தேர்தல் நெருங்க நெருங்க காபரா போஸ்டுகளும் வர ஆரம்பித்துவிடும். இங்கே cobrapost தளம் புதிய (??) அக்கப்போரை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
மக்களவைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், 36 பாலிவுட் ஆளுமைகள் தங்கள் சமூக வலைத் தளங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பிரச்சார விளம்பரம் செய்யத் தயாராக இருப்பதாக புலனாய்வு ஊடகமான கோப்ரா போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது என்று ஆரம்பிக்கிறது ஹிந்து நாளிதழ்
பொதுத் தொடர்புகள் முகமை ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கோப்ரா போஸ்ட் நிருபர்கள் பல நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், ஆகியோரை அணுகி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை என்று பேசி தங்கள் பல்வேறு சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தேடித்தருமாறு கேட்டுள்ளனர். அப்போது சில பிரபலங்கள் பதிவு ஒன்றிற்கு ரூ.50 லட்சம் வரை கேட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.ஆனால் 4 பிரபலங்கள் நேரடியாக, உடனடியாக இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கோப்ரா போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
நாலாவது தூண்! ஒரு புத்தக விமரிசனமாக ஆரம்பித்த இந்தப்பதிவில் 2009 வாக்கில் காசுக்கு செய்தி போடுகிற கலாசாரம் வேகமாக வளர்ந்து வருவதைக் குறித்துக் கொஞ்சம் பேசி இருந்தேன்!
ஆந்திராவில்,2009 தேர்தலில், வேட்பாளர்களுக்கு சாதகமாக தலையங்கங்கள் எழுதுவதற்காக மட்டும், முன்னூற்றைம்பது கோடியில் இருந்து நானூறு கோடி ரூபாய்கள் வரை கைமாறியிருப்பதாக, ஆந்திர மாநில உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுத்த சாம்பிள் சர்வே சுட்டுவதாகச் சொல்லியிருக்கிறது.
வேடிக்கை என்னவென்றால், இந்த செலவினங்களைப் பகிரங்கமாகப் பல வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்குகளிலும் காண்பித்திருப்பதும், அதைக் குறித்து தேர்தல் ஆணையம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும் தான்!
ஹிந்து நாளிதழில் இந்த மாதம் இருபத்தாறாம் தேதி வெளியான இன்னொரு கட்டுரையில், தேர்தல்களில் அதிக ஆளுமை செலுத்தும் ( அல்லது பயமுறுத்தும்) பணபலம் குறித்த தகவல்கள் இன்னமும் கவலை கொள்ளச் செய்கின்றன.

யார் ஆட்சிக் காலத்தில் இந்த மாதிரி ஆரம்பித்தது என்பதும் sting operation என்று கைகாட்டப் பட்டவிதமும் தெரிந்தவர்கள் இதுமாதிரியான பரபரப்புக்களில் மயங்கி ஏமாந்து விடுவதில்லை.
இங்கே தலைவர்களிடம் கொள்கையை தொண்டர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதோடு TSS மணி வேறு சில விஷயங்களையும் உடைத்துப் பேசுகிறார்! கட்சித் தொண்டர்கள் மட்டும்தானா? பொதுஜனங்களும் கூட இவர்களிடம் விவஸ்தை, consistency முதலான நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பதில்லை!
இது நல்லதுதானா? கொஞ்சம் யோசித்து ஒருபதில் சொல்லுங்களேன்!
கலகலக்கிறதா திமுக? இப்போதுதான் வாசித்து முடித்தேன்! நீங்களும் வாசித்துப்பாருங்களேன்!
கலகலக்கிறதா திமுக? இப்போதுதான் வாசித்து முடித்தேன்! நீங்களும் வாசித்துப்பாருங்களேன்!
No comments:
Post a Comment