இங்கே சுப வீ செட்டியார் வழக்கமான பரப்புரை தான்! என்று சொன்னால் மட்டும் போதாதே! திராவிட இயக்கச் சிந்தனைகளில் வளர்ந்தவரென்று தன்னைச் சொல்லிக் கொள்கிற இடத்தில் தான் இவர்போல பலருடைய பிழைப்புவாதம் ஈயென்று இளித்து நிற்கிறது. அப்படி என்ன சொல்கிறார் ?
இது பெரியார்மண்! இது திராவிடநாடு! இது மூச்சுக்கு மூச்சுஅவர்கள் சொல்லிக்கொள்வது! இடையிடையே சமூக நீதி,சமநீதி என்ற வார்த்தைகளும் வந்துபோகும்! மாரிதாஸ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
இது இன்னார் மண் என்று சொல்வதே ஒரு அரசியல் அயோக்கியத்தனம், அரசியல் தந்திரம் என்று உடைத்துச் சொல்கிறார்.
ஒரு கருத்து! எதிர்க்கருத்து என்று இரண்டையும் பார்க்க முடியாது! எது உண்மை? பரப்புரைகளில், பேச்சுக் கவர்ச்சியில், உண்மையைக் கண்டறிய முடியாது. செய்திகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? எப்படி ஒரு செய்தியின் வேரைக் கண்டுபிடிப்பது?
The Art of Questioning! இதை ரங்கராஜ் பாண்டேவை விட வேறு யார் அழகாகச் சொல்லிவிடமுடியும்? அவரே சொல்கிறார்! கேளுங்கள்! இதன் தொடர்ச்சி இங்கே
கேட்கிறவன் கேணையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்! மூக்கினால் முக்கி முனகிக் கரகரத்த குரலில் திராவிடத் தளுக்குகள் நம்மை அப்படித்தான் ஆக்கி வைத்திருந்தன!
இனியெங்கிலும்.......
பார்த்தேன். ரசித்தேன். பாண்டேக்கு செயலாற்ற ஒரு நல்ல தளம் கிடைத்தால் நல்லது.
ReplyDeleteவாசிக்காமல் பார்க்காமல் விட்ட தகவல்களை உங்கள் தளம் மூலம் படிக்க பார்க்க முடிகின்றது. நன்றி
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி! வேலைப் பளுவோடு எல்லாவற்றையும் பார்க்கமுடியாதுதான்! அதே நேரம் ஒரு கருத்து அதற்கு எதிர்க்கருத்து என்று பார்ப்பது எனக்கு ஆரம்பநாட்களில் இருந்தே பழகிப்போன விஷயம். இரண்டு தரப்பையும் பார்த்துவிட்டு, எதுசரியானது என்பதை சுயமாக முடிவு செய்வதற்கு உதவியாக இருப்பதும் கூட!
Delete