Showing posts with label திரிக்கப்படுவது எப்படி. Show all posts
Showing posts with label திரிக்கப்படுவது எப்படி. Show all posts

Wednesday, February 20, 2019

காபரா செய்திகள்! செய்திகளின் வேரைத் தேடுங்கள்!

தேர்தல் நெருங்க நெருங்க காபரா போஸ்டுகளும் வர ஆரம்பித்துவிடும். இங்கே cobrapost தளம் புதிய (??) அக்கப்போரை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
மக்களவைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், 36 பாலிவுட் ஆளுமைகள் தங்கள் சமூக வலைத் தளங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பிரச்சார விளம்பரம் செய்யத் தயாராக இருப்பதாக புலனாய்வு ஊடகமான கோப்ரா போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது என்று ஆரம்பிக்கிறது ஹிந்து நாளிதழ் 

பொதுத் தொடர்புகள் முகமை ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கோப்ரா போஸ்ட் நிருபர்கள் பல நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், ஆகியோரை அணுகி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை என்று பேசி தங்கள் பல்வேறு சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தேடித்தருமாறு கேட்டுள்ளனர். அப்போது சில பிரபலங்கள் பதிவு ஒன்றிற்கு ரூ.50 லட்சம் வரை கேட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.ஆனால் 4 பிரபலங்கள் நேரடியாக, உடனடியாக இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கோப்ரா போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
நாலாவது தூண்!  ஒரு புத்தக விமரிசனமாக ஆரம்பித்த இந்தப்பதிவில் 2009 வாக்கில் காசுக்கு செய்தி போடுகிற கலாசாரம் வேகமாக வளர்ந்து வருவதைக் குறித்துக் கொஞ்சம் பேசி இருந்தேன்! 
ஆந்திராவில்,2009  தேர்தலில், வேட்பாளர்களுக்கு சாதகமாக தலையங்கங்கள் எழுதுவதற்காக மட்டும், முன்னூற்றைம்பது கோடியில் இருந்து நானூறு கோடி ரூபாய்கள் வரை கைமாறியிருப்பதாக, ஆந்திர மாநில உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுத்த சாம்பிள் சர்வே சுட்டுவதாகச் சொல்லியிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், இந்த செலவினங்களைப் பகிரங்கமாகப் பல வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்குகளிலும் காண்பித்திருப்பதும், அதைக் குறித்து தேர்தல் ஆணையம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும்  தான்!

ஹிந்து நாளிதழில் இந்த மாதம் இருபத்தாறாம் தேதி வெளியான இன்னொரு கட்டுரையில், தேர்தல்களில் அதிக ஆளுமை செலுத்தும் ( அல்லது பயமுறுத்தும்) பணபலம் குறித்த தகவல்கள்  இன்னமும் கவலை கொள்ளச் செய்கின்றன.
யார் ஆட்சிக் காலத்தில் இந்த மாதிரி ஆரம்பித்தது என்பதும் sting operation என்று கைகாட்டப் பட்டவிதமும் தெரிந்தவர்கள் இதுமாதிரியான பரபரப்புக்களில் மயங்கி ஏமாந்து விடுவதில்லை.  
இங்கே தலைவர்களிடம் கொள்கையை தொண்டர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதோடு TSS மணி வேறு சில விஷயங்களையும் உடைத்துப் பேசுகிறார்! கட்சித் தொண்டர்கள் மட்டும்தானா? பொதுஜனங்களும் கூட இவர்களிடம் விவஸ்தை, consistency முதலான நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பதில்லை!

இது நல்லதுதானா? கொஞ்சம் யோசித்து ஒருபதில் சொல்லுங்களேன்!

கலகலக்கிறதா திமுக?  இப்போதுதான் வாசித்து முடித்தேன்! நீங்களும் வாசித்துப்பாருங்களேன்! 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)