கடந்த ஜனவரி 19 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி, கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் மோடிக்கு எதிராய் நிற்கும் எதிர்க் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தன்னுடைய பவர் என்னவென்று காண்பித்தார். அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி அதே இடத்தில் இடதுசாரிகளின் பேரணியை இன்னும் கொஞ்சம் அதிகக் கூட்டத்துடன் நடத்திக் காண்பித்தது.
அங்கே சுற்றி இங்கே சுற்றி காம்ரேடுகள் என்ன முடிவு செய்திருக்கிறார்களாம்? கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு எந்த முட்டுச் சந்துக்குள் டோலர்களைக் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானதில்லை. இந்தமாதம் 9ஆம் தேதி நடந்து முடிந்த பொலிட்பீரோ முடிவுகளை சீதாராம் யெச்சூரி பூசிமெழுகிச் சொல்வதை பார்க்க இங்கே. மார்ச் மத்தியக்குழு அங்கீகரித்தபிறகுதான் என்று சொல்லப்பட்டதை இங்கே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தாயிற்று.
நீண்ட நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கொஞ்சம் வருத்தப்பட்டே சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு வலதுசாரிக்கட்சியாக பிஜேபி இங்கே வலுவாக்க காலூன்றிக் கொண்டதற்கு, சமன் செய்கிற மாதிரி ஒரு இடதுசாரி கட்சியும் வலுவாக இருக்கவேண்டும் என்பது அவர் சொன்னதன் சாராம்சம். இங்கே இடதுசாரிகள் என்ன செய்கிறார்கள்? எதனோடோ சேர்ந்த கன்றுக்குட்டி எதையோ தின்னப்போன கதையாக இங்கே கழகங்களோடும் அங்கே காங்கிரசோடும் உறவாடிச் சீரழிந்து கொண்டு வருவது மட்டும் கண்முன்னால் நிகழும் கள யதார்த்தம்.
தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே ராமச்சந்திர குஹா என்ன சொன்னார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிற பதிவு.
தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே ராமச்சந்திர குஹா என்ன சொன்னார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிற பதிவு.
ஒரு நல்ல மாற்றத்துக்கு இப்போதுள்ள கட்சிகளோ கூட்டணிகளோ வழிவகுக்கப்போவதில்லை. பழையதை உடைத்துப் புதியது பிறந்தாக வேண்டும்.
எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் ஜனங்கள் மாறுவதற்குத் தாயாராக வேண்டும். வழிநடத்த ஒரு நல்ல தலைமை, எங்கிருந்தோ அல்ல, நம்மிடமிருந்தே உருவாகவேண்டும்.
எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? கொஞ்சம் சொல்லுங்களேன்!
காலத்தின் தேவைகளைக் காலமே தீர்மானிக்கிறது.
ReplyDeleteவலதுசாரி, இடதுசாரி என்று பிரித்துப் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. இரண்டும் கலந்தது தான் எந்த ஒரு இயக்கத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற மாறிப் போன ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால் வரப்போகிற காலகட்டத்தில் வலது, இடது என்ற பகுப்பெல்லாம் காணாமல் போகும்.
இந்த விஷயத்தில் தொடர்புடைய இன்னொரு பதிவு https://consenttobenothing.blogspot.com/2018/12/2.html
Deleteராமச்சந்திர குஹா முன்வைத்திருந்த 4 கேள்விகளை முன்வைத்துப் பேசியது.
அகில இந்தியக் கட்சிகள் என்ற தகுதியை ஒவ்வொரு கட்சிகளாக இழந்து வருகின்றன. மாநிலத்திற்கு மாநிலம்
ReplyDeleteகூட்டணிகளை மாற்றிக் கொள்வது அந்த தகுதி இழப்பிற்கான ஆரம்ப கட்ட செயல்பாடுகளாக அமையும்.
மம்தா VS காங்கிரஸ்
ReplyDeleteமமதா VS கம்யூனிஸ்ட்
பிஜேபி VS காங்கிரஸ்
பிஜேபி VS மம்தா
-- இவற்றிற்கிடையே சிக்கிக் கொண்ட மாநில கட்சிகள்
நாளைய தேர்தல் நாடாளுமன்றத்திற்காகவே முக்கியப்படுத்தப்படுகிறது.
இந்த அடிப்படையில் நீங்கள் தொடங்கலாம்.
அடுத்த பதிவுக்கு அவசரமில்லை. நின்று நிதானித்துப் போகலாம்.
ReplyDeleteஜீவி சார்!
Deleteஇப்படிப் பிட்டு பிட்டாகப் பின்னூட்டங்கள் என்பதற்குப் பதிலாக நீங்கள் முன்வைக்க விரும்புவதை ஒரு guest post ஆக எழுதிவிடலாமே!