அண்டப்புளுகு! ஆகாசப்புளுகு! என்பதற்குப் பதில் இனிமேல் சீனப்புளுகு! பாகிஸ்தான் புளுகு! என்றே மாற்றி வைத்துக்கொள்ளலாம் போல!
முதலில் சீனப்புளுகு! இளநீர் குடித்தால் மார்பகம் பெருக்குமா? போலி விளம்பரம் செய்து மாட்டிக் கொண்ட சீன நிறுவனம்!
The Chinese beverage company which claimed its coconut milk would enlarge women's breasts has bowed to public pressure and replaced its offending advertising campaign with a more wholesome, less misleading, version.Xu Dongdong, a representative from Hainan Coconut Palm Group, also admitted to local media on Wednesday that his company's product did not have breast enlarging properties. என்கிறது இந்தச்செய்தி
அதுசரி! பாகிஸ்தானியப் புளுகு எப்படி இருக்கும்?
காஷ்மீர் அவந்திபோராவில் CRPF வாகனங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் (fedayeen) நடத்தியதற்குப் பிறகு பாகிஸ்தான் என்னென்ன மாய்மாலங்கள் செய்து கொண்டிருக்கிறது? dawn என்றொரு நாளிதழ். ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதில் இன்றைக்கு வந்திருக்கிற ஒரு கட்டுக்கதை!
படத்தில் இருப்பவர் ரெஹ்மான் மாலிக்! முந்தைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர். நேற்று வெள்ளிக்கிழமை, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தாக்குதலை நடத்தியதே இந்தியாவின் RAW உளவு அமைப்புதான் என்று ஒரேபோடாகப் போட்டிருக்கிறார். இதற்குமேல் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஆனால் இது பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கோ, இங்கே சோனியா காங்கிரசின் நவஜோத் சிங் சிதுவுக்கோ தெரியாது போல இருக்கிறதே! அவர்கள் வேறு மாதிரியல்லவா சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
Minister of Foreign Affairs Shah Mahmood Qureshi Exclusive Talk with Geo News in Munich Germany (15.02.19)
@SMQureshiPTI @erfaan_aftab #Pakistan #Germany #MSC2019
பொய் சொல்பவர்கள் பேசிவைத்துக்கொண்டு ஒரே மாதிரி பேசுவதில்லை. அதை வைத்தே பொய்யைக் கண்டுபிடித்துவிடலாம்!
ReplyDeleteலேட்டாகவந்து டயர் பங்சர் என்று காரணம் சொன்ன நான்கு பேர்களிடம் அவர்களை தனித்தனி அறைகளில் வைத்து ஒரே கேள்விதான் கேட்டார்களாம்! "எந்த டயர் பங்சர் ஆனது?"