Thursday, February 21, 2019

தேர்தல்! ஊடகங்கள் ! ஊடகக்காரர்கள்!

தேர்தல் களம் வேகமாகத் தயாராகி வருகிறதோ, இல்லையோ ஊடகங்களும் ஊடகக்காரர்களும்  தயாராகிக் கொண்டு வருவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
ஆரம்பித்த நாட்களில் இருந்தே  காங்கிரஸ் ஆதரவு வழவழா ஊடகமாகவே இருக்கும் குமுதம் இதழில் ரங்கராஜ் பாண்டே வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகிறார் என்பது இந்தத் தேர்தல் நேரத்து வினோதம். பாண்டே தனியாக யூட்யூப் சேனலில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துவருகிறார்! தெரியும்தானே!
தராசு! தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட புலனாய்வு வார இதழ்! காலச் சூழ்நிலை தராசுக்குப் போட்டியாக ஏராளமான இதழ்கள் வெளிவந்தநிலையில் தராசு தன்னுடைய மவுசை இழந்தது. ஆனால் தராசு ஆசிரியர் ஷ்யாம் இப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் கருத்துச் சொல்கிறவராக மீண்டுவந்திருக்கிறார்.

முகம் தெரியாத செய்தியாளர்கள் எங்கெங்கிருந்தோ காப்பியடித்துப் போடப்படுகிற செய்திகள் மொழிக்கு ஒரு  முகம் வைத்திருக்கிற ஒன் இந்தியா தமிழில் ஜெயலலிதா பார்முலா அதாவது விடுதலைச் சிறுத்தைகள், மதிமுகவுக்கு வழங்கும் இடங்களில் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளதாம் திமுக தலைமை. தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாம் இது என்று முனகுகிறது! 

மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கிரமிப்பையும் மீறி சில அதிகாரிகள் ஊடக வெளிச்சத்துக்கு அதிரடியாக வருவதும் கூட தேர்தல் நேரத்து வினோதம்தான்! 

செயற்கையான ஊடக வெளிச்சமோ கைதூக்கி விடுவதோ இல்லாமல் தன்னுடைய தொடர்ச்சியான முகநூல் பகிர்வுகள், யூட்யூப் காணொளிகள் வழியே அறிமுகமான பிரபலம் மாரிதாஸ். சமீபத்தில் இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தபோது ....
ஏன் நரேந்த மோதி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும் அதற்கு எனது பிரச்சாரத்தை இன்னும் 3 தினங்களில் ஆரம்பிக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக என் குழு செய்து வருகிறார்கள்.
ஆனந்த விகடன் ஆரம்பித்து தி இந்து வரை அனைவரும் குறிபிட்டக் கட்சிக்குச் சார்பாக நரேந்திர மோதி அவர்களுக்கு எதிராக வேலைகளை வரிந்து கட்டிகொண்டு செய்யத் தொடங்கிவிட்டனர். நக்கீரன் எல்லாம் முழு நேரம் தன் பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.. எனவே இவர்கள் தாண்டி இங்கே நரேந்திரமோதி அவர்கள் ஆட்சிக் காலத்தில் சாதித்தது என்ன என்ற விவரங்களை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு செல்ல அனைவரும் ஒன்று கூடி இணைந்து செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த பிரதமராக நரேந்திர மோதி அவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பும் கட்சிச் சார்பில்லாத தேசியவாதிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து கொள்ள மாவட்டவாரியாக அழைக்கிறோம். இதில் தனி நபர் துதி பாடி பிரச்சாரம் இருக்காது , நரேந்திர மோதி அவர்கள் என்ன என்ன இந்த 5 வருட ஆட்சியில் சாதித்தார் என்ற விவரங்களை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு செல்வது எமது முயற்சி.
பிரச்சாரம் இருவகையாகப் பிரித்துள்ளோம் ஆட்சிக்கு யார் வரவேண்டும் , யார் வரகூடாது என்பதாக.
இதை கட்சிச் சார்புகளைத் தாண்டி ஒரு உண்மையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டி நாம் செய்கிறோம். முழு நேரம் அவசியம் இல்லை பகுதி நேரம் கடமையாக கருதி வேலை செய்யும் அர்பணிப்புள்ள நபர்கள் தேவை. மிக முக்கியமான விசயம் எந்த அளவிற்கு நாகரீகமாக நடந்துகொண்டோம், பிரச்சாரங்களை மேற்கொண்டோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்பதால் ஆபாசமாகத் திட்டுவது , தனி நபர் விமர்சனங்கள் செய்வோர், தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் யாரையும் நாங்கள் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
திட்டம் மிக எளிது நாங்கள் கொடுக்கும் தகவல் ஒவ்வொரு மாவட்டத்தில் சுமார் 30,000குடும்பத்தில் ஒருவருக்காது கொண்டு சென்று சேர்க்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கீழ் கண்டத் தகவல்களை இந்த எண் +91 9789891491 வாட்சப் அல்லது imsi.maridhas@gmail.com ஈமெயில் செய்யவும்.
பெயர் :
உங்கள் தொலைபேசி எண் :
நகரம் :
மாவட்டம் :
வேலை :
{குறிப்பு :
அடிப்படையில் எந்த வேலைக்கு பொருளதாரம் அவசியம். ஒரு வீடியோ ஆரம்பித்து கூட்டங்கள் நடத்துவது வரை அனைத்திற்கும் இங்கே செலவுகள் இருக்கிறது. எங்களால் முடிந்த வரை சில நல்ல மனிதர்கள் உதவியுடன் பொருளாதாரத் தேவையை இழுத்துக் கொண்டு செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் தங்களால் முடிந்த உதவி தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
வீடியோக்களில் நாங்கள் விளம்பரம் செய்வது இல்லை. கட்சி ஆட்களிடம் நிதி பெறுவது இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
வங்கி விவரம் :
Bank : Axis
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
IFSC : UTIB0002986
Branch : KK Nagar, Madurai}
இறுதியாக ஒரு உறுதிமொழியை தருகிறேன் "நரேந்திர மோதி அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோரில் நாங்கள் முதல் இடத்தில் இருப்போம்". வந்தே மாதரம்.
-மாரிதாஸ்    

ஊடகங்களில் இன்று கவனித்தவை இவை!

         

12 comments:

  1. பாண்டே தனிப்பாதை காண முயற்சிக்கிறார். வெற்றி (புகழ்0 கிடைக்குமா தெரியவில்லை.

    ஷியாம் அடிக்கடி முன்னரே தொலைக்காட்சிகளில் கண்ணில் பட்டிருக்கிறார். அது இருக்கட்டும். விஜய்காந்தைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. என்ன செய்வாரோ... சிங்கம் போலிருந்த மனிதர்.

    மாரிதாஸ் தகவல் படித்தேன். மோடியை இத்தனை ஊடகமும் எதிர்க்கக் காரணம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. மோடி எதிர்ப்பு, மோடி ஆதரவு இரண்டு9மே இரண்டுவகையான ஊடக வியாபாரம்! தி மு கழகத்தின் ஆதரவு வேண்டுமா இல்லையா என்ற அன்பான வேண்டுகோள் ரங்கராஜ் பாண்டே வெளியேறக் காரணமாக இருந்தது என்பதான செய்தி சொல்வதென்ன ஸ்ரீராம்?

      இவர்கள் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் காசுக்கு! காசுக்கு!

      Delete
  2. எங்கள் அலுவலகத்தின் வேடிக்கைகளை நாள் பூராவும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

    வடக்கிலிருந்து புதுசாக தமிழ்நாட்டுக் கிளைக்கு வந்த மேனேஜரைப் பற்றி ஏனோ ஆரம்பத்திலிருந்து பலருக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் மானேஜர் பிரமாதமான புத்திசாலி. எங்கள் கம்பெனி நலனைப் பற்றித் தான் சர்வகாலமும் அவருக்கு நினைப்பு இருக்கும் என்பது அவரது பல நடவடிக்கைகளிலிருந்து எங்களுக்கு சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் அலுவலகத்தில் வேலை செய்யும் பலருக்கு ப்யூனிலிருந் செக்ஷன் மேனேஜர் வரை அவர் மேல் இனம்புரியாத ஒரு எரிச்சல்.

    தமிழ் நாட்டுக் கிளைக்கு மாற்றல் ஆகி வந்திருப்பதால் தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் தான் பேச வேண்டும் என்றில்லை. எங்கள் கிளை ஊழியர்கள் பலருக்கு ஹிந்தி தெரியாது. அந்த மொழி தெரியாது என்பதினாலேயே அதன் மேல் ஒரு எரிச்சல் வேறே பலருக்கு உள்ளூர உண்டு. கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆங்கிலத்தில் பேசினால் ஓரளவு புரியும். இந்த விஷயம் எல்லாம் தமிழ் நாட்டுக் கிளைக்கு அவர் மாற்றல் ஆகி வந்த நேரத்திலேயே அவருக்குத் தெரியும். இருந்தாலும் ஏனோ ஹிந்தியில் தான் மேனேஜர் பேச ஆரம்பிப்பார். அப்படிப்பட்ட மேனேஜர் திடீரென்று பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அது கண்டு எங்களுக்கு அவர் மேல் எங்களை அவர் மதிப்பது போல ஒரு நல்ல எண்ணம் ஏற்பட்டது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி எங்களுடன் பேசும் பொழுது, எப்பொழுது கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை, தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிரார். என்றைக்கு தான் பேசும் பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழை உபயோகப்படுத்தத் தொடங்கினாரோ அன்றையிலிருந்து அவரைப் பார்த்தால் எங்களுக்கும் அவருடன் ஏதாவது உரையாட வேண்டும் என்பது போலத் தோன்றும். இப்பொழுதெல்லாம், பாவம், கம்பெனி நலனுக்காக இரவும் பகலும் உழைக்கும் அவரைப் பார்த்தாலே எங்களுக்கு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. நாங்களும் அலுவலகத்தில் அரட்டை அடிக்காமல் அவரைப் போல உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    இதற்கு முன்னால் இருந்த மேனேஜரின் தவறான அலுவலக நடவடிக்கைகளை சீர் செய்வதற்கே இவருக்கு நேரம் போதவில்லை என்பது சிறிது சிறிதாக எங்களுக்குத் தெரிய வந்தது. ஒரு நாள் எல்லோரும் கூடி,
    'சார்! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு நீங்களே செய்ய வேண்டாம். எங்களாலும் உங்களின் பல வேலைகளில் சிலவற்றில் பங்கு கொள்ள முடியும், சார்! அதனால் அலுவலகம் நேரம் முடிந்தாலும் இன்னும் ஒரு மணி நேரம் கூட உட்கார்ந்து வேலை செய்கிறோம். அதற்கு எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள், சார்!' என்றோம்.

    ஏன் இப்படிச் சொன்னோம் என்று தெரியவில்லை. எங்கள் எல்லோருக்கும் தெரிந்த மொழியை அவரும் பேசுவதற்கு முயற்சி செய்ததால் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு மொழிக்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று எங்களுக்கு அன்றைக்குத் தான் தெரிந்தது.

    (தொடரும்)



    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள் ஜீவி சார்! :))

      Delete
    2. அடுத்த நாள் நடந்தது இன்னொரு ஆச்சரியம்.
      எங்கள் மானேஜர் வழக்கமாக தானே ஓட்டிக் கொண்டு வரும் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதும் மதிய டிபன், ப்ளாஸ்க்கில் காப்பி, கொஞ்சம் பிஸ்கட் போன்ற தன் சொந்த உடைமைகள் கொண்ட கேன்வாஸ் பையை தானே எடுத்து வந்து ஆபிஸூக்குள் நுழைவது தான் வழக்கம். அன்றைக்கு
      மேனேஜர் கார் உள்ளே நுழைந்ததுமே இத்தனை நாட்கள் கண்டும் காணாதது போல் இருக்கும் ஆபீஸ் பையன் பார்க்கிங்குக்கு ஓடிப்போய் மேனேஜரைப் பார்த்து வணக்கம் சொன்னான். உடைமைகளை வாங்கிக் கொண்டான். அந்த அளவுக்கு மேனேஜர் பேசிய ஓரிரண்டு தமிழ் வார்த்தைகள் அடிமட்டம் வரை பாய்ந்திருக்கிறது. இந்த மொழிக்கு-- தமிழ் நாட்டில் இருக்கும் சகலத்தையும் தீர்மானிக்கும் சக்திக்கு இருக்கும் வலிமையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

      ஆபீஸ் பையன் சொன்ன வணக்கம் வார்த்தையை மனசில் இருத்திக் கொண்டிருப்பார் போலும் இந்த புது மேனேஜர். அலுவலகத்தின் உள் பகுதிக்குள் நுழையும் பொழுதே 'வணக்கம்', 'வணக்கம்' என்று அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் அவர் நுழைந்த பொழுது அலுவலகத்தில் இருந்த அத்தனை பேரும் உருகித் தான் போனார்கள் என்று சொல்ல வேண்டும்.

      இதற்கு முன்னால் இருந்த மானேஜர்களும் 'வணக்கம்' சொல்லியே தங்கள் சொந்தக் காரியங்களை சாதித்துக் கொண்டார்கள் என்பது எங்கள் நினைவுக்கு வந்தது. இந்த மேனேஜரோ அலுவலக சுமூக நட்புக்கு வணக்கம் சொல்வது அலுவலக வேலைகளின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையாகத் தான் எங்களுக்குத் தென்பட்டது.

      அன்று மதியம் ஒரு சின்ன கூட்டத்திற்கு அலுவலக வரவேற்பு அறையில் ஏற்பாடு செய்திருந்தார் மேனேஜர். பிஸ்கட், டீ முடிந்ததும் அலுவலக வேலைகளின் நடுவே நமக்கு ஏற்படும் அலுப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தவர், இந்த அலுவலகத்திற்கு அவர் வருவதற்கு முன் இந்த கம்பெனியின் வெளி நாடுகளில் இருக்கும் கிளைகளுக்கு அவர் மேலதிகாரியாக விஜயம் செய்த சில சந்தர்ப்பங்களை விளக்கமாகச் சொன்னார்.

      அவர் அதையெல்லாம் சொன்ன பிறகு தான் இந்த மேனேஜர் தனது வெளினாட்ட்டு சுற்றுப்பயணங்களில் கம்பெனிக்காக எவ்வளவு சாதித்திருக்கிறார் என்று எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. பொதுவாக இந்த மாதிரி வெளிநாடுகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்க்ள் செல்வதை சுற்றுலா மாதிரியும், பொழுது போக்கு அமசமாகவும், இதனால் கம்பெனிக்கு எவ்வளவு செலவாகிறது என்று தான் எங்கள் மத்தியில் பேசிக் கொள்வோம். இப்பொழுது தான் இந்த மேனேஜர் எவ்வளவு பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அயல்நாடுகளில் எங்கள் தயாரிப்புகளின் விற்பனைக்கும், அன்னிய செலாவணியைக் கம்பெனிக்கு ஈட்டித் தருவதற்கும் எந்த அளவுக்கு செயலாற்றியிருக்கிறார் என்று தெரிந்தது.

      தன் சொந்தக் கியாதிகளைப் பற்றி சொல்லவே தெரியாத இந்த மேனேஜர் ஏதோ ஓரிரண்டு நிகழ்வுளைச் சொன்னதுமே எங்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்து விட்டார். இந்த மானேஜருக்கு கீழே இரண்டு உதவியாளர்கள் உண்டு. அவர்களாவது கம்பெனிக்காக இவர் வெளிநாடுகளில் என்னன்ன சாதித்திருக்கிறார் என்பதையாவது எங்களுக்குச் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாமலேயே இத்தனை நாட்கள் இந்தக் கம்பெனியில் பொழுதை ஓட்டியிருக்கிறோமே என்பதை நினைக்க நினைக்க எங்களுக்கு வெட்கமாகத் தான் இருந்தது.

      இந்த மேனேஜரின் செயலாற்றலைப் பார்த்ததும், ஆலோசனைகளாக எங்களுக்கு அவர் சொன்ன நல்ல விஷயங்களைக் கேட்டதும், என்றைக்கும் இந்த மானேஜரே எங்களுடன் இந்தக் கிளையில் பணியாற்ற மாட்டாரா என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டதை மனசார இப்பொழுது சொல்லத் தோன்றுகிறது.

      Delete
  3. //போட்டியாக ஏராளமான இதழ்கள் வெளிவந்தநிலையில் தராசு தன்னுடைய மவுசை இழந்தது// - இதன் பின்னணிக் காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா? ஷ்யாம் அவர்கள் தனக்கு வந்த தகவல்களை வைத்துப் பணமாக்கினார் என்றும், பிறகு அதனால் நம்பிக்கை இழந்த நிலையில் (இப்போ நக்கீரன் கதைதான்), பாமக பின்னணியாக வந்தபோது முற்றிலுமாக மவுசு இழந்தார். ஆனாலும் தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவரது கருத்துக்கள் ஓரளவு சிறப்பா இருக்கும். (ஜூவியின் சுதாங்கன் பற்றியும் அதே புகார்கள். பிறகு மதன் கையில் வந்தது)

    திமுகவின் 'உ.சூ' சின்னத்தில் நிறுத்தும் முடிவு அருமைதான். நல்ல செக் இருவருக்கும் (ஏனென்றால் வெற்றி பெற்ற நாள் முதலே யாரை ஆதரிப்பாங்க என்பது அவங்களுக்கே தெரியாது)

    ReplyDelete
    Replies
    1. இத்தனை தேர்தல் கடந்தும் சின்னத்தை வைத்து பாமர மக்களை ஏமாளிகளாக்குவது ஏற்புடையதாக இல்லை. வெற்றினா வெற்றிக்குப் பிறகு தான் சொந்தக் கனவுகள் தொடங்குகின்றன. அடுத்த கட்டம் கேபினட் இல்லேனாலும் ஸ்டேட் மினிஸ்டராவது ஆக வேண்டும். அதனால் தான் எந்தப் பக்கம் என்று தீர்மானிப்பதில் உதிரிக் கட்சிகளுக்கு இத்தனை குழப்பம். அந்தக் கனவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு இப்பொழுதே பேசித் தீர்த்துக் கொண்டு தான் முடிவுக்கு வருகிறார்கள்.

      Delete
    2. வாருங்கள் நெல்லைத்தமிழன்!

      தராசு மட்டுமல்ல, இங்கே investigative journalism என்பதே மிரட்டிக் காசுபறிக்கும் தொழிலாகவே வளர்ந்து இப்போது வதந்திகளை மட்டுமே செய்தியாக்குகிற இடத்துக்குப் போய்விட்டது.

      அப்புறம், அந்த ஒன் இந்தியா செய்தி எந்த அளவுக்கு நம்பகமானது என்று எழுதுகிறவரை கேள்விக்குறிதான்! ஜெயலலிதா போல துணிந்து இசுடாலின் முடிவெடுப்பாரா என்பதே நம்ப முடியாத வதந்தியாக அல்லவா இருக்கிறது!!

      Delete
    3. ஜீவி சார்!

      அவசர அவசியமாக தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதை திரு ஏ என் சிவராமன் எழுபதுகளில் எழுதிய கட்டுரைகளை முன்வைத்து அவ்வப்போது இங்கே பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பவன் நான்.

      அந்தநாட்களில் கருணாநிதி உருகோ உருகென்று உறுகிச் சொன்ன ஒரு வாக்கியம்: ஐயகோ! இன்னமும் கூட கழிப்பறைகளில் ஆண் பெண் படம் போட்டுத்தான் காட்டவேண்டிய அவலம் நீடிக்கிறதே!

      தேர்தல் சின்னங்களும் அப்படித்தான்!

      Delete
  4. ஊடகத்தில் நேர்மையாக இருப்பது கடினம். அவங்க அவங்க முதலாளிகளுக்கு இருக்கும் கன்ஸ்டிரைண்ட்ஸ் களோடு பயணிக்கணும். திமுகவைக் குடையக்கூடாது என்பது கொள்கைனா, அதற்கேற்ப கேள்விகள் இருக்கணும். பச்சமுத்து செய்திகள் வரக்கூடாதுன்னா, கண்டுகொள்ளக்கூடாது. தேர்தல் கணிப்புல, 5% அந்த பார்டிக்கு ஏத்திவிடணும்னா கமுக்கமாச் செய்யணும். இல்லாம, ஊடக நேர்மை என்றெல்லாம் ஆரம்பித்தால் காலம் தள்ளுவது கடினம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன்! அப்படிப் போடுங்க அருவாள! :)))
      ஊடக அறம் என்பது இற்றைய நாட்களில் காசுக்கு கூவுவது மட்டுமே!

      Delete
    2. எப்போது பணம் மட்டுமே பிரதானம். பணம் இருப்பவன் பகவானுக்கு சமம் என்று எல்லோருடைய value system மாறியதோ, அதற்கு ஏற்றாற்போலத்தானே எல்லாமே மாறும்?

      ஊடக வியாபாரிகள் / அரசியல் வாதிகள் .. எல்லோருடைய பார்வையும் பணத்தின் மீது மட்டுமே என்பது தெளிவு. அடிப்படையில் value system மாறாதவரை இதற்கு விடிவில்லை!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)