Thursday, February 7, 2019

பேரன்புக்கு வடிவம் கொடுத்த மம்மூட்டி! இருவேறு பார்வைகள்

மம்மூட்டி நடித்ததினாலேயே பேரன்பு திரைப்படம் மிகவும் பேசப்படுகிற திரைப்படமாக ஆகியிருக்கிறது என்று சொன்னால் தவறே இல்லை! மம்மூட்டி இந்தக் காலத்தின் மகாகலைஞன் என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம் இது.

அமுதவன்! ஒரு நல்ல கணவனாக இருந்ததில்லை என்பது திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே காட்டப் பட்டு விடுகிறது. மனைவி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை சிறுமியாக இனி நீயே பார்த்துக் கொள் என்று வேறொருவனோடு ஓடிப்போய் விடுகிறாள். உறவுகளால் தனித்துவிடப்பட்டு,வயதுக்கு வரும் நிலையில் இருக்கும் மகளோடு, தாயாகவும் தந்தையாகவும் ஒரேநேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு தகப்பன், எப்படி அதற்குத் தயாராகிறான் என்பதுதான் கதை.படத்தைப் பார்த்த பிறகு, நெஞ்சில் அத்தனை கனம்! நெகிழ்ச்சி! தந்தையிடம் ஒட்டாமல் இருக்கும் மகளிடம் உனக்கு என்னதான் வேண்டும் பாப்பா என்று கேட்கிறபோது வருகிற பதில்! ஒற்றை வார்த்தை தான், அம்மா! 

ஒரு தகப்பனால், தாயும் ஆகிவிடமுடியுமா என்பது தான் திரைப்படத்தின் ஒருவரிக் கதைக்களம்! ஒன் லைனர்! முடியும் என்பது படம் சொல்கிற செய்தி!

ஆனால் பாராட்டுக்கள் ஒருபக்கம் குவிந்து கொண்டே வந்தாலும், இன்னொருபக்கக்  குரலையும் கேட்க வேண்டாமா?

பெண் குழந்தைகள் என்று உருகுகிற தந்தைமை உணர்வு , அவர்களை சமமாக பாவிக்க இயலாத 'ஆணாதிக்க கருணை' உணர்வாகவே என்னால் எப்போதும் உணர முடிந்திருக்கிறது . அதனாலேயே தந்தை - மகள் குறித்தான அதீத பிரியம் பேசும் திரைப்படங்கள் ரொம்பவே அந்நியமாக இருக்கும் . இது ஆணாதிக்க சிந்தனையின் இன்னொரு வடிவமாகவே என்னால் எப்போதும் பார்க்க முடிந்திருக்கிறது ..

A SEPARATION - ஈரானிய திரைப்படத்தில், மனைவி - கணவன் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருப்பார்கள் . ( அதே சமயம் நம்மூர் படம் போலல்லாது , இருவரும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும் தெரிந்தவர்கள் என்பதாக அவரவர் தரப்பு நியாயங்களை காட்டியிருப்பபார்கள் . - தமிழ் படம் எனில் இதில் பெண்கள் வில்லியாக , பாசமற்ற அரக்கியாக , சுயநலவாதியாக .. இத்யாதி .. சிறப்பிக்கப்பட்டிருப்பார்கள் .குறைந்தபட்சம் பேரன்பு படம் போல தன் பொறுப்பை துறக்க வேண்டியிருந்த பெண்ணின் நிலை குறித்து வாயே திறக்காமல் ,தந்தையை மட்டும் கொண்டாடவாவது .) மகள் தந்தை - தாய் இருவரும் சேர்ந்திருக்க விரும்புவார் என்பதால் அவர் தந்தையை விட்டு அகலாமல் , தாயை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட , அம்மாவுடன் செல்லாமலிருந்து விடுவார் .
அந்த ஈரானிய படத்தில் தந்தையுடன் இருக்கும் பதின்மத்தின் ஆரம்ப நிலையில் உள்ள பெண் குழந்தையை அவர் நடத்தும் விதம் அவ்வளவு அருமை .. (நடத்தும் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது . அம்மா அப்போது தான் பிரிந்து சென்றிருப்பார்கள் )

பெட்ரோல் பங்கில் காரில் உட்கார்ந்து கொண்டு , தன் மகளை அனுப்பிபெட்ரோலுக்கு பணம் தர சொல்வது , அவர்கள் மீதி தொகையை குறைவாக தந்த போது , அதை கேட்டு வாங்கி வர திருப்பி அனுப்புவது ,. மகள் தயக்கத்தோடு செல்வதும் பிறகு அந்த பணியாளர்களுடன் வலுவான விவாதத்தில் ஆணித்தரமா பேசுவதை காரில் இருந்து கொண்டே சந்தோஷ பெருமித உணர்வோடு பார்த்து கொண்டிருப்பது .., சரியான தொகையை பெற்று திரும்பி வந்து , தந்தையிடம் அதை தரும் அந்த பெண்ணிடம்'நீயே அதை வைத்துக் கொள் . அது உனக்கானது' என்று சொல்கிற அந்த தந்தை ..

பாட சம்பந்தமாக தன் பெண் தவறான ஒரு தகவலை சொல்ல , அவர் அதை திருத்தி சரியானதொன்றை சொல்வார் . அதற்கு அந்த பெண் " எங்க டீச்சர் இப்படித்தான் சொன்னாங்க ' என்று சொல்லும் ..
"உனக்கு எவ்வளவு முறை சொல்லி இருக்கேன் .. சொல்வது யாரென்று ஏன் கணக்கில் எடுக்கிறாய் ? என்ன சொல்கிறார்கள் என்றே பார்க்கணும் ..என்று சொல்லி இருக்கேனா இல்லையா ? " என்று கோபத்துடன் மகளை வழிநடத்தும் இடம் .. ..

அப்பாவும் ,. மகளும் அலுவலகம் , பள்ளி முடிந்து ஒன்றாக வீடு திரும்பி , வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் ஏறி வருகையில் யார் முந்தி செல்வது என்கிற போட்டியின் ஓட்டம் ....

ஆஹான்னு இருக்கும் .. இவரல்லவோ தந்தை , , இவரல்லவோ ஆசான் ,இவரல்லவோ பெண்ணியவாதி என்று அவ்வளவு நெகிழ்வாக இருக்கும் தன் மகள் சுயசார்புள்ள மனுஷியாக வளர்வதில் துணையாக நிற்பதே குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் , குறிப்பாக தந்தை என்கிற ஒரு ஆணின் சரியான பங்களிப்பாக இருக்க முடியும் என்பதை இந்த சமூகத்தின் "பெண்குழந்தை செண்டிமெண்ட்" ஆண்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் ?
பெண் குழந்தையை கொண்டாடுவதாக சொல்லிக் கொள்கிற நம் தமிழ் "கலைப்படங்கள் " , பெண்ணை இன்னுமே தொட்டிலில் இட்டு தாலாட்டி , இழிவுபடுத்துகிற வேலையை தான் செய்து கொண்டிருக்கிறது . அதையே பாசம் , பெண்களை மதித்தல் என்றும் சொல்லி கொள்கிறது .இதன் மூலம் திரும்ப திரும்ப பெண் , ஆணை சார்ந்திருக்க வேண்டியவள் என்பதை நிறுவ மெனக்கெட்டு கொண்டே இருக்கிறது .

ஆயாசமா இருக்கு .. எவ்வளவு அயல் தேச படங்கள் பார்க்கிறீர்கள். திரைத்துறையினரே ....இதெல்லாம் உங்களுக்கு எடுத்து கொள்ள தோணவே தோணாதா ?

திரும்ப திரும்ப பெண் - ஆண் சமத்துவமின்மையையே இப்படி பல வழிகளில் கொண்டாடி , இன்னுமே இந்த சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னோக்கியே இழுத்து கொண்டு செல்கிறீர்களே ..எப்போது தான் யதார்த்தமான , போலித்தமற்ற , உண்மையை பேச போகிறீர்கள் .. பாலின சமத்துவத்தில் ??

பொதுவா பாலகுமாரனின் பெண்கள் குறித்தான எழுத்தில் உடன்படாத பெண்கள் குறைவு . விமர்சனம் வைப்பவர்கள் அரிது . அந்த வகையில் இந்த பதிவில் பாலகுமாரன் பற்றி சொல்லியிருப்பது தான் அருமை எல்லோரும் கொண்டாடுகையில் எனக்கு ஏன் எரிச்சல் ஏற்படுத்துகிறது அவரின் எழுத்து ..ஜெயகாந்தன் எழுத்தையும் பெண்ணிய பார்வை என்கிறார்கள் . இவருடையதையும் அவ்வாறே எனில் உண்மையில் இவர்கள் பெண்ணியம் என்பதை எப்படித்தான் புரிந்து வைக்கிறார்கள் என்றெல்லாம் என் பதின்ம வயதிலும் தோன்றியிருக்கிறது . அந்த எண்ணத்தில் எந்த குழப்பமும் கொள்ள தேவையில்லை என்பதை அவரின் முதிய வயது "ஆன்மீக சிந்தனை" மிக தெளிவாகவே சொல்லி விட்டது .
=========================================

Geetha Narayanan 6 hrs
தங்க மீன்கள் திரைப் படத்தின் மிகை உணர்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை.உலகமயமாக்கச் சிக்கலைச் சாடினாலும் கற்றது தமிழில் எனக்கு நிரடல்கள் இருந்தன.தரமணியைப் பார்க்கக் கூடாது என்று அந்த ட்ரெயிலர் காட்டிய பெண் வெறுப்பு,நீதிபதி தோரணை முடிவெடுக்க வைத்தது.என் பணி நிமித்தம் சிறப்புக் குழந்தைகளோடு சில வேலைகள் செய்திருக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை சிறப்புக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் வணங்கப் பட வேண்டியவர்கள்.சிறப்புப் பள்ளி ஆசிரியைகள் பெரும்பாலும் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்கள்.தங்களின் மற்ற ஆர்வங்களை மற்ற வேலையை விட்டு விட்டு அவர்கள்தான் சிறப்புக் கல்வியைக் கற்று ஆசிரியைகளாய் மாறுகிறார்கள்.ஏனோ இந்தப் படம் பேரன்பைப் பார்க்க யோசிக்கிறேன்.

என் பதின் பருவத்தில் பால குமாரன் நாவல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பட்டன.அவர் பெண்களுக்காக எழுதுகிறார் எனக் கருத்துக்கள் முன் வைக்கப் பட்டன.ஆனால் அவர் நாவல்களில் பெண்கள் அற்பத்தனமானவர்களாக இருப்பார்கள்.அவர்களை மேன்மைப் படுத்தும் philosopher களாக ஆண்கள் இருப்பார்கள்.பெண்களுக்குப் பெருந்தன்மையைச் சொல்லிக் கொடுக்கும் ஆண் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்தான்.நீங்கள் படைப்பாளியின் உளவியலைச் சரியாக விளங்கி வைத்திருந்தாலும் அது படைப்பை ரசிக்க விடாமல் தொந்தரவு செய்யும்.

I am going through the same feeling now.மாற்றுத் திறனாளியாய் இருக்கும் மகனுக்கு பாலியல் தொழிலாளரை அறிமுகப் படுத்தும் பெற்றோரைப் பற்றிய ஆங்கிலப் படம் வந்து விட்டதில்லையா? அவர்களுக்குள் நட்பு கூட முகிழ்க்கும்.பேரை நினைவு படுத்திச் சொல்கிறேன்.

என்று பகிர்ந்திருக்கிறார் ப்ரபா மீனாட்சி!

அன்பிற்கும்  ஆண் பெண் பேதமுண்டோ? 

பேரன்பு திரைப்படம் ஒருகேள்வி எழுப்பியதோடு அதற்கு பதிலையும் சொல்லியிருந்தது.

ஒரு பெண்ணாக அதை மறுத்துப் பேசுகிறார்  ப்ரபா மீனாட்சி!   

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

                            

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)