தலைப்பிலேயே ஏகப்பட்ட அரசியல் பரிதாபங்கள் முன்னால் வந்து நிற்கின்றன! அதிலும் கூட வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார்! நீயழுதால் நானழுவேன் ஒய்யாரக்கண்ணே என்றொரு பழைய பாட்டும் கூடவே நினைவுக்கு வருகிறதே!
வைகோ தன்னுடைய நிலைமை இப்படியாகி விட்டதே என்று கண் கலங்குகிறாரா? ஊழ்வினை வந்துருத்தூஉட்டும் என்பது நினைவுக்கு வர, கண் கலங்குகிறாரா? நமக்குத் தெரியாது! அதுநமக்கு அவசியமுமில்லை!
ஒரே ஒரு விஷயம்தான்! கல்லறைக்குப் போகிறவரை நாட்டாமை செய்வேன் என்று அரசியல்வாதிகள், புதிய தலைமுறைக்கு வழிவிடாமல் நந்திமாதிரி மறித்துக் கொண்டிருக்கும் நிலைமை மாற, ஒன்று அவர்களாகவே ஒதுங்கி விடவேண்டும்! இல்லையானால் ஜனங்களே கம்பல்சரி ரிட்டையர்மென்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்! வைகோ போன்றவர்களுக்கு அது புரியாது! ஜனங்களாகிய நமக்கு ஏன் இன்னும் புரியவில்லை? இன்னமும் இவர்போன்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
என்னடா இது! மதுரைக்கு வந்த சோதனை? பாலையா திருவிளையாடல் படத்தில் பேசிய அற்புதமான ஒருவரி வசனம் இது! ராஜா பேச்சிலிருந்து கல்வித்தந்தைகள் எல்லோரும் ஏன் அடுத்து அரசியலுக்கும் தாவுகிறார்கள் என்பது புரிகிறதா? அரசியல் செய்யாத கல்வித்தந்தை எவராவது இருக்கிறார்களா? நெசமா தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!
அப்படியே இன்னொன்றையும்!
செருப்புக்காலுடன் திருமலைக்குப் படியேறி ராவுல் பாபாவும், ப்ரியங்கா மகன் ரைஹானும் மலையப்பனுக்கே தரிசனம் கொடுக்க வந்தார்களாம்! சமீபகாலமாக, தேர்தல்கள் வந்தால்தான் காங்கிரஸ் முதல் குடும்பத்துக்கு, ஹிந்து கோவில்கள் நினைவே வருவதும் ஒலக மகாநடிப்புடா சாமீ! அல்லது என்னடா இது? திருமலைக்கு வந்த சோதனை? என்று கடந்து போய்விட முடியுமா?
*******
திருநெல்வேலி என்றால் நெல்லையப்பரும் தாமிர பரணியும் கொஞ்சுதமிழும் நினைவுக்கு வரவே வராதோ? அல்வாவும் அருவாளும் தானா நெல்லை?
கமல் காசர் அரசியல் இளைஞர்களை அதிகமாகவே ஈர்க்க ஆரம்பித்திருக்கிறதோ? அரசியல் களத்தில் தற்போதைய கேள்வி, நிலவரம் இரண்டுமே இதுதான்!
திமுக, அதிமுக இரண்டு கழகங்களும் இளைஞர்களைத் தங்கள் பால் ஈர்க்கத் தவறி நீண்டகாலமாகிவிட்டது. மாற்று அரசியலுக்கான முன்னெடுப்பு எதுவுமில்லாத உதிரிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
நிராகரிக்கப்பட வேண்டிய பட்டியலாகவும் கூட!
வைகோ அவர்கள், 'இன்றைக்கு வெண்டைக்காய் கிலோ 15 ரூபாய்' என்று சொல்லுவதையே அழுகையாகவும் ஆவேசமாகவும் சொல்லக்கூடியவர். தான் விசுவாசமானவன் என்று புதிதாகச் சேர்ந்த கட்சியில் வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது?
ReplyDeleteகட்சியின் முன்னாள் தலைவர் செய்வதுபோல்தான் எனக்கு ஸ்டாலின் அவர்களின் பேச்சு உணர்த்தியது. அதாவது, அவர் ஒருவரை ஆஹா ஓஹோ என்று மேடையில் பாராட்டினால், அவருக்கு ஏதோ கெட்ட செய்தியைச் சொல்வதற்கு முன்னாலோ அல்லது கெடுதல் செய்வதற்கு முன்னாலோதான் அப்படிச் செய்வார். அனேகமா ஸ்டாலின், இதயத்தில் இடம், அல்லது 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிடச் சொல்வது என்று கடுக்காய் கொடுப்பார்னு என் மனசு சொல்லுது.
கடுக்காய் பொதுவாக உடலுக்கு நல்லது! இவருக்கு கொடுத்துக் கழற்றிவிடுவது அரசியலுக்கு நல்லது !
Deleteவைகோவைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவரும் ஒரு அரசியல்வாதி என்று காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.
ReplyDeleteவைகோவுக்காகப் பரிதாபப்பட்டால் நமக்குத் பரிதாபப்பட ஆளே இருக்காது ஸ்ரீராம்!
Delete