புல்வாமா fedaayeen தற்கொலைத் தாக்குதல் இன்னும் சிலகாலத்துக்கு பேசுபொருளாக நீடிக்கும் போல! Most Favoured Nation அந்தஸ்து ரத்து, காஷ்மீரி பிரிவினை வாதிகளுக்கு, இன்று ஞாயிறு மாலையுடன் அரசுப் பாதுகாப்பு கிடையாது என்று ஒவ்வொன்றாக முடிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தேர்தல் நெருங்குகிற நேரத்தில் பாகிஸ்தானுடன் போரா? வந்தால் அது பிஜேபிக்கு சாதகமாகப்போய் விடுமே என்கிற பயம், இங்கே சில கட்சிகளுக்கு வந்திருப்பதையும் கூடப்பார்க்க முடிகிறது. நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் முஸ்லீம் லீக் கூட்டத்தில் திமுகவின் ஸ்டாலின் பேசியது கூட அந்த ரகத்தில் வருவதுதான்!
அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்று தனக்கே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறவர், அரசியல் நிலை பாட்டிலும் சரியாகத்தான் இருக்கிறாரா? அவருடைய அரசியல் ஞானம், செயல்பாடு எப்படி என்பதை இங்கே ஒரு 9 செகண்ட் வீடியோவிலேயே மதிப்பிட்டு விடலாம்!
நாசா என்று கூடங்குளம் நாட்களில் அருவருப்போடு அழைக்கப்பட்டவருடன் சேர்ந்து என்னமாய் ஒரு எகத்தாளச் சிரிப்பு? ஹிந்துக்கள் மதரீதியாக ஓட்டுப் போடுவதில்லை என்பதால் வருவதா இத்தகைய பேச்சு? அப்படியானால், அதையும் மாற்றிக் காட்டவேண்டிய நேரம் இது!
நாராயணசாமிக்கு ஆதரவு! சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு! மம்தா பானெர்ஜிக்கு ஆதரவு! அப்படியே ராவுல் பாபாவுக்கும் ஆதரவு! ஒரேவார்த்தையில் சொல்வதானால் ஊழலுக்கே முழு ஆதரவு! இதுதான் திமுக என்கிறபோது, இவர்களை நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்வதில் தயக்கமென்ன?
திமுக என்றாலே ஊழல்! திமுக நிச்சயம் வேண்டாம்!
புதுச்சேரி செய்தியை எழுதி இருப்பவர் மிகவும் சிக்கலான வார்த்தைகளில் செய்தியை மைத்திருக்கிறார் போலும். வாசிப்பவர் தடுமாறுகிறார்!
ReplyDeleteஆமாம் ஏன் இசுடாலின் நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?!
அவருடைய நெகட்டிவ் அரசியலைச் சொல்ல வேறென்ன வழி இருக்கிறது ஸ்ரீராம்?
Delete