்த காலகட்டங்களில் முளைத்தெழும் பிரச்னைகளின் தாக்கத்தில் இந்த சித்தாந்த கருத்துக்கள் பல்வேறு ரூபங்கள் கொண்டிருக்கின்றன. ரஷ்ய் புரட்சியின் போது ஜார் மன்னனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது 'பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம்' தான் பொதுவுட்மையின் இலட்சியம் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி என்ற வார்த்தையே அலங்கோலப்பட்டிருக்கிறது.
எந்த சித்தாந்தத்திற்கும் காலத்தின் மாற்றங்களே அந்தந்த சித்தாந்ததிற்கான வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ என்றாகியிருக்கிறது. பொதுவுடமை சித்தாந்தமும் இதற்கு விதி விலக்காகி விடமுடியாது.
சித்தாந்தங்களைப் பற்றி பேசும் போது அந்தந்த சித்தாத்தங்களுக்கு தாலி கட்டிக் கொண்டவர்களாக சொல்லிக் கொள்ளும் அமைப்புகளை மறந்து விட வேண்டும். தனி மனிதனின் வாழ்க்கை முறை தான் சித்தாந்தங்களை பேணுவதற்கு சரியான அளவுகோல்.
காந்தியவாதி என்பவர் குறிப்பிட்ட ஒரு கட்சி சார்ந்தவர் என்று கணிக்கப்படக்கூடாது என்பது போல.
பொதுவுடமை சித்தாந்தம் என்பது உன்னதமான ஒரு வாழ்க்கை முறை.
உயர்வு--தாழ்ச்சி சொல்வது பாவம் என்ற பாரதி பாவ--புண்ணிய நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையின் வீச்சு, உயர்வு--தாழ்வை அவ்வளவு கொடூரமாக அவன் நெஞ்சில் விளைத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவுடமைத் தோழரிடம் பாவ--புண்யங்களைப் பற்றிக் கேட்டீர்கள் என்றால், ஓ, அது இத்துத்வா கொள்கை அல்லவோ என்று கேட்டுச் சிரிபார்.
இந்திய தத்துவமான அத்வைதம், பொதுவுடமை சித்தாந்ததிற்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு தத்துவார்த்த கொள்கை.
இந்த உரையாடலை மேற்கொண்டு நகர்த்துவது உங்கள் வேலையே. இதெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று சொன்னால் தான் அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகரும்.
ReplyDelete