இடைக்கால பட்ஜெட் இன்றைக்குத் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. உடனடியாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களும் பதிவாகிக் கொண்டே வருகின்றன.
இவங்கபாட்டுக்கு பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு போய்ட்டாங்க , நைட் டிவில மயில்சாமி மாதிரி பெரிய பெரிய பொருளாதார மேதை எல்லாம் விவாதம் செய்வானுகளே , அத நெனச்சாத்தான் இப்பவே கண்ண கட்டுதே உஸ்ஸ்ஸ்....
இவங்கபாட்டுக்கு பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு போய்ட்டாங்க , நைட் டிவில மயில்சாமி மாதிரி பெரிய பெரிய பொருளாதார மேதை எல்லாம் விவாதம் செய்வானுகளே , அத நெனச்சாத்தான் இப்பவே கண்ண கட்டுதே உஸ்ஸ்ஸ்....
என்று அலுத்துக்கொள்கிறார் பொன் மாலை பொழுது மாணிக்கம்! உண்மைதான்! பள்ளிநாட்களில் பட்ஜெட் விவாதங்களைக் கவனிக்க சில ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து ஊக்குவித்ததுண்டு. கல்லூரி நாட்களிலும் பிறகும் எகனாமிக் டைம்ஸ் உதவியாக இருந்ததும், வர்த்தக சபைகள் பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்துவதைக் கேட்கப்போனதும் பழங்கதைகளாகிப் போயின. இப்போது சர்வம் சோஷியல்மீடியா மயம்!
Listen to your PM carefully
12:24 AM - 1 Feb 2019
பதிலடியாக 2006 இல் மன்மோகன் சிங் என்ன சொன்னார் என்கிற பழங்கதை அப்பச்சிக்கு சொல்லப் பட்டிருக்கிறது அப்பச்சிகள் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்களா என்ன?
2008க்கும் 2014க்கும் இடையில் வாரியிறைக்கப்பட்ட வங்கிக் கடன்களே இன்றைக்கு வராக்கடன்களாகப் பெருகியிருப்பதையும், வசூல் செய்வதற்கு அரசு எடுத்திருக்கிற உறுதியான பல நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டுக் காட்டிய பகுதி மேலே! விஜய் மல்லையா கதறுவது கீழே
Every morning I wake up to yet another attachment by the DRT recovery officer. Value already crossed 13,000 crores. Banks claim dues including all interest of 9,000 crores which is subject to review. How far will this go and well beyond ? Justified ??
சோஷியல் மீடியாவில் trending ஆவது, ஆக்குவது எப்படி என்பதை ஊரறிந்த ஊடகக்காரர் ஒருவர் சொன்னால்தானே தெரியும்? trending trumpeting தம்பட்டம் எல்லாம் ஒருபொருள் குறித்தவைதானே!
யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான்! ஆனால் சுயமாகச் சிந்தித்து சொல்லப் படுகிற செய்திகளின் வேர் எங்கே, என்ன என்பதையும் பார்க்கப் பழக வேண்டிய நேரம் இது!
No comments:
Post a Comment