Tuesday, February 26, 2019

தமிழேண்டா போராளியும்! முகநூல் போராளியும்!

இன்று அதிகாலை கைபர் பஃடூன்க்வா பிரதேசத்தில் பாலாகோட் பகுதியிலும், பிற இடங்களிலும் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல்களில் தீவிரவாத முகாம்களும், தீவீரவாதிகளும் அழிக்கப்பட்டுள்ள செய்தியை பாகிஸ்தானிய ராணுவமே அரைகுறையாக ஒப்புக் கொண்டாலும் நம்மூர் தமிழேண்டா போராளி, முகநூல் திராவிடப் போராளி கும்பல்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்களாம்!

   
ஒரு திமு கழக ஆதரவு முகநூல் போராளி முதலில் நியூயார்க் டைம்சில் பட்டும்படாமல் வந்த செய்தியைக் குறிப்பிட்டு, சந்தேகம் எழுப்பினார். இது மாதிரி அரையும் குறையுமாகப் படித்துவிட்டு எழுதிய பகிர்வு எடுபடவில்லை. NYT செய்திக்கு வந்த ஒரு பின்னூட்டமே, செய்தியைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்!
Observer Pittsburgh
@M hassan The strikes don't seem to be hasty or abortive. For an operation this risky, I doubt it would be. Unlike what the Pakistan's defense spokesman claimed, There were in fact 6 locations that were targeted. The main strike location (Balakot) is more than 80 miles inside Pakistan's border in the KP region. This area is known for it's support for Lashkar and Jaish groups. The news coming from Pakistan's local sources point to some of that. Not everything would be true. But if you look at the map, Balakot is quite near Muzzafarabad and well inside KP. In fact, I won't be surprised a lot of planning went into pointing the location of the strikes.
முகநூல் கழகப் போராளி எழுதியதற்கு ஆதரவாக ஒரு அவசரக்குடுக்கை உ.பருப்பு ஓடிவந்து எழுதியது இது!
விமான படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியா?? முகாம்கள் அழிக்கப்பட்டனவா?? பலத்த சேதம்மா?? உண்மை என்ன?? யார் சொல்வதை நம்புவது??

சரி, தாக்குதலுக்கு உள்ளான பகுதி எங்குள்ளது?? 


காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில்..

எனவே, இந்திய அரசுக்கோ, இந்திய ஊடகங்களுக்கோ அங்கே உண்மையில் என்ன நடத்தது?? என்ன பாதிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இல்லை..

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் விஷயத்தை மறைகின்றன என்றே வைத்துக்கொள்வோம், பாதிப்பை சொல்லவில்லை என்றே வைத்துக்கொள்வோம், அப்படியென்றால், நாம் சர்வதேச ஊடகங்களை தான் பார்க்கவேண்டும்..

ராய்ட்டர்ஸ், பிபிசி, CNN, டைம்ஸ் நாளேடு, வாஷிங்டன் போஸ்ட் என எந்த ஒரு சர்வதேச ஊடகங்களிலும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்படவேயில்லை... பிரேக்கிங் நியூஸ் கூட இல்லை.. 

சர்வேதேச ஊடகங்களின் செய்திப்படி, இந்திய விமானபடை விமானங்கள், கட்டுப்பாட்டு எல்லை கோட்டை தாண்டி, POK எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குண்டு வீச முயன்றன, ஆனால் பாக் விமானபடை வழி மறித்ததால், குண்டுகள் காட்டு பகுதியில் வீசப்பட்டுவிட்டது, பெரிதாக எந்த பாதிப்பும் சேதாரமும் இல்லை.. 
ராய்ட்டர் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவலில், குண்டு வீச்சில் மரங்கள் விழுந்து, வீடு சேதமடைந்து ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது என உள்ளது.. இந்திய ஊடகங்கள் சொல்லுமளவுக்கு உயிரிழப்பு & சேதங்கள் ஏற்பட்டிருந்தால், கட்டாயம் சர்வேதேச ஊடகங்களில் விஷயம் வெளிவந்திருக்கும்..
ஆனால் தமிழேண்டா போராளிகளுக்கு, செய்திகளைத் தேடிப் படித்து உண்மையைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமெல்லாம் இல்லை போல!

எல்லாம் எலெக்னுக்காக மத்திய அரசு நடத்துகிற ஸ்டன்ட், நாடகம் என்று ஒரே போடாகப் போட்டால் போதும்! உண்மையென்ன என்று யார் தேடப் போகிறார்கள்? ஈழ ஆதரவு வியாபாரம் போணியாகாத நேரங்களில், மோடி எதிர்ப்பு என்று கூவினால் கூட்டமும் காசும் கொஞ்சம் சேராதா?
சாதாரணநாட்களிலேயே பொய்களை சர்வ சாதாரண விஷயமாக அள்ளிவீசுகிற உதிரிகள், பிரிவினைக் கும்பல்கள், முக நூல் போராளிகள், இவர்களை பெரிது படுத்திக் காட்டும் காசுக்குக் கூவுகிற ஊடகங்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் என்னென்ன செய்வார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
வருகிற தேர்தலில் யார்யாரையெல்லாம் நம்பமுடியாது, நிராகரிக்கவேண்டுமென்பது புரிகிறதா?

இந்த தேசத்தை, மக்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்!


7 comments:

  1. இவர்களெல்லாம் தேச விரோதிகள் என்பதை இப்படிப்பட்ட பேட்டிகளின் மூலம் வெளிச்சம்போட்டுக் கொள்கிறார்கள். அதுவும் சரிதான்... காசு எங்கிருந்து வருகிறதோ அவர்களுக்கு விசுவாசம் காட்டுவதுதானே இவர்களது கடமை...

    ReplyDelete
    Replies
    1. ஊடகம்,போராளிங்க சாயம் வெளுத்துப்போச்சுன்னு எக்ஸ்போஸ் செய்வதற்காகத்தானே இங்கே எழுதுவதே!

      Delete
  2. முன்பெல்லாம் பிற நாட்டு மீடியாக்களில் என்ன மாதிரி செய்தி வருகிறது என்பதை தெரிந்து கொள்வது கடினம். இப்போது google news போன்ற தளங்களில், Language & Region செட்டிங் மாற்றுவது மூலம் பாகிஸ்தான் மீடியாவில் என்ன செய்தி வருகிறது என்று எளிதில் பார்த்துக் கொள்ளலாம். அந்த அளவு தேடல் கூட இல்லாமல் இவர்கள் 'அடித்து விடுவதை' பார்க்க பாவமாக இருக்கிறது!

    இன்னொன்று தேசத்துக்கு எதிரான சிந்தனை. யார் பிரதமராக இருந்தாலும் சரி. தேசம் நமது தேசம் தானே. இவர்களை போன்றவர்கள் பிஜேபி எது செய்தாலும் தவறு என்ற பார்வையிலேயே அணுகுவது கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. ஜனங்கள் வாழைப்பழச் சோம்பேறிகள் என்பது தெரிந்ததுதானே பந்து?! ஊடகங்கள் மேலும் மொண்ணைகள் ஆக்குவதில் இருந்து விடுபட சுயமாக எழுந்து நின்றாலொழிய வேறு குறுக்குவழி எதுவுமில்லை என்பதையாவது இங்கே வருகிற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தலாமென்றுதான் எழுதுகிறேன்.

      நீங்களும் கூட உங்கள் வட்டத்தில் இதே கருத்தைப் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாமே!

      Delete
  3. இந்த மாதிரி நபர்களிடம் கேள்வி கேட்பவர்களைச் சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி கேட்பவர்கள் கிடக்கட்டும், இதையும் வாயைத்திறந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, பொதுஜனம்! அவர்களை என்ன செய்வது? செய்தி சீனல்களின் விவாதங்கள், டிவியில் சீரியல் மோகத்தைக் குறைத்திருப்பதாக சில நீதிபதிகள் ஷொட்டுக் கொடுத்திருக்கிறார்களே,நாதர்க்கென்ன செய்வது ஸ்ரீராம்?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)