Friday, September 6, 2019

காசுக்குக் கூவுகிற ஊடகங்களா? அல்லது கேவுகிற ஊடகங்களா?

காங்கிரசுடைய தலைவிதி சோனியா மற்றும் வாரிசுகளோடு மட்டுமல்ல, காங்கிரசின் பாக்கெட்டில் இருந்த, வாங்கிக் கொழுத்த மீடியாக்களிடமும் கிடந்து சீப்படுகிறதென்றால் காங்கிரசைத் தொடர்ந்து 21 வருடங்களாகக் கட்டியாளும் சோனியாGயுடைய தலைமையின் யோக்கியதை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? இந்தப்பக்கங்களிலும். Consent to be......nothing பக்கங்களிலும் தொடர்ந்து இதைச் சொல்கிற தருணங்களில் எதிர்ப்பும் கண்டனமும் காங்கிரஸ்காரனிடம் இருந்து கூட அதிகம் வந்து நான் பார்த்ததில்லை! காங்கிரசுக்கு பல்லக்குத் தூக்கியே பழக்கப்பட்ட வலது கம்யூனிஸ்ட் ஆசாமிகள்  அல்லது அவர்கள் நடத்துகிற தொழிற்சங்கப் பிடிமானம் உள்ளவர்களிடம் இருந்தே வருகிற வினோதத்தை என்னவென்று சொல்வது? அது போல ஒரு வீடியோ வினோதம் இது! இதில் பர்கா தத் காங்கிரஸ் தலைமையைச் சாடுகிறார், டூப்ளிகேட் காண்டிகள் ட்வீட்டரில் மெசேஜ் போடுவதற்கு மேல் எந்த அரசியலும் செய்யத் தெரியாதவர்களா என்று கோபப் படுகிறார்!  


சீனாதானாவுக்காக, DK சிவகுமாருக்காகக் காங்கிரஸ் தலைமை தெருவில் இறங்கிப் போராடியிருக்க வேண்டாமா என்று அம்மணி பொங்குகிறார். Barkha Dutt’s bizarre rant on P. Chidambaram being sent to Tihar என்று தலைப்பிட்டு opindia தளத்தில் ஆஷிஷ் சுக்லா எழுதியிருந்த ஒரு செய்திக்கட்டுரை வழியாகத்தான் இந்த வீடியோவைப் பிடித்தேன். ஆஷிஷ் சுக்லா எழுதுகிறார்: Chidambaram wears a smile which he could patent. It’s a benign, patronizing smile, never warm, only favour which he is bestowing to his audience. When he speaks, there is this cocked eyebrow judging you on your incompetence. He is that Pope of politics who is used to reverence from his audience.

In a sense, it’s a classic cloak borrowed off from the Nehru-Gandhis: A benevolent knight, God’s chosen one for his people, who must have his cake while the masses must revel in the crumbs. A blue-blooded Congressman never questions the scions; and never lets down the coterie and sycophants who must do his bidding. இது சீனாதானாவுடைய சிரித்த முகத்துக்குப் பின்னால் இருக்கும் போலித்தனத்தைப் பற்றிச் சொல்கிற அறிமுகம் என்றால்........


அடுத்து காங்கிரசுக்கு சலாம் போட்டு எழுதியே காசுபார்க்கிற ஊடகங்களைப் பற்றி கொஞ்சம்! I scanned the timeline of Shekhar Gupta, Rajdeep Sardesai, Sagarika Ghose etc on twitter and found nothing this morning. JUST NOTHING. The one of Barkha Dutt, though, was outrageous. She may have changed media affiliations faster than actors change clothes in a song sequence but her crooked logic is unimpaired. கொஞ்சம் சுவாரசியமான எழுத்து! இணைப்பில் முழுதுமாகப் படித்துப் பாருங்களேன்! 


சேகர் குப்தா! காசுக்காகக்  காங்கிரசுக்கு கூவுகிறவர் தான்! ஆனால் பர்கா தத் மாதிரி காசு கொடுத்தவன் தலைமேலேறி உபதேசம் செய்கிற அளவுக்கெல்லாம் இல்லை! கொஞ்சம் பூசி மெழுகி, பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் செய்தியை விற்பவர்! காங்கிரசுக்கு இருக்கும், மரணபயம் காட்டிவரும் குழப்பங்களைப் பற்றிக் கொஞ்சம் வகைப்படுத்திச் சொல்வதை கேளுங்களேன்! இவ்வளவு நீட்டி முழக்கி 14 நிமிட வீடியோவில் சொல்வதை மேலே உள்ள ஒரு படம் சுருங்கச் சொல்லி விடுகிறதுதான்!  ஆனாலும் கோனார் நோட்ஸ் இல்லை என்றால் நமக்குத்தான் எதுவும் புரியாதே! சேகர் குப்தா  நோட்சும் அந்த ரகம்தான்! (நேற்றைக்கு கோனார் உரை எழுதி பிரபலமான ஐயன் பெருமாள் கோனாருடைய பிறந்த நாள் என்பது தற்செயலாக நினைவுக்கு வரும் செய்தி)


விசாரணை, கைது நடவடிக்கை எல்லாமே அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைதான் என்ற ஒற்றை வாதம், ஊடகக் கூவல்கள் எத்தனை நாளைக்குச் செல்லுபடியாகும்? சீனாதானா சிவகுமார் என்று வரிசையாகத் தொடர்ந்தால் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி  இன்னபிற காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்கள் எவ்வளவுதான் தாக்குப் பிடிப்பார்கள்?  உங்களால் ஊகிக்க முடிகிறதா? மேலே வீடியோ 26 நிமிடம்.

                
அரசியல் பழிவாங்கல் எ!ன்று கூவிக்கூவியே அந்த விஷயம் சுத்தப்பேத்தல் என்றாகிவிட்டதே!!  இம்பூட்டு அறிவா ஒரு மகனைப் பெத்ததுக்கான விலையைத் தான் சீனாதானா கொடுத்துக் கொண்டு வருகிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை! 

மீண்டும் சந்திப்போம். 

       

2 comments:

  1. இம்பூட்டு அறிவு!?..

    புல்லரிக்குது போங்க!...

    ReplyDelete
    Replies
    1. புல்லரிச்சுப்போய்த்தான் சீனாதானா திஹார்ல குந்திக்கினு இருக்கார்! :-))))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)