பதிவின் தலைப்பாக வைத்திருக்கிற கேள்விக்கு இங்கேயே பதிலும் இருக்கிறது! ஊடகங்களில் வருகிற செய்தியை அப்படியே நம்பிவிட வேண்டாமென்பதற்கு இன்றைக்கு சூடாகிவரும் தேர்தல், அரசியல் களங்களைப் பார்த்தாலேயே புரிந்து கொள்ளமுடிகிற விஷயங்களே ஒரு நல்ல உதாரணமாக இருப்பதை அறிந்திருக்கிறீர்களா?
அதிலும் கடைசி வரி திமுகவின் இசுடாலின் வசனத்தை அப்படியே காப்பியடித்து! இந்த அரசியல் கூத்துகளை
ஆநம்பமான இடம்! கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடியாக 2013 இல் CBI அரசியல் சாசனப்படியான அமைப்பே அல்ல என்று ஒரேபோடு போட்டது.
உச்சநீதிமன்றத்துக்கு அன்று ஓடிப்போய் தடைவாங்கியது காங்கிரஸ் ஆட்சியாளர்கள்! இன்று ஆட்சியில் இல்லாதபோது அப்படியே மாற்றிப்பேசுவது .............
வெறும் குப்பை அரசியல்!
மம்தாவுக்கோ, மோடியிடம் பயந்து ஆதரவுக்கரம் நீட்டிவருகிற அரசியல் கட்சிகளுக்கோ உச்சநீதி மன்றத்தில் CBI சட்டப்படி செல்லுபடியாகக் கூடிய அமைப்புதானா என்றொரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாதா? அங்கே போய்ப் போராடினால், CBI அந்தஸ்து வேண்டுமானால் தெளிவாகலாம்!
தெருவில் இறங்கி குழாயடிச்சண்டை போட்டால், வீராங்கனை பட்டம், ஏமாந்த சோணகிரிகளிடம் வாக்கு, கேள்விகேட்பாரில்லாமல் ஊழல் செய்ய இடம் என்று ஏகப்பட்டது கிடைக்குமே!
அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!
இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குகிற தெளிவு நமக்கு என்றைக்கு வரும்?
வரம்புகள் என்று சிபிஐ அதிகார வரம்பைப் பற்றி வைகுண்டராஜன் சேனல் வழக்கம்போலவே அரைகுறையான உண்மை பேசுவதை இந்தச் சிறு வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்! முழுப்பொய்யை விட அரைகுறை உண்மைகள் அதிக ஆபத்தானவை. நிறையச் சேதம் விளைவிப்பவை.
இவர்கள் முடியாது,முடியாது என்று நீட்டி முழக்கும் இத்தனை விஷயங்களும், சாரதா சிட் ஊழலில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீதான விசாரணைக்கு முகாந்திரமே, இந்த ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு 2014 இல் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு தான் என்பதில் அடிபட்டுப் போவதை யார் கவனிக்கப் போகிறார்கள்? கேள்வி கேட்கப் போகிறார்கள் என்கிற அலட்சியம் தவிர, வேறென்ன காரணம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?
2016இல் இப்படிப் பேசிய ராவுல் பாபாவுக்கு இப்போது வேறவாயில பேசவேண்டுமெனத் தோன்றியிருக்கிறது!
I spoke with Mamata Di tonight and told her we stand shoulder to shoulder with her.
The happenings in Bengal are a part of the unrelenting attack on India’s institutions by Mr Modi & the BJP.
The entire opposition will stand together & defeat these fascist forces.
மீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்! அரசியல் களம் இன்று! பகிர்வில் சுருக்கமாக எழுதியிருந்தேன்
இந்தப்படத்தில், பதிவின் தலைப்பாக வைத்திருக்கிற கேள்விக்கு பதில் இப்படி இருக்கிறது
ஆநம்பமான இடம்! கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடியாக 2013 இல் CBI அரசியல் சாசனப்படியான அமைப்பே அல்ல என்று ஒரேபோடு போட்டது.
உச்சநீதிமன்றத்துக்கு அன்று ஓடிப்போய் தடைவாங்கியது காங்கிரஸ் ஆட்சியாளர்கள்! இன்று ஆட்சியில் இல்லாதபோது அப்படியே மாற்றிப்பேசுவது .............
வெறும் குப்பை அரசியல்!
மம்தாவுக்கோ, மோடியிடம் பயந்து ஆதரவுக்கரம் நீட்டிவருகிற அரசியல் கட்சிகளுக்கோ உச்சநீதி மன்றத்தில் CBI சட்டப்படி செல்லுபடியாகக் கூடிய அமைப்புதானா என்றொரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாதா? அங்கே போய்ப் போராடினால், CBI அந்தஸ்து வேண்டுமானால் தெளிவாகலாம்!
தெருவில் இறங்கி குழாயடிச்சண்டை போட்டால், வீராங்கனை பட்டம், ஏமாந்த சோணகிரிகளிடம் வாக்கு, கேள்விகேட்பாரில்லாமல் ஊழல் செய்ய இடம் என்று ஏகப்பட்டது கிடைக்குமே!
அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!
இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குகிற தெளிவு நமக்கு என்றைக்கு வரும்?
No comments:
Post a Comment