இங்கே மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள்,செய்திகளை வெளியிடுவதன் யோக்கியதை என்ன? உள்நோக்கம் என்ன? ரங்கராஜ் பாண்டே சொல்கிற மாதிரி, பொய்ச் செய்திகளை எப்படி செய்திகளின் வேரைத்தேடிப் பார்த்து ஒதுக்குவது?
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலையாகி ஒருவாரமாகிவிட்டது. எட்டு நபர்கள் இந்தக் கொலை விவகாரத்தில் இதுவரை, கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் எப்படி நிரூபிக்கிறார்கள் அல்லது சொதப்புகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முன் கூட்டிய முடிவுகளோடு நான் எந்தச் செய்தியையும் அணுகுவதில்லை! அதேநேரம், இதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதையும் சேர்த்தே செய்தி எப்படிப்பட்டது என்று பார்க்கவேண்டாமா?
IPC section 120Bயின் கீழ் கூட்டுச்சதி என்றும் வழக்குப் பதிந்திருப்பதாக பாண்டே சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டை ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படி நிரூபித்தார்கள், நீதிமன்றம் எப்படி எடுத்துக்கொண்டது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
.
மருத்துவர் ராமதாஸ் இரண்டு பக்கமும் கூட்டணி ஆப்ஷன்களை வைத்துக்கொண்டு கண்ணாம்மூச்சி ரே ரே ஆடிக் கொண்டிருக்கிறார்! பலமான கூட்டணி, கருத்துக்கணிப்புகளில் ஏறுமுகம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிற தி மு கழகம் இன்னமும் யாரோடு கூட்டணி என்று இறுதிமுடிவெடுக்கவில்லை. துரை முருகன் வேறு, கடைசிநிமிடத்தில் கூட புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வரலாமென்று பொடிவைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்! உண்மையென்ன? சும்மா ஒரு விளம்பரம் என்பதற்குமேல் வேறு ஏதாவது இருக்குமா?
அட! தம்பிதுரை இன்னும்கூட வீராவேசமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியமா? எனக்கும்தான்! வாந்தியெடுத்ததை மறுபடி வாய்க்குள் எப்போது விழுங்குவார் என்ற கேள்விமட்டும்தான்! அவர் பேசுவதை யாராவது சீரியசாக இங்கே எடுத்துக் கொள்கிறார்களா என்ன? !!
கோர்ட்டில் 200 பேர் நின்று இவர்களை 'சியர்' செய்தது எதை உணர்த்துகிறது? இவர் மத பெரியவர்கள் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும்ன்னு சொல்லறது சரிதான். இஸ்லாத்தில யார் அதை செய்கிறார்கள். இத்தனை வருட செய்தியாளர் அனுபவத்தில் சொல்லட்டும். அப்படி நடந்ததா எப்பவாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா?
ReplyDeleteவாருங்கள் திவா ஜி!
DeleteDale Carnegie புத்தகம் ஒன்றில் ஒருவயதானவள் கதையைச் சொல்வார். அந்த மூதாட்டிக்கு அசமந்தமான ஒரு மகள். ஊட்டுவது முதல் எல்லாவற்றையும் அந்த மூதாட்டிதான் செய்ய வேண்டும். தனக்குப் பிறகு மக்களுடைய நிலைமை என்னாகுமோ என்ற கவலையீடே ஒருநாள் செத்தும் போனாள்.
அந்தப் பெண் சிலநாட்கள் தடுமாறிவிட்டு, தன்னுடைய காரியங்களைத் தானே பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள் என்றொரு உண்மைச் சம்பவத்தை மருத்துவர் ஒருவர் சொன்னதாகச் சொல்லியிருப்பார். அந்தக் கதைதான்! சிறுபான்மைக்காவலர்களாகச் சொல்லிக் கொள்கிற எவரும் காப்பாளர்களில்லை, தங்களுடைய ஆதாயத்துக்காகவே செய்கிறார்கள் என்பதை அந்த மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். இது ஒருபக்கம்!
தூண்டிலில் புழுவை வைக்கிற எவனும் மீன்கள் மீது இரக்கம் கொண்டு செய்வதில்லை. அப்படிச் செய்கிறவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்பதை, இந்தமாதிரித்தலைவர்களை நம்புகிற கூட்டத்துக்கும் சொல்லித்தந்தாகவேண்டும்; இது இன்னொரு புறம்! இரண்டும் நடந்துகொண்டே இருக்கவேண்டும்!