அருள்கூர்ந்து முந்தைய பதிவைப் படித்து விடுங்கள்!
தேசத்துக்குக் கொள்கை தான் வேண்டும், தலைவர்கள் அல்ல என்று பிப்ரவரி 2 ஆம் தேதி முழங்குக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி! மிகவும் சரி! சொல்கிறவரிடம் என்ன கொள்கை இருக்கிறதாம்? அவரே சொல்கிறார்!
ரொம்ப சிம்பிளாக இரண்டே இரண்டு! மோடியை ஒழிப்போம்! மம்தாவை ஒழிப்போம்! இது சர்வரோக நிவாரணியாக மார்க்சிஸ்டுகளின் கண்டுபிடிப்பு! இதே மாதிரித்தான் எமெர்ஜென்சி நாட்களிலும் முன்பும் இந்திரா முழக்கமும் இருந்தது என்பது நினைவுக்கு வருகிறது. ஆக்கபூர்வமாக லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்றும் வாஜ்பாய் காலத்தில் ஜெய் விஞ்ஞான் என்பதையும் சேர்த்து ஒரு பாசிடிவ் முழக்கமாக இருந்ததெல்லாம் பின்னுக்குப்போவிட்டது.
கரீபி ஹடோ! வறுமையே வெளியேறு! 1971 முழக்கம்! வறுமை வெளியேறி விட்டதா? ஒரு சுவர், பஸ், பேப்பர் விடாமல் இந்த முழக்கம் அம்மணி முகத்தோடு அந்தநாள் அலப்பறைகள் தவிர சாதித்தது என்ன?
ஒரே ஒரு கோர்ட் தீர்ப்பு, அம்மணியுடைய கோரமுகம் எப்படியிருந்தது என்பதைக் காட்டிவிட்டதை மேலே! தொடர்ச்சி இங்கே பார்த்துவிட்டு கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!
1974 லிருந்தே இந்திராவின் சர்வாதிகாரப்போக்கை எதிர்த்த காந்தீயவாதி ஜெயப்ரகாஷ் நாராயணனே மனம் நொந்து இந்திரா ஹதாண்டவம் டோ தேஷ் பச்சாவோ என்று சொல்லியிருப்பாரானால், இந்திராவின் கோர தாண்டவம் எப்படியிருந்திருக்கும்? ஊகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அந்த நிகழ்வை bihar movement என்று கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள்!
என்னவோ மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும்தான் இந்த ஒழிக கோஷம் சொந்தமா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் முதற்கொண்டு இங்கே அரசியல் சில்லுவண்டிகள் எல்லோர் வாயிலும் மோடி ஒழிக கோஷம் புறப்படுவதாலேயே, சரியாகி விடுமா?
ஒழித்து விட்டு எதை, யாரை வைத்து என்னமாதிரி மாற்றப் போகிறார்களாம்? அவர்களுக்கு ஒரு தெளிவு அதிலாவது இருக்கிறதா? விடையைக் காணோம்!
சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.
கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்! இப்படி ஒரு திரைப்பட விமரிசனமாக அந்த நாட்களில் எழுதியிருந்தேன்!
அரசியல் மாற்றங்களுக்குமே கூட குறுக்குவழி எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றை ஒழித்து வரும் வெற்றிடத்தை நிரப்ப இங்கே இடதுசாரிகள் உட்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் தகுதி உள்ளதாக இல்லை என்பது புரிகிறதா?
இவர்களில் எவராவது மோடி எதிர்ப்புக்குச் சரியான காரணம் சொல்கிறவரை, நம்புவதற்கு அவசரமா என்ன? கூட்டத்தோடு சேர்ந்து கூவியே ஆகவேண்டிய அவசியம்தான் என்ன?
நமக்கு சொந்தமாக யோசித்து முடிவெடுக்கத் தெரியும் இல்லையா? மந்தைகள் அல்லவே நாம்!